பதுளையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது

மலையகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பதுளை மாவட்டம் பசறையில் நடைபெற்ற சுற்றிவளைப்பு சோதனை, தேடுதல் நடவடிக்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 20 இளைஞர்களில் ஒன்பது பேர் சுகாதார பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஸ் பிரதி காவல்துறை மா அதிபருடன் தொடர்பு கொண்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் பதுளை நகரம் மற்றும் பசறை ஆகிய இடங்களிலில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

வீடுகளிலும் வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன.

நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.