லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு வெளிநாட்டு சதி காரணம் : பாக்., அறிக்கை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் லாகூர் மாகாணத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வெளிநாட்டு சதி தான் காரணம் என அந்நாட்டு உளவு துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது .

கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் ந‌டத்தப்பட்டது . பயங்கரவாதிகள் தாக்குதலில் சிக்கி 6 இலங்கை வீரர்கள் படுகாயமடைந்தனர் . இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது . இந்நிலையில் இது குறித்து ஆய்வு நடத்திய பாக்., உயர்ம‌ட்ட குழு , ஆலோசனை அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. அறிக்கையின் அடிப்டையில் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா , பயங்கரவாத அமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு வெளிநாட்டு சதி த‌ான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தாக்குதல் நடந்ததற்கு பாதுகாப்பு ஏற்பாடு குறைபாடும் காரணம் என கூறியுள்ளது .

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.