‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (20.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் சிறீலங்கா படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆயுதப்பிரயோகம் என்பனவற்றுக்கு அஞ்சி வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள பலரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகக் குடும்பப் பெண்கள் இப்பாதிப்புக்கு அதிகம் உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் பலர் படையிரைக்கண்டால் அஞ்சுவது ஓடி ஒளிவது போன்ற அறிகுறிகளை தாம் அவதானித்துள்ளதாகவும் , அடிக்கொரு தடைவை அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை தேடிப்பார்த்து வைத்துக் கொள்ளல் என்பன இவர்களின் அறிகுறிகளில் சில எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு உரிய சிகிச்சை ஆரம்பத்திலே வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் பூரண நேயாளி அகாது தடுக்கலாம் என்றும் இல்லாதுவிடின் அதிகளவானவர்கள் வரும் காலத்தில் மனநோயாளியாக வாய்ப்புள்ளதாகவுமு் அவர் தொவித்துள்ளார்.
சிறீலங்கா படையினரின் கட்டுப்பாடுகளால் அவர்களுக்கான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும், இது பற்றி உரிய நிறுவனங்கள் மனிதாபிமானப் பணியாளர்கள் கவனம் எடுக்காதுவிடின் இன்னும் பாதிப்பு அதிகமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைத்துலக நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் மக்களின் போராட்டங்களில் தமிழீழ தேசியக் கொடி தாங்கிச் செல்லப்படுவது தொடர்பாக தனது அதிருப்தியை எல்லா நடுகளிடமும் தெரிவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளதாவது :
அனைத்துலக நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் மக்களின் போராட்டங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாங்கிச் செல்லப்படுவது தொடர்பாக அரசாங்கம் தனது அதிருப்தியை எல்லா நாடுகளிடமும் அந்த அந்த நாட்டு தூதரகங்களின் ஊடாக தெரிவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .
இது தொடர்பான பேச்சுக்களை அந்த அந்த நாடுகளுடன் மேற்கொள்வதற்கான உத்தரவுகள் தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கனடா, பெல்ஜியம் மற்றும் சுவிஸ் நாடுகளில் தமிழீழத் தேசியக் கொடி வெளிப்படையாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இது தொடருமானால் அவர்களுக்கு மேலும் ஆதரவுகள் ஏற்படலாம்; எனவே நாம் இதனை விரைவில் தடுக்க வேண்டும் என்றார்சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன
!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் அவர்களின் கொடிகளை தாங்கிச்செல்வது சட்டபூர்வமானது என கனடா நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளதாக கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்துமாறு கோரி கனடாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போராட்டங்களில் அண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் விடுதலைப் புலிகளின் கொடிகளை வெளிப்படையாக அசைத்து தமது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.
அங்கு தனிநாடு கோரி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி அதுவாகும் .
இதனைத்தொடர்ந்து, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடிகளை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானதா என ஆராயப்பட்டது.
ஆனால், அது சட்டவிரோதமற்றது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர் என காவல்துறை பேச்சாளர் மார்க் போகேஷ் தெரிவித்துள்ளார்.
எமது வழக்கறிஞர்களிடம் இருந்து நாம் ஆலோசனைகளை பெற்றுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பகுதிக்கு கடந்த இரு வாரத்தில் மாத்திரம் ஆயிரம் மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. வன்னிப் பகுதிக்கு அனுப்பப்படும் பொருட்களில் ஒரு பகுதியினை புலிகள் எடுத்துக் கொள்கின்றனர். அது எமக்கு தெரியும் . ஆனால், அதற்காக உணவு அனுப்புவதை நிறுத்த முடியாது. இந்த உண்மையினை நாம் வெளிப்படையாகவே கூறுகின்றோம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன தெரிவித்தார். அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களை குடியமர்த்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம். வன்னிப் பகுதிக்கான உணவு விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவது தொடர்பில் .நா. நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் குறை கூறுகின்றன. வெளியாரை திருப்தி படுத்தும் தேவை எமக்கில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடக்கே மோதல்களில் சிக்கியுள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முகமாக செஞ்சிலுவை சங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் 3 மில்லியன் யூரோக்களை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் பாரிய மனிதாபிமான அவலம் நிலவுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் சிக்கி நாளாந்தம் உயிரிழந்த வண்ணமுள்ளனர்.எறிகணை தக்குதல்களால் மட்டும் அவர்கள் உயிரிழக்கவில்லை போதிய உணவு , நீர் இன்றியும், மருத்துவ உதவியின்றியும் உயிரிழக்கின்றனர்ரென ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி தொடர்பான ஆணையாளர் லூயிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார். மோதல் பிரதேசங்களில் சிறிய அளவு மனிதாபிமான உதவிகளே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே அம்மக்களை பாதுகாக்கவும், மனித அவலங்களை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அர்சாங்கம் மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாக்க எறிகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அத்துடன் மனிதாபிமான உதவிகளையும் , போதுமான உணவு, மருந்துகளை அம்மகளிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.” எனவும் லூயிஸ் மைக்கேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போது பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் அதனை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு உபதேசம் வழங்கும் உலக நாடுகள், விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டும் ஏன் பேசுவதில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

வடக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயக உரிமையை நிலைநாட்டி அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுடன் பேசுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதிய திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவõறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது நிரந்தர சேவையிலிருக்கும் படையினரும் சரி தொண்டர் படையினரும் சரி ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பல வெற்றிகளை ஈட்டித் தந்துள்ளனர். இதற்கு நாம் அனைவரும் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.

இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு என்பதால் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது . ஒரு குறுகிய நிலப்பரப்புக்கள் சிக்குண்டிருக்கும் பயங்கரவாதிகள் வெகுவிரைவில் ஒழித்துக் கட்டப்பட்டு விடுவர்.

பயங்கரவாதத்துக்கு மனிதாபிமானம் கிடையாது. நல்லது கெட்டதும் தெரியாது . விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வருகின்ற பொது மக்கள் மீது புலிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றது. உலக நாடுகள் ஏன் இதுகுறித்து பேசுவதில்லை. இந்த செயற்பாடுகள் மனித உரிமை மீறல் இல்லையா? என்பதே எமது கேள்வியாக உள்ளது.

பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகள் எமக்கு உபதேசம் செய்கின்றன. உபதேசம் செய்வது மிகவும் இலகுவான விடயம்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இயலுமானவரை பொது மக்களுக்கõ இழப்புக்களை குறைத்தே எமது படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இழப்புகளுடன் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் இந்த நேரம் நடவடிக்கைகள் நிறைவடைந்திருக்கும். மனிதாபிமானமற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றால் இரண்டே தினங்களில் அவற்றை முடித்திருக்க முடியும். ஆனால், பொது மக்களின் இழப்புக்களை குறைத்துக்கொள்வதே எமது நோக்கமாகும்.

அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் வடக்கில் பொது மக்களுக்குரிய உரிமைகளை வழங்கி அங்கு ஜனநாயகம் நிலை நாட்டப்படும். அத்துடன் வடக்கு மக்கள் அவர்களது பிரதிநிதிகளை தாமாகவே தெரிவு செய்வர். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். அதனை விடுத்து ஒருவர் வந்து நான் தான் அந்த மக்களின் பிரதிநிதியென கூறுவதை ஏற்க முடியாது .

எனவே உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை வியூகங்கள் ஊடாக அந்த மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் . அவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுடன் எமக்கு பேச முடியும் . அதற்காகவே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனினும் அதற்கு முன்னதாக பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டி மாகாண மற்றும் மாவட்ட வேறுபாடின்றி முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையிலான அபிவிருத்திக்கு செல்ல வேண்டும். இதற்கு மக்களின் பங்களிப்பையும் பெற வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும்
!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மீது விடுதலைப்புலிகள் இனம் காணப்படாத புதிய வகை ஆயுதங்கள் கொண்டு தாக்குவதாக, சிறீலங்கா படைத்தரப்பு கூறுகின்றது .
படை நடவடிக்கையில் ஈடுபட்டு்ள்ள 11ஆம் காலாற் படை இதனால் கடும் சேதத்தினை சந்தித்துள்ளதாகவும், இவ் ஆயுதங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதால், அவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் தாயாரிக்கப்பட்டவையாக அல்லத நவீனப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
முன்னர் அனுராதபுரம் வானூர்தித்தளம் மீது விடுதலைப்புலிகள் தாக்கியபோது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல வெளிநாட்டு படையதிகாரிகளால் கூட அடையாளம் காணமுடியாதவை என சிறீலங்கா அரசும் படைகளும் திண்டாடியமை சுட்டிக்காட்டத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிக் களமுனையில் கடந்த நாட்களாக நடந்துவரும் மோதலில் படுகாயமுற்ற படையினர் கடந்த இரவு முழுவதும் படை உலங்கு வானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கரையோரப்பகுதியூடாக உலங்கு வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ள இவர்கள் இன்று அதிகாலைவரை இரத்மலானையில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார் .
கடந்த சில நாட்கள் மோதலில் சிறீலங்கா படையினருக்கு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள நிலையில், சிறீலங்கா படையினர் தமது இழப்புக்களை மறைப்பதற்காக இவ்வாறு இரவிரவாக படுகாயமடைந்த படையினரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் விடுதலை புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினால் புலிகள் பாரியளவில் பலமடைந்துள்ளதாக அரசாங்கம் திடமாக நம்புகின்றது . போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் புலிகள் எமது இராணுவ புலனாய்வாளர்களை கொலை செய்தனர். அதிகளவில் ஆயுதங்களை சேகரித்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களை படையில் புலிகள் பலவந்தமாக இணைத்துக்கொண்டுள்ளனர் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசியல் தீர்வை முன்வைப்பது மிக முக்கியமான விடயம் என்பதனை அரசாங்கம் உணர்கின்றது. ஆனால் அவை அனைத்துக்கும் முன்னர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். புலிகள் சிங்கள தலைவர்கள் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் தலைவர்களையும் öõகலை செய்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார் . அவர் அங்கு மேலும் கூறுகையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.இதன் விளைவ õ புலிகள் பாரியளவில் வளர்ச்சியடைந்தனர். ஆனால் எமது இராணுவம் பலப்படுத்தப்படவில்லை .

போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் மில்லேனியம் சிட்டி விவகாரம் ஏற்பட்டது. எமது ஆறு புலனாய்வாளர்கள் கண்காட்சி படுத்தப்பட்டனர். கண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். மேஜர் முத்தாலிப் உள்ளிட்ட பல புலனாய்வாளர்கள் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்தின் பின்னர் கொழும்புக்குள் மட்டும் 50 புலனாய்வாளர்கள் கொலை செய்யப்பட்டனர். மொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். புலனாய்வு சேவையில் இல்லாதவர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க போர்நிறுத்த உடன்படிக்கையை எதிர்க்கவில்லையே என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் அதனை அவரிடமே கேட்டுக்கொள்ளுமாறு கூறிவிட்டார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கில் அண்மைய நாட்களிலும் சிறுவர்கள் பலர் துணைப்படைக் குழுக்களால் கடத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
கிழக்கில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலர் கடத்தப்பட்டுள்ளதாகக்கூறும் யுனிசெப் , அவர்களின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்றையும் வெளியிட்டு்ள்ளது.
மட்டக்களப்பின் பல இடங்களில் ஆயுதம் தரித்தவர்களினால் அவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்கள் இவ் கடத்தலுடன் சம்பந்தப்பட்டு்ள்ளதாகவும் யுனிசெவ் பிரதிநிதிகள் நடாத்திய பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றில் பெயர் விபரங்களுடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள கிழக்கின் ஆயுதக்குழு ஒன்றின் உறுப்பினர் அசாத் மெளலானா, தமக்கும் இவ் கடத்தலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தாம் ஏற்கனவே யுனிசெப்புடன் செய்துள்ள இணக்கப்பாட்டின் படி சிறுவர்களை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
எனினும் அவ் ஆயுதக்குழு 13 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் சிலரை மாத்திரமே விடுவித்துள்ளதுடன் ஏனையவர்கள் பற்றி இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை எனவும் அண்மையில் ஆயுதங்கள் கையளிப்பதாக கூறி சில ஆயுதங்கள் கையளிக்கப்பட்ட போதும்கூட ஏனைய சிறுவர்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் சிறுவர்களை இழந்துள்ள பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்காஅரசு தான் இணைத்து வைத்துள்ள இவ் ஆயுதக்குழுக்களின் இவ்வாறான செயல்ப்பாடுகளில் இருந்து தப்புவதற்கு உலகினை ஏமாற்ற சிறுவர்களை ஆயுத மோதலில் இருந்து பாகுகாப்போம் என்னும் அமைப்பை நிறுவி சர்வதேசத்தனை ஏமாற்றி வருகின்றதாகவும் பெற்றோர் கோபம் வெளியிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறீலங்காவில் முதலிட்டுள்ள பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை முடித்துக் கொண்டு சிறீலங்காவை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பாரிய பொருண்மிய நெருக்கடி மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சிறீலங்கா பொருள்கள், சேவைகள் புறக்கணிப்பு பற்றிய அறிவிப்பு என்பன பல ஏற்றுமதித் தொழிலில் பாரிய சரிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்கள் தமது முதுலீடுகளை முடித்து விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.
இது பற்றி யேர்மனியைச் சேர்ந்த கடலுணவு பதனிடும் தொழில் முதலீட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தொடர் பங்கு சரிவாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவாலும் சிறீலங்காவின் பொருண்மியம் பெரும் இக்கட்டில் உள்ளதாகவும் சிறீலங்கா தனது நெருக்கடிகளை மூடி மறைத்து போரில் அக்கறை காட்டுவது மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
சிறீலற்காவின் வைப்பக அதிகாரி ஒருவர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், சிறீலங்கா குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கி வைப்புக் கொண்டுள்ளவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் சட்டம் ஒன்றினை கொண்டு வருவதற்று ஆராய்வதாகவும், இது பற்றி முடிவு உடன்பாட்டை எட்டாதவிடத்து அவர்கள் பணத்தினை வட்டியற்ற முதலீடாக்க உள்ளதாகவும் இதனால் வெளிநாட்டில் இருந்து முதலிட்டுள்ளவர்கள் கடும் நட்டம் அடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
காரணம் சிறீலங்கா கடந்த வருடங்களில் பெற்ற மொத்த கடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். இதில் பல தனியார் வங்கிகளும் கடன் வழங்குனரும் அடங்கும். இவ் கடன் தொகை சிறீலங்காவின் வருட உள்நாட்டு வருமானத்தின் பல மடங்கு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் வலிகாமம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார் .
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யோகலிங்கம் ஜெயசாந்தன் என்னும் 29 அகவை உடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் முறையிட்டுள்ளனர்.
வெளிநாடு செல்வதாற்கான ஏற்பாடுகள் செய்ய கொழும்பு சென்று தங்கியிருந்த வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாயை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கொழும்பில் காணாமல் போயிருந்தமை மற்றும் வெள்ளவத்தையில் ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கப்பம் பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
!!!!!!!!!!!!!!
மன்னாரில் இருந்து வவுனியாவரை கிறிஸ்தவ மக்கள் சமாதானம் வேண்டி பாத யாத்திரை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மன்னாரில் இருந்து மன்னார் குரு முதல்வர் விக்ரஸ் சூசை தலைமையில் திரண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமைதியான பாத யாத்திரையை மேற்கொண்டு வவுனியா பூவரசன்குளத்தில் உள்ள கல்வாரியை நோக்கி பயணமானார்கள்.
வன்னிப் பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதியிலும் தொடரும் யுத்தத்தினாலும் மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு அமைதி வேண்டியும் நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டியும் இவ் பாத யாத்திரையை தாம் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்னர்.
பலமுறை நாட்டின் சமாதானம் வேண்டி சிறீலங்கா அரசுக்கு சமாதான விண்ணப்பம் செய்துள்ள போதிலும் அவர்கள் அதை செவிமடுக்காததால் தாங்கள் இறைவனிடம் முறையிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்னர்.
இது பற்றி பாதிரியார் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் வன்னியில் படையினரது எறிகணையால் படுகாயமடைந்து வரும் ஒரு சிலரை சந்தித்ததாகவும், படையினரும் தாக்குதலால் அவர்கள் பட்டு வந்த துயரை கேட்டபோது தன்னால் தாங்க முடியவில்லை எனவும், தொடரும் குண்டு மழைக்கு மத்தியில் உள்ள ஏனையவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கவே தான் இதில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகிய போதிலும் சீனா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால் அந்த வாய்ப்பு அனேகமாக அடிபட்டுப் போய்விட்டதாக நேற்றிரவு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
ஆஸ்திரியா, மெக்சிக்கோ, கொஸ்ராறிக்கா உட்பட பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத பல நாடுகள் இலங்கை விவகாரத்தை மீண்டும் பாதுகாப்புச் சபையில் ஆராய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
“மற்றும் அலுவல்கள்” என்ற தலைப்பில் இலங்கை விவகாரத்தை கவனயீர்ப்பு விடயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான முன் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் அதற்கு முன்னோடியாகமற்றும் அலுவல்கள்என்ற அட்டவணையில் சேர்ப்பதற்கு மற்றும் பல நாடுகளும் ஆதரிக்க விருப்பம் தெரிவித்திருந்தன என்று அறியப்படுகிறது.
ஆனால், இலங்கையில் சிவிலியன்கள் சம்பந்தப்பட்ட நிலைமை குறித்து ஆராய்வதை மிகக் கடுமையாகத் தான் எதிர்ப்பதாக சீனா அறிவித்திக்கிறது. “இலங்கையில் நடைபெறுவது வெறும் உள்நாட்டு விடயம்அதனால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை . எனவே அந்த நாட்டின் விவகாரத்தை பாதுகாப்புச் சபையில் எந்த வடிவத்திலும் ஆராயவேண்டியதில்லை என்று சீனா நேற்றுக் கருத்து வெளியிட்டது.
இதே வாதத்தை முன்வைக்குமாறு பாதுகாப்புக் கவுன்ஸிலில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய நாடுகளிடம் .நாவில் உள்ள இலங்கை அதிகாரிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர் .
எனினும் இது விடயத்தில் ஏனைய நிரந்தர அங்கத்தவர்களின் நிலையைப் பொறுத்தே தீர்க்கமான முடிவு இன்று 20 ஆம் திகதி தெரிய வரும் என்று கூறப்பட்டத
!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது 2,863 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளை ஜெனீவாவில் உள்ள
தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தப் புள்ளி விபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .
இந்த பொய்யான அறிக்கையின் பிரதியொன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை இலங்கைக் கிளையில் தயாரிக்கப்பட்டதென ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தியல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களின் நிலைமை கடந்த மாதத்தைவிட மோசமடைந்துள்ளது எனப் புதுடில்லி கருதுகிறது என்று இந்தியாவின் செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது .
புதுடில்லி இவ்வாறு கருதுவதற்கு புல்மோட்டையில் தமது பணிகளை ஆரம் பித்துள்ள மருத்துவர்களின் மதிப்பீடுகளும் காரணமாக அமைந்துள்ளன என்றும் அந்த இணை யத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிபிடப்பட்டுள்ளவை வருமாறு:
திருகோணமலை புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவமனைக்கு
கடந்த வெள்ளிக்கிழமை 140 தமிழ் பொதுமக்கள் கொண்டுவரப்பட் டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உட னடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நிலை காணப்பட்டது.
இந்நிலையில் இதற்கென தற்போதுள்ளதைவிட அதிக எண்ணிக்கையான மருத்துவர்கள் , பணியாளர்கள் தேவையென இந்தியா கருதுகின்றது.

பொதுமக்களின் நிலை ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இருந்தமையை விட மிகவும் மோசமடைந்துள்ளது எனப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு வலயத்தை இரண்டு சாராரும் மதிக்கவில்லை
மோதல் நடைபெறும் பகுதிகளில் காணப்படும் மனிதாபிமான நிலை குறித்து இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பாதுகாப்பு வலயத்தை மதிக்க வேண்டும். எனினும் எவரும் இதனைச் செய்வதில்லை என இந்தியா மதிப்பிட்டுள்ளது .

மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மேலும் அதிகளவான உணவை அனுமதிக்குமாறு புதுடில்லி கொழும்பை வலியுறுத்தி வருகின்றது.
மேலும் அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் போதிய முன்னேற்றமின்மை குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்தியா எதிர்பார்த்ததை விட அரசியல் தீர்வுப் பொதியை வைப்பதற்கு அதிக காலம் பிடிக்கிறது என்ற கருத்தும் புதுடில்லியில் காணப்படுகின்றது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் அரசு சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி. இந்தப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தியது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஒய்வூதிய சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி . எம்.பி. பேமசிறி மானகே மேலும் கூறியதாவது;
அரசு தமிழருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கப் போகின்றது. இதுதொடர்பாக ஜனாதிபதியே சர்வதேச செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் சென்று கொண்டிருக்கின்றது.
யுத்தத்தில் படையினர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மக்கள் பெரும் சுமைகளை சுமந்து கொண்டிருக்கின்றார்கள். படையினரும் தமது உயிர்களை தியாகம் செய்து நாட்டின் இறைமையை காக்க போராடுகின்றனர்.
புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு மக்களின் ஆதரவைக் கோரும் அரசு அந்த மக்களின் இடுப்புப்பட்டிகளை இறுகக்கட்டுமாறு கோருகின்றது. இந்த நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் மக்களும் சுமைகளை சுமக்கின்றனர். ஆனால், அரசோ இதனைப் பயன்படுத்தி சுக போகங்களை அனுபவிக்கின்றது .
அதிகாரத்தை பகிர்தல், ஈழத்தை உருவாக்குதல் போன்ற அரசின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் . இதனை அனுமதிக்க முடியாது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சீராக செயற்பட்டாலே நாடு ஒழுங்காக இருக்கும் . ஆனால், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிகள் திருப்திகரமாக இல்லை. பல குளறுபடிகள், ஊழல்கள் காணப்படுகின்றன.
படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகள் ஒய்வூதிய சட்டமூல திருத்தத்தை நாம் வரவேற்கின்றோம் . இதற்காக நாம் முன்பி ருந்தே போராடி வருகின்றோம். அது தற்போது தான் கைகூடி வந்துள்ளது.
இதேபோன்று, ஆசிரியர் ஒய்வூதிய திட்டம் தொடர்பிலும் திருத்தங்கள் செய்யப்படவேண்டும். vd ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே njuptpj;jhh;
!!!!!!!!!!!!!!!!!!!!
அக்குரஸ்ஸ கொடபிட்டிய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் மாத்தறையில் பிச்சை எடுத்துவரும் 13 வயது சிறுவனிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் .
குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட நபரின் புகைப்படத்தை பத்திரிகையில் தான் பார்த்ததாகவும் அவர் மாத்தறையில் பிச்சைக்காரர் தங்கும் சிறிய மதுரைக் கட்டிடத்தில் தங்கியிருந்தார் எனவும் அச்சிறுவன் கூறியுள்ளான் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபர் தனது பெயரை சமன் என்று கூறினார். ஒரு மாதத்துக்கு முன்னர் அங்கு வந்து தங்கியிருந்தார். அவர் சிங்களத்தில் உரையாடுவார்.
மாத்தறையில் படையினர் பயிற்சி செய்வதையும், மாத்தறை மகாநாமப் பாலத்தையும் அவர் அடிக்கடி பார்த்துவந்தார். அவருக்குப் புஷ்பகுமார் என்ற நண்பர் ஒருவர் உதவி வந்தார். இருவரும் சிங்களத்தில் உரையாடுவார்கள்.
இருவரின் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்தபோது அவர்களில் சந்தேகம் ஏற்பட்டது. வெலிகம பகுதிக்குப் பிச்சை எடுக்க இருவரும் போனபோது நானும் அவர்களுடன் போனேன்.
ஆனால் வெலிகம பொலிஸார் அதனைப் பொருட்படுத்தாமல் எம்மைப் போகும்படி கூறிவிட்டனர்.
அவர்கள் இருவரும் வெலிகம பகுதிக்கு பிச்சை எடுக்க வந்தபோது நானும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தேன்.
வீட்டில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு இங்கு வந்து பிச்சை எடுத்து வாழ்கின்றேன் எனவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளான்.
விசாரணையின் பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.
வெலிகம பொலிஸாரிடம் இருவரையும் பற்றி நான் கூறியபோது, பொலிஸார் அதனை நம்பவில்லை . என்னைப் போகும்படி பேசினார்கள்.
வீட்டில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வந்து மூன்று மாதங்களாக மாத்தறையில் தங்கியிருந்து பிச்சை எடுத்து சீவிக்கின்றேன் எனவும் அச்சிறுவன் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர் .
விசாரணையின் பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.நா.: “நாங்கள் சடலங்களை எண்ணுவதில்லைஎன்று இலங்கை தொடர்பாக .நா . கருத்து தெரிவித்திருந்ததன் பின்னர் அதன் சுயவிருப்பத்துக்கு மாறாக 20 ஜனவரி 2009 இலிருந்து 7 மார்ச் 2009 வரையிலான பொது மக்கள் இழப்புக்களின் எண்ணிக்கை தொடர்பான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகத்தின் ஆவண விபரம்கசிந்துவிட்டதாகவும் அந்த விபரம் தமக்கு கிடைத்திருப்பதாகவும் ஜெனீவாவிலுள்ள இன்னர்சிற்றிபிரஸ் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகத்தின் உயர் அதிகாரி ஜோன் ஹோம்ஸ் மற்றும் .நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் போன்ற குரல் தரவல்லவர்கள் திரும்பத் திரும்ப .நா. விடம் இழப்புகள் எண்ணிக்கை தொடர்பான விபரம் எதுவும் தம்மிடம் இல்லையென மறுத்து வந்துள்ளனர். ஆனால், விமர்சனத்திற்கு பாதுகாப்பதற்காக இலங்கை தொடர்பான புள்ளி விபரங்களை .நா. வெளியிடாமல் வைத்திருப்பதாக தோன்றுவதாக இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
பெப்ரவரி 17 இல் பான் கி மூனின் பேச்சாளர் மிச் சேல் மொன் ராஸிடம் பொது மக்கள் இழப்புகள் அதிகமா அல்லது 1200 இற்கும் குறைவானதா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. ” நாங்கள் பொது மக்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் . உடல்களை எண்ணுவதில்லைஎன்று மொன்ராஸ் பதிலளித்திருந்தார்.
மார்ச் 17 இல் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகத்திடமிருந்து இறப்புகள் விபரம் தொடர்பான விபரத்தை பெற்றிருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் மனிதாபிமான விவகார ஒத்துழைப்பு அலுவலகத்துடன் நெருக்கமாக பணிபுரியும் ஐரோப்பிய நாடொன்றின் தூதுவருக்கு தெரிவித்ததுடன் இது தொடர்பாக இலங்கை தொடர்பாக இரு தடவை இடம்பெற்ற சந்திப்புகளின்போது ஹோம்ஸ் விபரங்களை வெளியிட்டாரா என்று கேட்கப்பட்டபோது, “எண்ணிக்கையானவை சர்ச்சைக்குரியவை என்பது யாவருக்கும் தெரியும்என்று அத்தூதுவர் கூறியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 1 இலட்சத்து 90 ஆயிரம் வரையென்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருப்பதை .நா. ஆவணப்படுத்தியுள்ளது. ஆயினும், இலங்கை அரசின் புள்ளி விபரமான 70 ஆயிரம் பேர் முல்லைத்தீவில் இடம்பெயர்ந்திருப்பதாக .நா. கூறியுள்ளது.
மோதல் பகுதியில் மருந்துகள் பற்றாக்குறையால் 500 பேர் வரை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து .நா.வின் பதில் என்ன என்று பான் கி மூனின் பிரதிப் பேச்சாளர் மேரி ஒகாபேயிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. .நா . வோ விசேட நிறுவனங்களோ அல்லது மனிதாபிமான விவகார ஒத்துழைப்பு அலுவலகமோ இதனை அறியுமா? என்று கேட்கப்பட்டது. அத்துடன் போர் குற்றங்கள் தொடர்பாக அரசையும் புலிகளையும் தொடர்புபடுத்தி .நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டால் கொழும்பிலுள்ள .நா. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தேசிய சுதந்திர முன்னணி விடுத்திருக்கும் எச்சரிக்கை குறித்து தெரியுமா ? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
“இலங்கை தொடர்பாக நான் எதனை கூற முடியும். அங்கு பாதிக்கப்பட்டோருக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் தம்மால் முடிந்த வரை உதவி வழங்க முயன்றுகொண்டிருக்கின்றனர். இலங்கை ஜனாதிபதியுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் கலந்துரையாடியுள்ளார். அந்த உரையாடலின்போது பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக கவலையை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக வன்னியில் சிக்கியுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக’ அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்று பிரதிப் பேச்சாளர் ஒகாபே கூறியுள்ளார்.
மறு பக்கத்திலிருந்து ஏதாவது உறுதிமொழி அளிக்கப்பட்டதா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.
தனது ஒத்துழைப்பை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்பதே நான் புரிந்து கொண்ட விடயமாகும் . ஆனால் பொது மக்கள் தொடர்பாகவே தீவிர கரிசனையை செயலாளர் நாயகம் வெளிப்படுத்தியிருந்தார் என்று ஒகாபே கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரி அளித்த குற்றஒப்புதல் வாக்குமூலம் எதிரியினால் சுயாதீனமாக அச்சுறுத்தல் எதுவுமின்றி வழங்கப்பட்டது என்பதை வழக்குத் தொடருநர் நிரூபிக்கத்தவறிவிட்டார் என்று கூறி எதிரியை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம் . இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
கடந்த புதன்கிழமை இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. 1.1.2000 க்கும் 10.10.2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளரான முகமது லத்தீப் பைதுல்லாவை கொல்லும் நோக்கில் வந்த தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணுக்கு சைகை மூலமும் வேறு வகையிலும் உதவி புரிந்ததாகஎல்.ரி.ரி..தமிழன்என்றபேரால் அழைக்கப்படும் காளிராசா இளையராசா என்பவர் மீது பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியிருந்த வழக்கு திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது
அரச வழக்கறிஞர் செல்வி சுகந்தி கந்தசாமி வழக்கை நெறிப்படுத்தினார்.எதிரி பொலிஸாருக்கு வழங்கிய குற்றஒப்புதல் வாக்குமூலத்திலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எதிரி தனது விருப்பத்தில் சுதந்திரமாக எதுவித அச்சுறுத்தலுமின்றி தூண்டுதல் இன்றி குற்றஒப்புதல் வாக்கமூலத்தைப் பொலிஸாருக்கு வழங்கவில்லை என்று எதிரிதரப்பு சட்டத்தரணி மன்றுக்குச் சமர்ப்பித்திருந்தார்.
அதனை அடுத்து மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குற்றஒப்புதல் வாக்குமூலம் எதிரியிடமிருந்து முறையாகப் பெறப்பட்டதா என்பது பற்றிய (வொயர்டயர்) உண்மை விளம்பல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.எதிரி சாட்சியமளிக்கையில் தன் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும் தான் சுதந்திரமாக தான் விருப்பப்படி குற்றஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.உண்மை விளம்பல் விசாரணை முடிவில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது; வைத்திய அறிக்கையின்படி எதிரியின் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதை எண்பிக்கும் வகையில் காயங்கள் காணப்பட்டன. இந்தச் சூழலில் எதிரி சுதந்திரமாக சுயாதீனமாக குற்றஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
எதிரி தமிழில் வாக்குமூலமளித்ததாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிங்களத்தில் தட்டச்சு செய்யப்பட்டது என்றும் சாட்சியளிக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் மொழிபெயர்த்த பொலிஸ் அதிகாரிக்கு சிங்களத்தில் மொழி பெயர்க்கும் தகைமை இருந்ததா என்பது நிரூபிக்கப்படவில்லை.அப்படிப்பட்டவரின் மொழிபெயர்ப்பை மட்டும் வைத்து குற்றஒப்புதல் வாக்குமூலம் சரியாகப்பதிவு செய்யப்பட்டது என்று கூறமுடியாது.எதுவித தகுதியும் தகைமையும் இல்லாத ஒருவரை மொழிபெயர்ப்பாளராக ஏற்றுக்கொள்வதற்குச் சட்டத்தில் இடமில்லை. எதிரி தமிழ்மொழியில் வழங்கியதாகக்கூறப்படும் குற்றஒப்புதல் வாக்குமூலத்தை தமிழ்மொழியில் பதிவு செய்திருக்கலாம்.எதிரி தமிழ் மொழிபேசுபவர். அவருக்குச் சிங்கள மொழிதெரியாது. எதிரியின் வாக்குமூலத்தை பதிவுசெய்த உதவிபொலிஸ் அதிபர் சிங்களம் பேசுபவர். அவருக்கு தமிழ்மொழி தெரியாது. எனவே மொத்தமாக வழக்கு மொழிப்பெயர்ப்பாளரை நம்பி முடிவுஎடுக்க வேண்டும். இச்சூழ்நிலையில் மொழிபெயர்ப்பாளர் சிங்களத்தில் மொழிபெயர்க்க தகைமையற்றவராக காணப்படுகிறார்.
“” வடக்குகிழக்கு நீதிமன்றங்களின் நிர்வாகமொழியாக தமிழ் மொழிஇருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழரான எதிரியிடம் கிழக்குப் பிரதேசமான திருகோணமலையில் சிங்கள மொழியல் குற்றஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யவேண்டிய தேவையில்லை.சிங்கள மொழியில் பதிவு செய்யப்படவேண்டுமானால் தகுந்த தகைமையுள்ள நீதிமன்றத்தைத் திருப்தி செய்யக்கூடிய மொழிபெயர்ப்பாளர் மூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படவேண்டும். சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர் பதிவுசெய்த வாக்குமூலத்தில் உள்ள வரிகள் எவ்வித மாற்றமும் இன்றி உதவிப்பொலிஸ் அதிபரினால் பதிவு செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் காணப்படுகின்றமை என்ற சந்தேகம் எழும்புகின்றது.
குற்றஒப்புல் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும்போது எதிரியை பொலிஸ் காவலிலிருந்து சிறைச்சாலைக்கு அனுப்பி எதிரிக்குத்தகுந்த கால அவகாசம் வழங்கி அவர் சுதந்திரமாக வாக்கு மூலம் அளிப்பதற்கு நீதிவான் சந்தர்ப்பம் கொடுக்கின்றார். அதேபோன்று உதவிப்பொலிஸ் அதிபரும் செய்யவேண்டும் .சித்திரவதை செய்வது இலங்கை அரசமைப்பின்படி மனித உரிமை மீறல் மட்டுமல்ல சித்திரவதை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஏழாண்டு சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உதவிப்பொலிஸ் அதிபரிடம் எதிரியினால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கமுடியாத ஒன்று என மன்று தீர்மானித்து குற்றஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கவேண்டும் என்று அரசதரப்பு விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கின்றது. எதிரியை மன்று விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 3 மாதகால விடுமுறைக்கு சபை நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கான விடுமுறைப் பிரேரணைகள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அக் கட்சியின் சக உறுப்பினர்களான ரி.கனகசபை, கே.பத்மநாதன், கே.துரைரட்ணசிங்கம் , சொலமன், எஸ்.சிரில் ஆகியோர் முறையே மேற்குறித்த உறுப்பினர்களுக்கான விடுமுறையை பிரேரணைகளைச் சமர்ப்பித்து நேற்றைய தினம் (19.03.2009) தொடக்கம் 3 மாத காலத்துக்கு விடுமுறைகளுக்கான அனுமதியைக் கோரினர்.
இதனையடுத்து சபையினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டத
!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்னோடு .தி.மு.. கூட்டணிக்கு வாருங்கள்என்று பா.. . நிறுவனர் ராமதாஸ் விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் ஏற்க மறுத்துவிட்டார்.
தி.மு., .தி.மு. இரண்டில் யாருடன் கூட்டணி சேருவது என்பதில் இதுவரை முடிவை அறிவிக்காத பாட்டாளி மக்கள் கட்சி, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் பேச்சு நடத்தி வந்தது . .தி.மு..வுடன் பேசும்போது, ‘எங்களுடன் விடுதலை சிறுத்தைகளும் வருவார்கள்என்று உறுதி அளித்ததாக தெரிகிறது.

ஆனால், தி.மு. கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி அறிவித்து விட்டார். திருமாவளவனும் முதலமை‌ச்சரை சந்தித்து பேசியபின் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகம் வந்து தன்னை சந்திக்குமாறு திருமாவளவனுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தாராம். இதை தொடர்ந்து திருமாவளவன் அங்கு சென்றிருக்கிறார். அப்போது, ”நாங்கள் .தி.மு.. கூட்டணிக்கு செல்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள். நாம் இருவரும் .தி.மு.. கூட்டணியில் இணைந்து விடுவோம்என்று ராமதாஸ், திருமாவளவனை அழைத்ததாக தெரிகிறது
ஆனால் திருமாவளவனோ, இந்த அழைப்பை முழுமையாக மறுத்துவிட்டார். ”நான் .தி .மு.. கூட்டணிக்கு வர முடியாது. உறுதியாக தி.மு.. கூட்டணியில்தான் இருப்பேன். முதலமைச்சர் கருணாநிதியுடன்தான் இருப்பேன்என்று கூறி மறுத்துவிட்டாரா‌ம்.

” இலங்கை‌த் தமிழர்கள் பிரச்சனையில் நாம் இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறோமோ, அதேபோல .தி.மு.. கூட்டணியிலும் நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் நன்றாக இருக்குமேஎன்று ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலு‌ம் ‘‌நீ‌ங்க‌ள் எ‌ங்களுட‌ன் வர‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் சிதம்பரம் தொகுதியில் உங்களை எதிர்த்து பா.. வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ராமதாஸ் எச்சரித்தாராம். அதற்குஅப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு. கூட்டணியும் அதற்கு தயாராகவே இருக்கிறோ‌ம் என்று திருமாவளவன் கூறினாராம்.

பின்பு ராமதாஸ், நாங்கள் .தி.மு..வுடன் கூட்டு சேர முடிவு செய்துவிட்டோம் என்று கூறி மீண்டும் மீண்டும் அழைத்தபோதிலும், திருமாவளவன் நான் தி.மு .. கூட்டணியில் தான் இருப்பேன், முதலமைச்சர் கருணாநிதியுடன் தான் இருப்பேன் என்று உறுதியாக கூறினாரா‌ம்.

.‌தி.மு.. கூ‌ட்ட‌ணி‌க்கு வருமாறு ராமதாஸ் அழைப்பை திருமாவளவன் ஏற்க மறுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரு‌ம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தி.மு..வை உடைக்க சதி செய்தவருக்கு, சதியைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று .தி.மு. பொதுச் செயலர் வைகோவுக்கு முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள கேள்விபதில் அறிக்கை:

.தி. மு..வை உடைக்க சதி நடப்பதாக வைகோ பேசியிருக்கிறார். அந்தச் சதியைச் செய்ய அவர் ஒருவர் போதாதா? அந்தக் கட்சி தொடங்கப்பட்ட போது, அவருடன் சென்ற பொன்.முத்துராமலிங்கம், எல்.கணேசன், மு.கண்ணப்பன் உள்ளிட்ட பலர் தற்போது அங்கே இல்லாததற்கு என்ன காரணம்? முதலில் தி.மு..வை உடைக்க சதி செய்தவருக்கு, சதியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

விடுதலைச் சிறுத்தைகளைத் தாக்குகிற போர்வையில், என்னைக் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.. ஒருவர். அவர் விரைவில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவருக்கு சம்பந்தி ஆகப் போகிறார். மேலும், அவருக்கு எப்போதுமே திமுக என்றாலும், கருணாநிதி என்றாலும் அலர்ஜி.

தோழமை பூண்டது எப்படி? அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நான் (கருணாநிதி) வசைமாரி பொழிந்ததாக எனது அறிக்கையில் இல்லாத வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்.

இதற்கு, மின்சாரத் துறை அமைச்சர் ஆ‌ற்காடு வீராசாமி விளக்கமாக பதில் அளித்துள்ளார். ஆனாலும், .தி.மு. அணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதா எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்று கடந்த ஆண்டு தனது பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது .

அதில், “”ஆளும்கட்சியின் குறைபாடுகளை எடுத்துரைத்து திருத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு. ஆனால், அவ்வாறு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், எதிர்க் கட்சித் தலைவரான ஜெயலலிதா கடந்த சில நாள்களாக விடுக்கும் அறிக்கைகளும், பேச்சுகளும் அத்தகைய தன்மையில் இல்லைஎன்று குறிப்பிட்டிருந்தது.

இப்படிக் கூறிய மார்க்சிஸ்ட் கட்சி, .தி.மு. .வோடு இந்தத் தேர்தலில் தோழமை பூண்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், இயக்குனர் சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

கோவையில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.

சென்னையில் நாளை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.

மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடியைடுத்து சுமார் ஒரு மாதமாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த வழக்கறிஞர்கள், வரும் திங்கட்கிழமை முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

கட‌ந்த மாத‌ம் 19 ஆ‌ம் தே‌தி உய‌ர்நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ற்கு‌ள் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைத் கண்டித்து சென்னையில் இன்று ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மூத்த வழக்கறிஞர்களும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இன்று காலை 11 மணியளவில் மன்றோ சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியை சென்னை உயர் நீதிமன்ற சங்கத் தலைவர் பால் கனகராஜ் துவக்கி வைத்தார். பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது .

அப்போது நடந்த கூட்டத்தில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பா‌ல் கனகராஜ், உயர் நீதிமன்றத்தில் தாக்குதல் நடத்திய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும். எனினும் எங்களது போராட்டம் வடிவம் மாறுபடும். அது எந்த மாதிரியான போராட்டம் என்பது குறித்து மாலையில் நடைபெறும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

அதன்படி, மாலையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புக் குழு மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சுமார் ஒரு மாத காலம் நீடித்துவரும் போராட்டத்தை கைவிடுவது என்றும் , வரும் திங்கள்கிழமை 23ம் தேதி முதல் நீதிமன்றத்துக்கு சென்று பணியில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் , “நீதிபதி முகோபாத்யாயாவின் வேண்டுகோளை ஏற்றும், பொது மக்களின் நன்மையை கருதியும் நீதிமன்ற புக்கணிப்பை நாங்கள் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம். வரும் 23ம் தேதி திங்கள்கிழமை முதல் அனைவரும் நீதிமன்றத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்என்றார் .

இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக நீடித்துவந்த நீதிமன்றப் புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!
உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வருண்காந்திக்கு, பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முன் பிணைய விடுதலை (முன்ஜாமீன்) வழங்கி உத்தரவிட்டது.

தேர்தல் பிரசாரத்தின் போது மதவாதத்தை பரப்பும் வகையில் வருண்காந்தி பேசியதாகக் கூறப்படும் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் வரை அவரை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்பிணைய விடுதலை கோரி வருண்காந்தி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி கேத்ரபால் இந்த உத்தரவை வழங்கினார்.வருண்காந்திக்கு எதிரான புகார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியிருப்பதால் , டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க அதிகார எல்லை இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 55 இடங்களில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முலயாம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இருகட்சிகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, சமாஜ்வாடி கட்சி சார்பில் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இதனால், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் , மொத்தமுள்ள 80 தொகுதிகளில், 55 தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அம்மாநில காங்கிரஸ் தலைவைர் ரீதாபகுகுணா ஜோஷி கூறுகையில், சமாஜ்வாடி கட்சியுடன் உடன்பாடு ஏற்படும் நம்பிக்கையை தாங்கள் இழந்துவிட்டதாகவும், எனவே, தனித்து போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கும், தாங்கள் இடம் ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான அணியும், இடதுசாரிகட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்துள்ளன.

கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், கேரள காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதனிடையே, கேரளாவில் இடதுசாரி கட்சிகளுக்கு இடையேயான மோதலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுவதாக அக்கட்சிகள் அறிவித்துள்ளன. ஒரு தொகுதி, கேரள காங்கிரஸ் ஜோசப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . கடந்த முறை, இடதுசாரிகளில் அணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு இந்த தடவை தொகுதி ஒதுக்கப்படவில்லை. பாஜ.. தனித்து போட்டியிடுகிறது. இம்மாநிலத்தில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அணிக்கும் இடையே பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. இடம்பெற வாய்ப்பு இருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Ï_Wôj ØRpYo SúWk§W úUô¥ûV “HtßdùLôs[ Ø¥VôR AW£Vp ©W§¨§’ G] A±®jÕ, AYo ©¬hP²p ÖûZYRtLô] ®Nô AàU§ûV ©¬h¥x AWÑ ¨WôL¬dL úYiÓm Guß AkR Sôh¥p Y£dÏm Ck§V Øv#mLs Y#Ùßj§Ùs[]o.
XiP²p YÚ¡\ úU UôRm Ck§VoLs UôSôhÓdÏ ùPü ú_ôuv ûT]ôu£Vp ¨ëv ¨ßY]m HtTôÓ ùNnÕs[Õ. C§p TeúLtTRtLô] AûZlûT SúWk§W úUô¥ Htßd ùLôiÓs[RôLj ùR¬¡\Õ.
CÕùRôPoTôL ©¬h¥x EsÕû\f ùNVXo ú_d ^ªj§tÏ, ©¬hP²p Es[ Ck§V Øv#mLs LÜu£p RûXYo úL. ØLUÕ Øu]ôl Ê]ô Aàl©Ùs[ L¥Rj§p ϱl©hÓs[RôYÕ:
Ï_Wôj§p LPkR 2002 ØRp ØRpYWôL Es[ SúWk§W úUô¥ AkR Uô¨XjûRf úNokR Øv#mLû[ JhÓùUôjRUôL A¯dÏm SPY¥dûLL°p DÓThÓs[ôo.
Ï_Wôj§p ¨LrkR URd LXYWeLÞdÏ AYoRôu êXLôWQm. AYo ©¬hPàdÏ YW AàU§jRôp, UR Sp#QdLjÕdÏ BTjÕ HtTÓm.
CúR LôWQjÕdLôL, LPkR 2005-p SúWk§W úUô¥ AùU¬dLô®p ÖûZYRtLôL YZeLlThP ®Nô §ÚmTl ùT\lThPÕ. G]úY, AùU¬dLôûYl úTôX, ©¬hPàm úUô¥dÏ ®Nô YZeLôUp ¨WôL¬dL úYiÓm. úUÛm, úUô¥«u XiPu TVQjûR WjÕ ùNnÙUôß Ck§V AW£Pm ©¬hPu A±ÜßjR úYiÓm.

world
!!!!!!!!!!!
Ck§V, º]d ÏZkûRLÞPu úTôh¥«Óm A[ÜdÏ AùU¬dLoLs ReLs ÏZkûRL°u Lp®j RWjûR EVojR úYiÓm G] AkSôhÓ A§To TWôd JTôUô Y#Ùßj§]ôo.
L#úTôo²Vô®p úLôvPô ùU^ô®p ×Ru¡ZûU SûPùTt\ Ko áhPj§p CûR ùR¬®jR JTôUô, AùU¬dL A§To úRoRp ©WNôWj§u úTôúR Rôu Lp®«u RWjûR EVojR úYi¥VRu AY£VjûR Y#Ùßj§VRôLÜm ùR¬®jRôo.

Lp®«u RWjûR EVojÕYÕ R²ST¬u úTôh¥«Óm RWjûRÙm EVojÕm. CRtÏ Y#ûUVô], §\ûUVô] SPY¥dûLLs úYiÓm. Hù]²p, Ts°L°pRôu GûRÙm LtLØ¥Ùm.
Sôm SUÕ ÏZkûRLÞdÏ CûR YZeL CÕúY N¬Vô] úSWm. AlùTôÝÕRôu AYoLs Ck§V, º]d ÏZkûRLÞPu úTôh¥«P Ø¥Ùm. Ts°L°pRôu AYoLs CYtû\ EiûU«p LtL Ø¥Ùm.
G]úY, Lp®j RWjûR JhÓùUôjRUôL ºWûUjRôpRôu CÕ Nôj§VUôÏm. CÕ B£¬VÚdÏ UhÓUô] úYûX G]d LÚRôUp, ùTtú\ôÚdÏm Ød¡Vl TeÏ CÚlTûR A±V úYiÓm.
ùTtú\ôo ReLs ÏZkûRLû[ ÅhÓl TôPeLû[ ùNnV ûYjRp, Lp®«u AY£VjûRÙm, AÕ HtTÓjÕm RôdLjûRÙm ÏZkûRLÞdÏ GÓjÕd á±, ®[eL ûYjRôúX AYoLs Lp®«p £\l©Pm ùTßYôoLs. ùTtú\ôo CûRf ùNnVj RY±]ôp, B£¬VoLs GqY[Ü £\kRYoL[ôL CÚkRôÛm, ÏZkûRL[ôp Lp®«p £\kÕ ®[eL Ø¥VôÕ Gu\ôo JTôUô.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எய்ட்சை ஆணுறை கட்டுப்படுத்தாது vd fUj;J njuptpj;Js;s போப் ஆண்டவர் கருத்துக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு njuptpj;Js;sd.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகள் எய்ட்ஸ் நோயின் பிடியில் சிக்கி தவிக்கின்றன . அங்கு நோயை கட்டுப்படுத்தும் சேவை பணிகளில் கத்தோலிக்க கிறிஸ்தவசபைகளும் ஈடுபட்டுள்ளன . அவர்கள் மக்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்கி வருகின்றனர்.
போப் ஆண்டவர் பெனடிக்ட் ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார் அப்போது மக்களுக்கு ஆணுறைகளை வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை கூறினார். ஆணுறைகளை வழங்குவதால் மட்டும் எய்ட்ஸ் நோய்களை கட்டுப்படுத்திவிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அவருடைய கருத்துக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பிரான்சு நாட்டு வெளி விவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் எரிக்செவாலியா கூறும் போது ஆணுறை முக்கி யமான நோய் தடுப்பு கருவியாக உள்ளது. இதை எதிர்க்ககூடாது பழைய சூழ்நிலைகளை மட்டும் வைத்து கருத்துக்களை கூறுவது தவறு. இது போன்ற கருத்துக்கள் பொது சுகாதார கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாகி விடும். மக்களை காப்பாற்றும் கடமைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்றார்.
ஜெர்மனி சுகாதார மந்திரி உல்லாசச்மித் கூறும் போது போப் ஆண்டவர் கருத்து பொருப்பற்ற விதமாக உள்ளது. குடும்ப கட்டுப்பாடுதான் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதை தடுக்கும் அதே போல ஆணுறை உயிரை பாதுகாக்கும் கருவியாக உள்ளது என்றார் .
நெதர்லாந்து மந்திரி பெர்ட் கொண்டர்ஸ் கூறும் போது எய்ட்ஸ் நோய் உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் போப் ஆண்டவர் கூறிய கருத்து இதை மேலும் மோசமாக்கும் நிலையை உருவாக்கி உள்ளது என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
உலகின் பொருளாதாரம் இந்த வருடம் அரை சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரையில் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் .எம்.எஃப் . எச்சரித்துள்ளது. அது ஏற்கனவே கணித்திருந்ததை விட கடுமையான பொருளாதார வீழ்ச்சி இதுவாகும்.
தற்போதைய இந்தக் கணிப்பு பலிக்குமானால், கடந்த ஆறு வருடங்களில் உலகப் பொருளாதாரம் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்திக்கும். அடுத்த ஆண்டில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளும் என்று .எம்.எஃப். கணிக்கிறது.
ஆனால் தாங்கள் பரிந்துரைப்பதுபோல அதிகமான வரிக்குறைப்பு செய்து பொதுமக்கள் நலத் திட்டங்களில் அதிகமாக செலவுசெய்து உடனடி நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொண்டால்தான் அது நடக்கும் என்று அது கூறுகிறது.
வளர்ந்த நாடுகளில் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்றும் ஏனைய நாடுகளில் வளர்ச்சி சற்றே மந்தமடையும் என்றும் .எம்.எஃப். கணித்துள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!
பாலஸ்தீனர்களுடன் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து சில நாட்களின் பின்னர் மேற்குக்கரையில் ஹமாஸின் முன்னணி செயற்பாட்டடாளர்கள் பத்து பேரை இஸ்ரேல் கைதுசெய்துள்ளது.
மேற்குக்கரையில் ஹமாஸ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் முன்னணியில் ஈடுபட்டவர்களே கைதுசெய்யப்பட்டார்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது.
இவர்களது கைது தம்மை தற்காத்துக் கொள்வதற்கான நியாயமான ஒரு நடவடிக்கையே என்று இஸ்ரேலிய அரசாங்க பேச்சசாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2006ல் காசாவில் கடத்தப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயான கிலாத் சலீத் விடுதலை செய்யப்படும்வரை, ஹமாஸ் மீது இப்படியான அழுத்தங்கள் தொடரும் என்று ஹமாஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புவதாக.இஸ்ரேலிய அரசாங்க பேச்சசாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
ஆஸ்திரியாவில் தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைவைத்து, அவரை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர் மூலம் 7 குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ஜோசெப் ஃபிரிட்சல் என்பவருக்கு ஆயுட்சிறை கிடைத்துள்ளது.
இந்த சிறைவாசத்தை அவர் ஒரு மனநல காப்பகத்தில் கழிப்பார்.
பாலியல் வல்லுறவு, குடும்பத்துக்குள் தகாத உறவு வைத்திருத்தல், சிறைவைத்தல், தனது மகளை சிறை வைத்த காலத்தில் பிறந்த ஒரு குழந்தையை அலட்சியத்தின் காரணமாக கொலை செய்தமை ஆகியவை உட்பட ஒரு தொடரான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக ஏகமனதாக காணப்பட்டார்.
விசாரணைகளின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அந்த குற்றவாளி, தான் தனது குற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து வருந்துவதாகவும் கூறினார் .
தனது மகள் வீடியோ மூலம் வழங்கிய வாக்குமூலத்தை கேட்டபின்னர் தனது கட்சிக்காரர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
sports
!!!!!!!!!!!!!!
நியூசிலாந்துஹேமில்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில்ச‌‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ரி‌ன் அபார சத‌த்தா‌ல் இ‌ந்‌திய அ‌ணி முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 520 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது.இதை‌த் தொட‌ர்‌ந்து 2வது இ‌ன்‌னி‌ங்‌ஸை ‌‌விளையாடியநியூ‌சிலா‌ந்து அ‌ணி 2 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்பு‌க்கு 75 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

நியூசிலாந்து அ‌ணி முதல் இன்னிங்‌சி‌ல் 279 ர‌ன்னு‌க்கு ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தது.அ‌ந்த அ‌ணி‌யி‌ன் ரா‌ய்ட‌ர் (102), வெ‌ட்டோ‌ரி (118) ஆ‌கியோ‌ர் சத‌ம் அடி‌த்தன‌ர் .

இதை‌த் தொட‌ர்‌ந்து தனது முத‌‌‌ல் இ‌ன்‌‌னி‌ங்ஸை தொட‌‌ர்‌ந்த இந்திய அ‌ணி நே‌ற்று ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல், 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்‌‌‌திரு‌ந்தது. டெண்டுல்கர் 70 ரன்களுடனும் யுவ்ராஜ் சிங் 8 ரன்களுடனும் களத்தில் இரு‌ந்தன‌ர்.

இ‌ன்று 3வது நா‌ள் ஆ‌ட்ட‌த்தை தொட‌ர்‌ந்துவிளையாடிய இ‌‌ந்‌திய அ‌ணி, 520 ர‌ன்க‌ள் கு‌வி‌த்தது .முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல்நியூ‌சில‌ா‌ந்து அ‌ணியைவிட 241 ர‌ன்க‌ள் அ‌திக‌ம் எடு‌த்தது .

அபாரமாகவிளையாடிய ச‌ச்‌சி‌ன் 160 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ர். ஜா‌கீ‌ர்கா‌ன் 51 ர‌ன்க‌ள் எடு‌‌த்தா‌ர் .

‌நியூ‌சிலா‌ந்து தர‌ப்‌‌பி‌ல் மா‌ர்டீ‌ன், ஃபெ‌ரி‌ன் ஆ‌கியோ‌ர் தலா 3 ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் , வெ‌ட்டோ‌ரி 2 ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் கை‌ப்ப‌ற்‌‌றின‌ர்.இதை‌த் தொட‌ர்‌ந்து 241 ர‌ன்க‌ள்பி‌ன் த‌ங்‌கிய இரு‌ந்தநியூ‌சிலா‌ந்து அ‌ணி தனது 2வது இ‌ன்‌னி‌ங்சைவிளையாடியது.

தொட‌க்கவீர‌ர் மெ‌க்‌கி‌ன்டோ‌ஸ் ர‌ன் ஏது‌ம் எடு‌க்காம‌ல் ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தா‌ர் . ம‌ற்றொறு தொட‌‌க்கவீர‌ர் கு‌ப்‌தி‌ல் 48 ர‌ன்க‌ள் எடு‌த்து வெ‌ளியே‌றினா‌ர்.

த‌ற்போதுநியூ‌‌‌சிலா‌ந்து அ‌ணி 2 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 75 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.ஃ‌ப்‌லை‌ன் 24 ர‌ன்‌னிலு‌ம், ‌‌மி‌ல்‌ஸ் ஒரு ர‌ன்‌னிலு‌ம் கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.
!!!!!!!!!!!!!!!

அதிக கேட்ச்கள் பிடித்த மார்க்வாக்கின் சாதனையை ராகுல் திராவிட் சமன் செய்துள்ளார் . இந்தியாநியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நேற்றுKs;jpdk; தொடங்கியது . இந்த டெஸ்ட் போட்டியில் ராகுல் திராவிட், நியூசிலாந்து வீரர் கப்டில் கொடுத்த கேட்ச்யை பிடித்த போது டெஸ்ட் போட்டிகளில் 181-வது கேட்ச்சை பிடித்தார். .

இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கின் சாதனையை சமன் செய்தார். மார்க் வாக் 128 டெஸ்ட்களில் 181 கேட்ச்களை பிடித்தார். ராகுல் திராவிட் 132-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!

1 euro = 155.76sl /68.62in
1us $ = 114.05 sl / 50.25in
1swiss fr =101.52sl /44.73in
i uk pound =164.91sl /72.65in
1saudi riyal =30.41sl /13.39in

Leave a Reply

Your email address will not be published.