அனைத்து சிறாரையும் விடுவித்துவிட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கூறுகின்றனர்

பாதுகாப்பு மற்றும் குடும்பக் காரணங்களுக்காக தங்களுடன் இணைந்திருப்போரைத் தவிர ஏனைய அனைத்து சிறார்களையும் தாம் விடுவித்துவிட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் அதற்கான குழுக்களிடம் அவற்றை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் நடந்த கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இவ்வாறு சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போதிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இதுவரை 100 சிறார்கள் காணாமல் போயுள்ளதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

Source & Thanks: bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.