தரைமட்ட கிணற்றில் விழுந்து மாணவி, விவசாயி சாவு

சங்கரன்கோவில்: தரைமட்டக் கிணற்றில் விழுந்து மாணவியும் விவாசாயியும் பலியாயினர்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.கோவில்பட்டியை சேர்ந்தவர் முகுந்தன் மகள் கவுசல்யா. இவர் சாயமலையில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். கவுசல்யா பள்ளி அருகேயுள்ள பகுதியில் சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தார்.

உடனே சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி புழுகாண்டி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் கவுசல்யா அதற்குள் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து பனவடலி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

இன்னொரு கிணற்றுச் சாவு..

குருவிகுளம் அருகேயுள்ள சின்ன வாகைகுளத்தை சேர்ந்த முத்துசாமி மகன் ஆனந்த். விவசாயி. இவர் வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது வழியி்ல் இருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து வி்ட்டார். சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி இறந்தார். அவரது உடலை சங்கரன்கோவில் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

இதுகுறித்து குருவிகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் விசாரணை நடத்தி வருகிறார்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.