வன்னியில் மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

இலங்கையின் வடக்கே மோதல்களில் சிக்கியுள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முகமாக செஞ்சிலுவை சங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் 3 மில்லியன் யூரோக்களை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் பாரிய மனிதாபிமான அவலம் நிலவுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் சிக்கி நாளாந்தம் உயிரிழந்த வண்ணமுள்ளனர்.எறிகணை தக்குதல்களால் மட்டும் அவர்கள் உயிரிழக்கவில்லை. போதிய உணவு, நீர் இன்றியும், மருத்துவ உதவியின்றியும் உயிரிழக்கின்றனர். என ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி தொடர்பான ஆணையாளர் லூயிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் சிறிய அளவு மனிதாபிமான உதவிகளே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அம்மக்களை பாதுகாக்கவும், மனித அவலங்களை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அர்சாங்கம் மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாக்க எறிகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அத்துடன் மனிதாபிமான உதவிகளையும், போதுமான உணவு, மருந்துகளை அம்மக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவும் லூயிஸ் மைக்கேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.