திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் சயனைட் அருந்தி தற்கொலை

திருகோணமலை பாலையூற்றில் இருந்து வர்ஷா என்ற சிறுமியை கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பிலான 6 பிரதான சந்தேகநபர்களில் மற்றுமொருவர் இன்று சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரி.எம்.வி.பி.) ஆதரவாளரான ஜனா என அழைக்கப்பட்ட ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு சைனைட் அருந்தி உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் அவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

சயனைட் உட்கொண்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்ட போதிலும் பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஏற்கனவே இவ்வாறு காவற்துறை அதிகாரி ஒருவரின் கழுத்தினை நெரித்து கொலை செய்ய முற்பட்ட இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.