வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்தது எல்ஐசி!

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் வரை குறைத்துவிட்டதாக எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வட்டிக் குறைப்பு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இதுகுறித்து எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் செயல் இயக்குநர் ஆர்ஆர் நாயர் கூறுகையில், எல்ஐசி வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 75 புள்ளிகள், அதாவது 0.75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதத்தின்படி வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் முதல் 10.5 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும். முன்னர் இது 10.75 சதவீதம் முதல் 11.25 சதவீதம் வரை இந்தக் கடனுக்கு வசட்டி வசூலிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 75 புள்ளிகள் வட்டிக் குறைப்பு செய்தது.

இந்த வட்டிக் குறைப்புச் சலுகை ஏற்கெனவே கடன் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என எல்ஐசி அறிவித்துள்ளது. ஆனால் வணிக வங்கிகளில் இந்தச் சலுகை ஏற்கெனவே கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.