ஈரானுக்கு ஏவுகணை சப்ளை ஒப்புக் கொண்டது ரஷ்யா

மாஸ்கோ:ஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை சப்ளை செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொண்டதை ரஷ்யா தற்போது அங்கீகரித்தது.அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது ஈரான் நாட்டை “ரவுடி நாடு’ என குறிப்பிட்டிருந்தார். ”


ஈரான் அரசால் அண்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்து ஏற்படும்’ என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு அதி நவீன எஸ்-300 ரக ஏவுகணையை சப்ளை செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து, ரஷ்யா இந்த உண்மையை ஒப்புக்கொண்டது. இதுகுறித்து ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், “எஸ்-300 ஏவுகணையை ஈரானுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் ஏவுகணையை வினியோகிக்கவில்லை. இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை.

படிப்படியாக இந்த ஒப்பந்தத்தை அமல் செய்ய யோசித்து வருகிறோம்’ என்றார்.ஈரானுக்கு இந்த ஏவுகணையை சப்ளை செய்தால் ரஷ்யா, மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும், என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.