‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னிப்பெரு நிலப்பரப்பில்மக்கள் பாதுகாப்பு வலயபகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மேலும் ஒரு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் படுகாயமடைந்துள்ளார்.
‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 30 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நேற்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அதேவேளையில்மக்கள் பாதுகாப்பு வலயபகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு , வலைஞர்மடம் ஆகிய பகுதிகளின் மீது நேற்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கெயர்எனப்படும் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ளும் அரசியல் சார்பற்ற அமைப்பின் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மோதல்கள் இடம்பெறும் வன்னி பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாககெயர்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலியானவர் முல்லைத்தீவு மாவட்டத்தில்கெயர்நிறுவனம் சார்பில் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்.சபீசன் (வயது24) என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எறிகணை தாக்குதல் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போதிய மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் ஆனதாக கெயர்மேலும் தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டஉதயன்மற்றும்சுடரொளிபத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் ஜெகான் பலப்பிட்டிய மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெமட்டக்கொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் நாள் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த என்.வித்தியாதரனை குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படி வித்தியாதரன் மீது மேலும் விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிவான் ஜெகான் பலப்பிட்டியவிடம் அனுமதி கோரினர்.
கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வானூர்தி தாக்குதல் மேற்கொண்டபோது தொலைபேசியில் கலந்துரையாடியமை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
அதற்கு ஏதுவாக வித்தியாதரனின் உடல் நலம் குறித்த கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, நீதவான் ஜெகான் பலப்பிட்டிய மூன்று மாத தடுப்புக்காவலில் வைக்குமாறு தெமட்டக்கொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு அனுமதி வழங்கினார்.
மூன்று மாத உத்தரவு வித்தியாதரன் கைது செய்யப்பட்ட கடந்த 26 ஆம் நாளில் இருந்து ஏற்புடையதாகும் என்றும் நீதிவானின் குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களான ஜே.எஸ் .திசநாயகம் என்.வித்தியாதரன் சார்பாக உடனடியாகத் தலையிட்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாக .எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போரில் சிக்குண்டு உள்ள மக்கள் தொடர்பாக எழுதிய இரண்டு கட்டுரைகளை அடிப்படையாக வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கும் மேலாகத் சண்டே ரைம்ஸ் பத்திரிகையாளரான ஜே.எஸ் .திசநாயகம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதியில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடரொளி செய்தியாளர் வித்தியாதரனை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நிறுவுவதற்கு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு பயணம் செய்வது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் போர் இடம்பெற்று வரும் வன்னி பகுதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பயணம் செய்வது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
போர் நடைபெற்று வரும் பகுதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பகுதிகள் தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த பகுதிகள் ஊடகவியலாளர்கள், இரஜதந்திரிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரிதிநிதிகள் செல்வதற்கு முற்றாக தடை செய்யப்பட்ட பிரதேசமாகும்.
இந்த பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் பயணத்துக்கான நாள் போன்றன தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகின்றன.
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் , முன்னனி நிலைகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்களா என்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
போரில் ஈடுபடும் இரு தரப்பும் போர் குற்றங்களை மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு இணைங்கியுள்ளது குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் , இலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவரும் வன்னிப் பகுதியிலுள்ள மக்களின் மோசமான நிலை குறித்து பிரிட்டன், சுவிற்ஸர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் சுட்டிக்காட்டிப் பேசின.
சுவிஸ்
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நிலைமை சுவிற்ஸர்லாந்திற்கு கவலையளிக்கும் விடயமாக உள்ளது என அந்த நாட்டின் பிரதிநிதி முயூரியல் பேர்செட் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெயர்ந்தோரின் நிலை மோசமடைவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரையும் மனிதாபிமானச்சட்டங்களை மதிக்குமாறு சுவிற்ஸர்லாந்து கேட்டுக் கொள்கிறது எனவும் அவர் சொன்னார். படுகொலைகள் மற்றும் பலவந்தமா கக் காணாமற்போகச் செய்யப்படுதல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவது மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதில் இலங்கை அரசுக்கு உள்ள கடப்பாட்டையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
பிரான்ஸ்
இலங்கையின் நிலைவரம் குறித்து தாம் மிகுந்த அச்சம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ள பிரான்ஸின் .நா. பிரதிநிதி, மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் மோசமான நிலைகுறித்து, தான் மிகுந்த வேதனை அடைகிறார் எனவும் குறிப்பிட்டார். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் செய்யவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இலங்கையின் இன மோதலுக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல் நடைமுறைகளை முன்னெடுப்பது மிக முக்கியமானது. இலங்கையின் உள்நாட்டில் மோதல் தீவிரமடைந்துள்ளதையடுத்து மனித உரிமை நிலைவரம் மோசமடைந்துள்ளது எனப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஜப்பான்
இலங்கையின் வட பகுதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் கடும் சேதங்கள் குறித்து ஜப்பானின் பிரதிநிதி சினிச்சி கிடஜிமாவும் கவலை வெளியிட்டுள்ளார்.
கனடா
இடம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச கொள்கைகளைப் பின்பற்றி இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளை மதிக்குமாறு இலங்கைகையைக் கனடா கேட்டுக்கொண்டது.
பிரிட்டன்
பிரிட்டனும் இலங்கை நிலை குறித்து மனித உரிமை கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் கவலை வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பிரதிநிதி மெலெனி ஹொப்கின்ஸ் காணாமற் போதல், படுகொலைகள் , ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றன என நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவும் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள 2 இலட்சம் பொதுமக்கள் குறித்துக் கவலை வெளியிட்டுள்ளது. சகலரதும் பிரச்சினைக்கும் தீர்வைக் காணும் வகையில், அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரும் என்றும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி போன்ற நாடுகளும் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் குறித்த தமது கடும் கவலையை வெளியிட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் கருத்து, நாட்டின் இறைமைக்கு விழுந்த அடியாகும். இதனை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது . அவருடைய கருத்தினால் சர்வதேச அமைப்புக்களின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார் . விடுதலைப் புலிகள் இயக்கமானது, சர்வதேச ரீதியில் பிரசாரங்களை முன்னெடு ப்பதற்காக பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முகவர் நிறுவன ங்களுக்குள் ஊடுருவி அவற்றின் மூலமாக அனுதாபத்தினைப் பெற்றுக்கொள் கின்றது. இவ்வாறானதொரு பிரசாரமாகவே நவநீதம்பிள்ளையின் கருத்தும் அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது: சர்வதேச ரீதியில் வியாபித்துள்ள பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன. இந்த தீர்மானத்தின் பெரும் பங்கினை இலங்கை அரசாங்கம் ஏற்றுள்ளது . நமது நாட்டைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமென்பது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது . விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கை தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பலமிழந்தள்ள புலிகள் இயக்கம், சர்வதேச ரீதியில் இயங்கும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முகவர் நிறுவனங்களைப் பயன்படுத்தி மீண்டும் உயிர்பெற நடவடிக்கை எடுக்கின்றது. அதற்காக புலிகளுக்கு எதிராக படையினரால் நடத்தப்படும் தாக்குதல்கள் வன்னியில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுபவை என உலக நாடுகளுக்கு கேட்கும் வகையில் புலிகள் வெளிப்படையாகவு ம் மறைமுகமாகவும் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வியக்கத்தினருடைய பிரசாரங்களை அனைத்துலகமும் அறிந்தகொள்ளும் வகையில் சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகளைக் கொண்டே வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையிலேயே .நா.வின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்தும் அமைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் வடக்கில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வாழ்வதாக கூறிய ஐக்கிய நாடுகள் சபை இன்று ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே வன்னியில் இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கின்றது. இதன் மூலம் அவ்வமைப்பு உண்மையான தகவல்களை ஒருபோதும் வெளியிடவில்லை என்பது தெளிவாகிறது .

இந்நிலையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக 2018 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 700 பேர் சிறுவர்கள் எனவும் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் புலிகளுக்குச் சார்பான தமிழ்நெற் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவையாகு ம். .நா.வின் அலுவலகமொன்று கொழும்பில் இருக்கும் பட்சத்தில் மேற்படி இணையத்தளத்தின் வாயிலாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளமை சர்வதேச அமைப்புக்களுக்குள்ளும் விடுதலைப் புலிகள் மிகவும் சூட்சுமமான முறையில் ஊடுருவியுள்ளனர் என்பதை வெளிக்காட்டுகிறது.

இது எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டுள்ள கருத்தினை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு அதனை நிராகரிக்கிறது. அவருடைய கருத்து தொடர்பில் இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன . அவருடைய கருத்து தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதுடன் அதற்கு எதிரான நடவடிக்கையினையும் எடுத்து வருகின்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஊடக சுதந்திரமின்றி ஊடகங்கள் செயற்படுகின்றன இதனால் சிறந்த ஊடகவியலாளர்கள் வெளிநாடுளில் சென்று வசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இல்லாமல் உள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினரும் .தே. வின் உப தலைவரருமான கரு ஜெய சூரிய தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தள்ளார்.
இன்று சில அரச ஊடகங்கள் .தே கவிற்கு எதிராக பல பொய்பிரச்சாரங்கள் மேற்கொள்ளபப்டுகிறன இது எமக்கு கவலையை அளிக்கிறது எனத் தெரிவித்த அவர் ஆட்சியில் இருக்கும் அரசுக்கே தேர்தல் கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கும் அதிகாரம் உள்ளது எமக்கு இன்று நியாயமான தேர்தல்கண்காணிப்பு குழு ஒன்று அவசியமாகிறது.
உலகில் இன்று தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி எமது நாட்டையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது இது தொடர்பில் கடந்த 4 மாதங்களாக நாம் கூறிக்கொண்டு வருகிறோம்.
இந்நிலையில் தேர்தல்களை ஒரே தடவையில் நடத்தாது ஒவ்வொன்றாக நடத்தும் போது பல பொருளாதர நெருக்கடிகள் ஏற்படுவதால் மக்களின் பணம், பொது சொத்துகள் செலவழிக்கப்படுகின்றன . இன்றைய பொருளாதார சூழலில் இது பாரிய நெருக்கடிக்கு இட்டு செல்லும். மக்களை பாதிக்கும் இவ்வாறான செயல்களுக்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்தார்.”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனித உரிமைகளை பாதுகாப்பது குறித்து புதிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
37 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டமைந்த விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் குழாமில் அங்கம் வகிக்கும் 37 பாராளுமன்ற உறுப்பினர்களதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
நாட்டு மக்களது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக கட்சி பேதமின்றி குறித்த அமைப்பு செயற்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் மீறப்பட்ட அனைவரும் தமது அமைப்பின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாப்பில் திருத்தம் கொண்டுவருவது குறித்து ஆராய குழு நியமனம் ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய சிரேஷ்ட தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது என்று நேற்று புதன்கிழமை நடை பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் யாப்பில் திருத்தம் கொண்டுவருவது குறித்து ஆராயவும்,

புதிய சிரேஷ்ட தலைவர் பதவிக்கான அதிகாரங்களை வரையறுக்கவும் குழு ஒன்றும் நேற்றைய கூட்டத்தின்போது நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா திஸ்ஸ அத்தநாயக்க சஜித் பிரேமதாஸ லக்ஷ்மன் கிரியெல்ல லக்ஸ்மன் செனவிரத்ன ஜோன் அமரதுங்க ரேணுகா ஹேரத் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விசேட குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குழுவின் பரிந்துரைக்கு அமைய கட்சிக்கு புதிய சிரேஷ்ட தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் புதிய தலைவர் ஒருவரும் தெரிவு செய்யப்படுவார் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த ஐந்து வருடங்களுக்குள் மேல் மாகாணத்தில் வந்து குடியேறியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சனி, ஞாயிறு (21,22,) ஆகிய தினங்களில் மீண்டும் நடைபெறவுள்து என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குண ÷சகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத் தில் நடந்தபோதே அவர் இதனைக் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் இது குறித்து மேலும் கூறியவை வருமாறு:
வடக்கில் தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் தெற்கில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று புலனாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மீலாத் விழாவின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பாணியில் மேலும் பல தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்குத் தேவை . எனவே பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் குடியேறியவர்களும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தம்மைப் பதிவு செய்து கெள்ளவேண்டும். மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் வேறு பொது நிலையங்களிலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யேர்மன் பேர்லின் மாநிலத்தில் நடைபெறும் உலகலாவியரீதியில் மிகபெரிய உல்லாசப் பயணிகளுக்கான சொர்க்கம் 2009 கண்காட்சியில் முதல் நாள் போராட்டமாக பல தமிழ் இளையோர்கள் யேர்மன் மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதப்பட்ட சொர்க்கத்தின் மறுபக்கம், எனும் துண்டுபிரசுரம் அங்கே பத்தாயிரத்துக்கும் மேலாக கூடியிருந்த மக்களுக்கு கொடுத்தார்கள்.
அத்துடன் அங்கே தாயக மக்களின் உண்மையான அவலநிலமைகள் அடங்கிய கண்காட்சியும் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டது .
சிறப்பாக ஓர் பேர்லின் வாழ் இளைஞன் சிறிலங்கா நாட்டின் கண்காட்சி நிலையத்துக்கு சென்று அவர்கட்கு எதிராக தான் அணிந்திருந்த உடையில் சிறிலங்காவின் சுற்றுலா விமானத்திலிருந்து இரத்தம் வடியும் காட்சியை பதித்து பத்தாயிரத்துக்கும் மேலான மக்களின் மத்தியிலும் , 185 நாடுகளின் கண்காட்சி நிலையங்களின் ஊடாகவும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ப்பதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரை திமுக கூட்டணியில் சேர்த்தால் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை காங்கிரசார் தோற்கடிப்பார்கள் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
திருமாவளவன், கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்காமல் இருந்தபோது, ஜி.கே.மூப்பனார் அவரை தேர்தலை சந்திக்க வைத்தார். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்பேன் என்று கூறி வரும் திருமாவளவன் இக்கூட்டணிக்கு தேவையா? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தவர்களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கூறி வரும் நிலையில் அவர் கூட்டணியில் நீடிப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.

தொண்டர்களை மதிக்காத எந்த கூட்டணியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் தலையாட்டி பொம்மை களாக இருப்பது கட்சிக்கு நல்லதல்ல.
திருமாவளவன் கூட்டணியில் நீடித்தால், வேலூரில் திருமாவள வனை வெளியேற்று என்று இயக்கம் தொடங்க நேரிடும். திருமாவளவனு டன் கூட்டணி வைப்பதை விட தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கொள்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் மாறானவை. , வலிமையான பாரதம் என்பது காங்கிரஸ் கொள்கை. தனித்தமிழ்நாடு கோஷம் கொண்ட வர்கள் விறுதலை சிறுத்தைகள்.

சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் காங்கிரஸ்காரர்களை தாக்கியதோடு மட்டுமல்லாமல், வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகத்தை தாக்கியதோடு, எம்பிக்கள் கார் வேந்தன், சுதர்சன் நாச்சியப்பன் ஆகியோரது அலுவலகத்தை தாக்கி யுள்ளனர். இவர்கள் கூட்டணியில் உள்ளார்கள் என்று முதல்வர் அறிவித் திருப்பது காங்கிரஸ் தொண்டர் களுக்கு பெருத்த ஏமாற்றமாகவும், அவமானமாகவும் உள்ளது. மானத்தோடு காங்கிரஸ் தொண்டர் கள் இருக்க வேண்டுமானால் திருமாவளவன் கட்சியை கூட்டணியில்
சேர்க்கக்கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தே தீருவோம் . இதற்காக நான் மாநிலம் முழுவதும் சென்று தீவிர பிரசாரம் செய்வேன்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதற்காகதான் நான் தல்லி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினேன். பின்னர் தனி மாநிலத்திற்காக தனித்தனியாக பிரிந்திருந்து குரல் கொடுப்பது நல்லதல்ல என்பதால் தெலுங்கானா கட்சியில் இணைந்தேன்.
கடந்த தேர்தலில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் மறுத்துவிட்டது.

இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தே தீருவோம். இதற்காக நான் மாநிலம் முழுவதும் சென்று தீவிர பிரசாரம் செய்வேன். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது . சட்டம்ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.
காங்கிரசார் பணம், பதவி வெறிபிடித்தவர்கள். ஆந்திர மக்களுக்காக பாராளு மன்றத்தில் ஒரு போதும் குரல் கொடுக்க மாட்டார்கள். காங்கிரஸ் மேலிடத்தின் அடிமைகளாகத்தான் இருப்பார்கள் . தங்கள் மாநில மக்கள் வறுமையில் வாடினாலும், இன்னலுக்கு ஆளானாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் அக்கட்சி எம் .பி.க்களால் செய்ய முடியும்.
எனவே இந்த தேர்தலில் ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்க கூடாது என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்கிறோம். மக்களிடம் காங்கிரசாரின் அவலநிலையை எடுத்துச்சொல்லி வருகிறோம். மக்களும் இதை மெல்ல மெல்ல புரிந்து வருகிறார்கள். தெலுங்கானாவுக்கு பச்சைத்துரோகம் செய்த காங்கிரசுக்கு தெலுங்கானா மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் த‌மிழ‌‌ர்க‌ள் காங்கிரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் எ‌ன்று‌ம் மத்தியில் யாரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது எ‌ன்று‌ம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும், தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவருமான நல்லகண்ணு கூ‌றினா‌ர்.

நெல்லை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து .‌தி.மு..‌விட‌ம் 2 கட்ட பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். வருகிற 20ஆ‌ம் தேதிக்கு பிறகு பேச்சு வார்த்தை முடிவடையும் எ‌ன்றா‌ர் .

.தி.மு.. கூட்டணியில் திருப்பூர், தென்காசி, நாகப்பட்டினம் உள்பட 7 தொகுதிகளை கேட்டு உள்ளோம் எ‌ன்று கூ‌றிய ந‌ல்லக‌ண்ணு, கூட்டணி பேச்சு வார்த்தையில் .தி.மு..வின் அணுகுமுறை சுமூகமாக உள்ளது எ‌ன்று‌ம் . தி.மு.. கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது எ‌ன்றா‌ர்.

இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் போரை நிறுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ந‌ல்லக‌ண்ணு, இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் த‌மிழ‌‌ர்க‌ள் காங்கிரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் எ‌ன்று‌ம் மத்தியில் யாரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இந்த தேர்தலில் இலங்கை‌த் தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும், வேலைவாய்ப்பு இல்லாமை ஆகியவை குறித்து பிரசாரம் செய்வோம் எ‌ன்று கூ‌றிய ந‌ல்லக‌ண்ணு, இடதுசாரிகள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு வேண்டுகோள் என்று ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம் எ‌ன்றா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர் நீதிமன்ற மோதல் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நடத்தும் பேரணிக்கு 12 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, காலை 11 மணியளவில் மன்றோ சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைகிறது.

இதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இந்த பேரணிக்கு 12 நிபந்தனைகளை விதித்து காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பேரணியில் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. பேரணியில் அரசுக்கு எதிராகவோ , சாதி, மத அடிப்படையிலோ கோஷங்கள் எழுப்பக்கூடாது. கொடிகளை கையில் ஏந்தி வரக்கூடாது . வன்முறையில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த பேரணியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது .

இந்த பேரணி, விருந்தினர் மாளிகையை வந்தடைந்ததும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பேசுகின்றனர். பின்னர், நீதிமன்ற போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது .

இதில், கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட்டு , வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக தெரிகிறது
!!!!!!!!!!!!!!!!!!!
நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பு நகலை எரித்து கீழ்த்தரமாக போராட்டம் நடத்திய வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும் எ‌ன்று காவல‌ர்க‌ள் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்து‌ள்ளனர் .

செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நட‌ந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை நகர காவ‌‌ல்துறை கூடுதல் ஆணைய‌ர் .கே.விஸ்வநாதன், இணை ஆணைய‌ர் ராமசுப்பிரமணி ஆகியோரை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செ‌ய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம், த‌‌‌மிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வந்த சிலமணி நேரத்தில் காவல‌‌ர்க‌ள் ஏராளமான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார்கள். இந்த துண்டு பிரசுரங்கள் அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜீவஜோ‌தி கணவ‌ர் சா‌ந்தகுமா‌ர் கொலை வ‌ழ‌க்‌கி‌ல்சரவணபவ‌ன் ஓ‌ட்ட‌ல் உ‌ரிமையாள‌ர் ராஜகோபால் உ‌ள்‌ளி‌ட்ட 9 பேருக்கு கீ‌ழ்நீ‌‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டுசிறை த‌ண்டனையை செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம் ஆயு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரி‌த்து‌இ‌ன்று தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

நாகை மா‌வ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்‌தவ‌ர்ஜீவஜோ‌தி.இவரது கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சா‌ந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செ‌ய்ததாக குற்றம்சா‌ற்றப்பட்டது.

இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்,ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டுகடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம்வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த ம‌ற்ற 8 பேரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனைவி‌தி‌க்க‌ப்ப‌ட்டது . கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த இர‌ண்டு வழ‌க்‌குக‌‌ளிலு‌ம்வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

அதே சமயம் அரசு தர‌ப்‌பி‌‌ல், 10 ஆ‌ண்டுக‌ள்சிறை‌த் த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ப்‌‌பீ‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்‌கி‌‌ன்விசாரணை முடி‌ந்துதீ‌ர்‌ப்பு த‌ள்‌ளி வை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது .

இ‌ந்தநிலை‌யி‌ல் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இ‌ன்றுதீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு , ‌கீ‌ழ்நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டுசிறை த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது.

குற்றவாளிகளுக்கு இபிகோ 302 வது பிரிவின்படி( கொலை ) தண்டனை வழங்காமல், தண்டனை வழங்கியதில் கீழ் நீதிமன்றம் தவறிழைத்து விட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும் , இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மத்தியப் பிரதேசத்தின் சட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் , 4 பெண்கள் உட்பட 12 பேர் முகமூடிக் கொள்ளையர்களால் உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டுள்ளனர் .

சட்னா மாவட்டத்தில் உள்ள பிச்சிசியான் கிராமத்தில் இன்று அதிகாலை வேளையில் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்ததாக மாவட்ட ஆட்சியர் சுக்பீர் சிங் தெரிவித்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அஸ்ஸாமில் உள்ள திப்பு ரயில் நிலையத்தை குறிவைத்து கார்பி தீவிரவாதிகள் இன்று அதிகாலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். அவ்வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் தப்பியது.

ரயில்வே துறை தகவல்களின் படி, திப்ருஹாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் , திப்பு ரயில் நிலையத்திற்கு 200 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த போது குண்டு வெடித்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும், ரயில் நிலையத்தில் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருந்ததால், ராஜ்தானி எக்ஸ்பிரசுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

இதையடுத்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் திப்பு ரயில்நிலையத்திற்கு அருகிலேயே நிறுத்தப்பட்டதாகவும், ரயில் பாதையை சீரமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பீகார் மாநில மக்களவைத் தேர்தலில் 26க்கும் அதிகமான இடங்களில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சரும், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கான காங்கிரஸ் ஆய்வுக்குழு தலைவர் சுஷில்குமார் ஷிண்டே நேற்று வெளியிட்டார் .

பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட பேட்டியில், பீகாரில் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த எண்ணிக்கை போதாது என்று அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ், தங்களுக்கு மேலும் சில தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியது. எனினும், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என லாலு பிரசாத் தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் 26க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிட நடிகை நக்மா விருப்பம் தெரிவித்துள்ளார். மும்பை வட மேற்கு தொகுதியில் தனக்கு போட்டியிட ,lk;xJf;fp தருமாறு அவர் கட்சி தலைமையிடம் கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நக்மா மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

நான் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன். மக்களிடம் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் புதிய வர்களுக்கும், பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனக்கு தேர்தலில் போட்டியிட சீட் தருவது குறித்து கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் . வேறு கட்சிக்கு செல்லமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

world
!!!!!!!!!!
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இஃப்திகார் சௌத்ரியை மறுநியமனம் செய்துள்ளதை .நா. சபையின் மனித உரிமைத் தலைவர் நவி பிள்ளை வரவேற்றுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த பேரணியில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதையும் நவி பிள்ளை வரவேற்றுள்ளதாக .நா மனித உரிமை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ருபெர்ட் கோல்வில்லி தெரிவித்துள்ளார் .

முஷாரப் அதிபராக இருந்த போது பதவி நீக்கப்பட்ட 60 நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது, நாட்டில் சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கை என்றும் ருபெர்ட் கோல்வில்லி கூறியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
வங்கதேசத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு, அந்நாட்டில் இயங்கி வரும் 12 பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா அரசு, அந்த அமைப்புகள் மீது தடை விதித்துள்ளது.

!!!!!!!!!!!!!!
Tô¡vRôu A§T¬u TR®¿dÏm A§LôWjûR Tô¡vRôu UdLs Lh£ RûXûU«Xô] AWÑ WjÕ ùNnV úYiÓm G] Tô¡vRôu ØvÄm Äd(Gu) Lh£«u RûXYo SYôv ù`Ãl ùR¬®jRôo. AdúPôTo 1999p WôÔYl ×Wh£dÏ Øu©ÚkR AW£Vp NhPm ÁiÓm ùLôiÓYWlTP úYiÓm Gußm AYo ùR¬®jRôo.
ù`Ãl, CkR YôWjÕYdLj§p ¿iP úTW¦ SPj§ 2007 AYNWLôX ¨ûX«uúTôÕ T¦¿dLm ùNnVlThP ¿§T§Lû[ ÁiÓm T¦VUojRlTP úYiÓm Gu\ úLô¬dûLûV Y#Ùßj§]ôo.
RtúTôÕ AYo áßûL«p, úRoR#p úTôh¥«P R]dÏm, R]Õ NúLôRWo `ôTôv ù`Ã×dÏm EfN¿§Uu\m ®§jR RûP ϱjÕm AWÑ LY]j§pùLôs[ úYiÓm Gu\ôo.
©WRUûW TR®¿dLm ùNnRp, SôPôÞUu\jûRd LûXjRp úTôu\ A§LôWeLû[ A§TÚdÏ A°dÏm AW£VXûUl× NhP ®§ 17I AWÑ WjÕ ùNnV úYiÓm Gußm, Ø`ôW©u WôÔYl ×Wh£dÏ Øu©ÚkR AW£Vp NhPm ÁiÓm ùLôiÓYWlTP úYiÓm Gußm ù`Ãl Y#Ùßj§Ùs[ôo.
SYôv ù`Ã×m, AYWÕ NúLôRWo `ôTôv ù`Ã×m úRoR#p úTôh¥«PÜm, úRokùRÓdLlThP TR®Lû[ Y¡dLÜm EfN¿§Uu\m NÁTj§p RûP®§jRÕ. CûRjùRôPokÕ Tô¡vRôu ØvÄm Äd(Gu) Lh£ Bh£«#ÚkR TgNôl UôLôQj§p A§To _oRô¬ BÞSo Bh£ûVd ùLôiÓYkRôo.
G²àm BÞSo Bh£ ùLôiÓYWlThPÕ N¬Vô] SPY¥dûL ApX Gußm, AeÏ Tô¡vRôu ØvÄm Äd(Gu) AWÑ ÁiÓm TR®«p AUojRlTP úYiÓm Gußm ù`Ãl ùR¬®jÕs[ôo.
!!!!!!!!!!!!!!!!
AûU§ JlTkRj§uT¥ £û\«p Es[ ReLs CVdLjûRf úNokR 210 úTûW ®ÓRûX ùNnV úYiÓm Guß Tô¡vRô²p vYôj Ts[jRôd¡p ùNVpThÓ YÚm R#Tôu AûUl× úLô¬dûL ®ÓjÕs[Õ.
Tô¡vRô²p vYôj Ts[jRôd¡p ùNVpThÓ YÚm R#Tôu ¾®WYô§LÞdÏm Tô¡vRôu AWÑdÏm CûPúV LPkR UôRm AûU§ JlTkRm ûLùVÝjRô]Õ.
CkR JlTkRj§uT¥ £û\«p Es[YoLs ®ÓRûX ùNnVlTP úYiÓm Guß AYoLs úLô¬Ùs[]o.
vYôj Ts[jRôd¡p CvXôªV ¿§Uu\eLs ùNVpTPj ùRôPe¡VûR AÓjÕ R#Tôu ¾®WYô§Ls CkRd úLô¬dûLûV ØuûYjÕs[]o.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இங்கிலாந்தில் வேலையிழப்பு விகிதம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது . ஜனவரியுடன் முடிவடைந்த காலாண்டில் வேலையிழப்பு விகிதம் 6.5% ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 6.3% ஆக இருந்த வேலையிழப்பு விகிதம், தற்போது 6.5% ஆக உயர்ந்துள்ளதால் இங்கிலாந்து முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆஸ்கர் விருதுகள் பல பெற்றுள்ள ஆங்கிலத் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தையும் , ஹாலிவுடன் திரைப்படமான தி டார்க் நைட் திரைப்படத்தையும் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தில் தாம் தொலைக்காட்சியில் திரையிடப் போவதாக இரான் நாட்டின் அரச தொலைக் காட்சி அறிவித்துள்ளது.
திரைக்கு வந்து சில காலமேயான புது திரைப்படங்களை திரையிடுவது இரான் நாட்டு தொலைக்காட்சியில் வழக்கமேயல்ல. இரானுக்கு வெளியேயிருந்து வரும் பாரசீக மொழி செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து இளைஞர்களின் கவனத்தை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிருபர்கள் கூறுகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மரணத்தின் விளிம்பில் இருக்கும் நிற வெறிகாட்டி அவமதித்த ஜேட் கூடி ./ ஷில்பாஷெட்டியை சந்திக்க அனுமதி மறுத்து விட்hர்

ஷெட்டியை நிற வெறிகாட்டி அவமதித்தவர் இங்கிலாந்து பிரபல டி.வி. நடிகை ஜேட்கூடி. அவருக்கு புற்று நோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . அது உடல் முழுவதும் பரவி மூளையையும் தாக்கியதால் ஜேட்கூடி மரணத்தின் வாசலில் தள்ளப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என்றுகூறி விட்டனர். எந்த நேரத்திலும் சாவு நிகழலாம் என்றும் தெரிவித்தனர்.
இதனால் ஆஸ்பத்திரியில் சாக விரும்பாத ஜேட்ங் கூடி நான் வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறி விட்டார்.
இதனால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கேயே இருந்தபடி மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ஜேட்கூடியை சந்தித்து பேச ஷில்பா ஷெட்டி விரும்பினார். இதற்காக அவர் லண்டன் புறப்பட்டு சென்றார். ஆனால் அவரை சந்திக்க ஷில்பாவுக்கு அனுமதி கொடுக்கவில்லை .
இதுபற்றி ஷில்பாஷெட்டி கூறும் போது ஷீஜேட்கூடியை சந்திக்க மிகவும் விரும்பினேன். ஆனால் அவரது தாயாரும், கணவரும் அனுமதி மறுத்து விட்டனர். அவரை சந்திக்க வேறு வழி தெரியவில்லை. அவருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்க்ஷ் என்றார்.

இடையிடையே தாங்க முடியாத வலியால் துடிக்கிறார். ஏராளமானோர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். ஆனால் மிக முக்கியமான நபர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
மரண பயம் அவரை நிலைகுலைய செய்துள்ளது. பயத்தை வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியாகவே இருப்பது போல காட்டிக்கொள்கிறார். ஆனால் முடியவில்லை.
ஜன்னல் அருகே உட்கார்ந்து சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் ஆர்வத்துடன் பார்க்கிறார். சில நேரங்களில் வானத்தை வெறித்து பார்த்தபடி இருக்கிறார் .


sports
!!!!!!!!!!!
aôªpP²u ùNPôu Tôod ûURô]j§p SûPùTtßYÚm Ck§Vô} ¨ë³XôkÕ A¦LÞdÏ CûP«Xô] ØRp ùPvh úTôh¥«u CWiPôm Sôs BhPj§p Ck§Vô90.5 Xtupy; 4 ®dùLhÓLs CZl×dÏ 278 WuLû[ GÓjÕ YÛYô] ¨ûX«p Es[Õ.
Øu]RôL ØRpSôs BhPj§p 279 WuLÞPu Aû]jÕ ®dùLhÓLû[Ùm ¨ë³XôkÕ A¦ CZkR©u]o Cu²eû^j ùRôPe¡V Ck§V A¦, ØRpSôs BhP Ø¥®p ®dùLh CZl©u± 29 WuLû[ GÓj§ÚkRÕ.
Ck§V A¦«u Cuû\V BhPj§p LmÀo 72 WuLÞPàm, úNYôd 24 WuLÞPàm, §Wô®h 66 WuLÞPàm, XxUi 30 WuLÞPàm BhPªZkR]o. ùPiÓpLo 70 WuLÞPàm, ÙYWôw 8 WuLÞPàm BhPªZdLôUp CÚkR]o.
CWiPôm Sôs BhPúSW Ø¥®p Ck§V A¦ 4 ®dùLhÓLs CZl×dÏ 278 WuLû[ GÓjÕs[Õ.
!!!!!!!!!!!!!!!!!

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. எனினும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற தவறியது. .

ஆஸ்திரேலியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியோடு மோதியது.

இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 83 ரன்களுக்குள் tPo;e;jJ. பின்னர் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது .

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறவில்லை. இறுதிப் போட்டி வாய்ப்பை பெற இந்தியா இந்தப் போட்டியில் வெல்வதோடு, ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்திருக்க வேண்டும் .

அதே போல நியூசிலாந்து அணி பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும். ஆனால் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை தோற்கடித்தது. இதனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மூன்றாம் இடத்துக்காக இந்தியா ஆஸ்திரேலியாவோடு மோத உள்ளது.


1 euro = 153.55sl /68.25in
1us $ = 114.13 sl / 50.73in
1swiss fr =99.87sl /44.40in
i uk pound =162.35sl /72.16in
1saudi riyal =30.43sl /13.52in

Leave a Reply

Your email address will not be published.