3 வாரங்களுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடையும்: பாதுகாப்புத் தரப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இன்னமும் மூன்று வாரங்களுக்குள் பூர்த்தியடையும் என பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் தப்பிச் செல்லக் கூடிய சகல வழிகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறித்த உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 400 மீற்றர் தொலைவில் படையினர் நிலைகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வெகுவிரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பூரணமாக நிலப்பரப்புக்களை கைப்பற்ற முடியும் என குறித்த உயர் இராணுவ அதிகாரி பிரபல
ஆங்கில இணைய தளமொன்றுக்கு செவ்வி அளித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.