தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடும் நோக்கில் தூதுக்குழுவொன்றை அனுப்பி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு
அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னிப் பொதுமக்களது நிலவரத்தை நேரில் கண்டறியும் நோக்கில் தூதுக்குழுவொன்றை அனுப்பி வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை ஆணையாளர் நாயகம் பெனீட்டா பெரேரா விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழு இலங்கையில் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட இருந்ததாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த கோரிக்கையை
விடுத்துள்ளதாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் சுமார் 170,000 பொதுமக்கள் சிக்கியிருப்பதாக பென்னீட்டா பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் இலங்கை விஜயத்திற்கு தடை எதுவும் இல்லை என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.