நாடாளுமன்ற செய்திகளை அனுமதியின்றி ஒளி,ஒலிபரப்புச் செய்யும் ஊடகங்கள் தடை செய்யப்படலாம்: சபாநாயகர்

நாடாளுமன்ற செய்திகளை அனுமதியின்றி ஒளி, ஒலிபரப்புச் செய்யும் ஊடகங்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய நேரிடும் என சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் உரையாற்றும் போது, அவருக்கு முன்னால் உள்ள ஒலிவாங்கி இயங்காத நிலையில், அவரின் உரையை ஊடகங்களில் வெளியிட்டால், குறித்த ஊடகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற செய்தி சேகரிப்பு ரத்துச் செய்யவேண்டியேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, சபையின் நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ படங்களும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பபடுவதாகவும் இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் எனவும் லொக்குபண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.