வன்னி மக்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையை நோக்கிச் செல்வதாக செஞ்சிலுவைச் சங்கம் அச்சம்

வடபகுதியில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், மக்களின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக மாறி வருவதாகவும் சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாதுகாப்பான வலயங்கள் நோக்கி தப்பிச் செல்லும் நோக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கரையோரப் பகுதிகளில் காத்திருப்பதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் நோக்கிச் செல்ல காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி பொதுமக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை
வசதிகளின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவர் போல் கெஸ்டல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், அடிக்கடி இடம்பெற்று வரும் எறிகணைத் தாக்குதல்களினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மர நிழலில் தஞ்சமடைய நேரிட்டுள்ளதாகவும், இவர்கள் பாரியளவு நோய் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் போல் கெஸ்டல்லா குறிப்பிட்டுள்ளார்.

Source & thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.