கொழும்பில் உள்ள வடக்குப் பிரதேச தமிழ் மக்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவு

இலங்கையின் வடக்குப் பிரதேசதங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, வன்னி உட்பட்ட பிரதேசத்தில் இருந்து மேல்மாகாணத்திற்கும் கொழும்புக்கும் வந்து தங்கியுள்ள தமிழர்கள் மீண்டும் தம்மை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என இலங்கை பொலிஸ்துறை உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை இந்தப் பதிவுகளை தமிழ் மக்கள் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே கடந்த வருடத்தில் மாத்திரம் இரண்டுமுறை இவ்வாறு வடக்குப் பிரதேச மக்கள் கொழும்பிலும் மேல்மாகாணத்திலும் தம்மை பதிவுசெய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தனர்.

Source & Thanks :tamilwin

Leave a Reply

Your email address will not be published.