வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது.

வன்னியில் 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் பொருட்டு அங்கு உடனடியாக ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு சென்று பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்வை காணும் முயற்சிகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.