அம்பாறையில் சிறிலங்கா காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் இன்று புதன்கிழமை காலை 10:00 மணியளவில் சிறிலங்கா காவல்துறையினா மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர்.

இதில் காவல்துறையைச் சேர்ந்தவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.