ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுதலைப்புலிகளுக்கு துணை நிற்பதாக போக்குவரத்து அமைச்சர் அழகப்பெரும குற்றசாட்டு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விடுதலைப்புலிகளுக்கு பயங்கரவாதத்திற்கு துணை நிற்பதாக இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:-

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து உலகிற்கு தெரியபடுத்த எவரும் முன்வருவதில்லை எனவும் பதிலுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பொய்பிரச்சாரங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் ஆதரவு வழங்க வேண்டுமென தாம் கோரவில்லை எனவும் அரசுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் இணையத்தளங்களில் வெளியாகும் புள்ளி விபரங்களுக்கு நிகாரன புள்ளி விபரங்களையே நவனீதம்பிள்ளையின் அறிக்கைகளிலும் காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தனது அறிக்கையில் அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 2700 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தகது.

இலங்கை அரசாங்கம் வன்னியில் திட்டமிட்டு படையினரால் அரங்கேற்றப்படும் தமிழ் இனப்படுகொலைக் குற்றங்களை இலங்கையில் ஊடகங்களை அச்சுறுத்தி வெளியில் வராமல் மறைத்துள்ளபோதிலும், இணையத்தளங்களின் ஊடாகவும் சர்வதேச அமைப்புக்களினாலும் உலக நாடுகள் உண்மைத் தன்மைகளை உணர்ந்துள்ளதினால் இலங்கை அரசு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.