வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நிறைமாத கர்ப்பிணி உடல் சிதறி பலி, கருவிலிருந்த குழந்தையும் சிதறிய பரிதாபம்

பாதுகாப்பு வலயத்தில் சிங்கள படையினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் நிகழ்ந்த படுகொலை ஒன்று, ஈழத்தமிழினம் இதுவரை சந்தித்திராத கொடூரம் மிக்க அவலத்தை நேற்று செவ்வாய்கிழமை வன்னியில் சந்திக்க நேர்ந்துள்ளது.

அரசினால் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வீசிய எறிகணை ஒன்று வீட்டுக்கூரையில் வீழ்ந்து வெடித்ததினால் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பிளவுண்ட நிலையில், அப் பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உருக்குலைந்து உடல் சிதறி துடிதுடித்துப் பலியான பரிதாபகரமான கோரச் சம்பவம் நேற்று வன்னியில் நிகழ்ந்துள்ளது.

தாயின் வயிற்றுப்பகுதியில் உருக்குலைந்து உடல் சிதறிய குழந்தையின் எச்சங்கள் காணப்படுகின்றன

ஈழத்தமிழினப் படுகொலையை மெளனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம் இந்தப் கோரப் படுகொலையை எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றதோ..

அதேவேளை அண்மையில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கருவில் உள்ள குழந்தையொன்று தொடையில் காயமடைந்த நிலையில் பிறந்துள்ளதும் மருத்துவர்களின் தீவிர சத்திர சிகிச்சையின் மூலம் அக்குழந்தை காப்பாற்றப்பட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.