ரஷ்யப் படைகளை நவீனப்படுத்த திட்டம்

ரஷ்யாவின் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு பெரிய அளவில் ஆயுத பலத்தை சேர்க்கும் திட்டத்தை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வேடேவ் அறிவித்துள்ளார்.

உலகில் அரசியல் பதற்றமும், இராணுவப் பதற்றமும் நிலவுவதால் ரஷ்யப் படைபலத்தை நவீனப்படுத்துதல் அவசியமாகிவிட்டது என்றும், இது 2011 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேடோ அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டிருப்பது பற்றியும் பிராந்திய நெருக்கடிகள் பற்றியும் ரஷ்ய அரசு அக்கறை கொண்டுள்ளது மேலும் ரஷ்யாவின் கேந்திர முக்கியத்துவம்மிக்க அணு ஆயுதப் படைகளை நவீனப்படுத்தலுக்கு முன்னுரிமை வழங்கப்படும என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அமெரிக்கா தனது ஏவுகணை எதிர்ப்பு வலையத்தை நிறுத்தி வைக்கத் திட்டமிடுவது பற்றியும் பனிப் போர் முடிந்த பிறகு நேட்டோ அமைப்பு விஸ்தரிக்கப்படுவது குறித்தும் ரஷ்யா கோபம் கொண்டுள்ளதாக பி பி சியின் மாஸ்கோ நிருபர் தெரிவிக்கிறார்.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.