மிலிட்டரி வாகன தொழிற்சாலையில் தயாரிப்பை துவக்கியது மகிந்திரா அண்ட் மகிந்திரா

புதுடில்லி : பயணிகள் வாகனங்களை தயாரித்துக்கொண்டிருந்த மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், மிலிட்டரி வாகனங்களை தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை ஹரியானாவில் துவக்கியிருக்கிறது.


இதற்காக மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், மகிந்திரா டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ் ( எம்டிஎஸ் ) என்ற புதிய நிறுவனத்தை அமைத்திருக்கிறது. அதன் மூலம் ஹரியானாவில் ஃபரிதாபாத்தில் பிரித்லா என்ற இடத்தில் துவக்கி இருக்கும் மகிந்திரா ஸ்பெஷல் மிலிட்டரி வெகிக்கிள் தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான இலகு ரக ராணுவ வாகனங்களை தயாரிக்கிறது. இது தவிர குறிப்பிட்ட ரக ராணுவ வாகனங்களையும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்க முடியும். இது குறித்து மகிந்திரா அண்ட் மகிந்திரா குரூப்பின் வைஸ் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்கடர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தபோது, இந்த மாதிரியான ராணுன வாகன தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் அமைத்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதலாவது என்றார். இங்குள்ள தொழிற்சாலையில் ராணுவம், பாரா மிலிட்டரி ஃபோர்ஸ், மற்றும் போலீஸூக்கு தேவையான வாகனங்களை தயாரிக்க முடியும். மேலும் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை டிசைன் செய்யவும் ஏற்கனவே இருக்கும் வாகனங்களை மாற்றி அமைக்கவும் முடியும் என்றார். அது சம்பந்தமான ஆர் அண்ட் டி வசதியும் இங்கு இருக்கிறது என்றார். வருடத்திற்கு 500 வாகனங்களை இங்கு தயாரிக்க முடியும் என்றார் அவர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.