கொழும்பு, வெள்ளவத்தையில் 23 தமிழர்கள் கைது

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் ஞாயிறு இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 23 தமிழ் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வடக்கு. கிழக்கு மத்திய மலைநாட்டைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் விடுதிகளிலும். உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியுள்ளார்கள் எனவும் தங்கியிருப்பதற்கான உறுதியான காரணத்தை தெரிவிக்க தவறியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பிரிவு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.