நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் பின்வாங்குகிறது: ரணில்

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் பின்வாங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கத்
தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன சபையை அமைப்பதற்கு ஏனைய அனைத்து கட்சிகளும் அதிக முனைப்பு காட்டி வரும் போது ஆளும் கட்சி அதனை காலம் தாழ்த்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே சிறுபான்மை கட்சிகளினால் பரிந்துரை செய்யப்பட்ட பிரதிநிதிக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.

17 ஆவது திருத்தச் சட்ட மூலம் பூரணமாக அமுலாக்கப்படுவதன் மூலம் நாட்டில் நல்லாட்சி ஏற்படும் எனவும், அவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்படுவதனை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விரும்பவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் கிளர்ச்சியாளர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.