2ம் இணைப்பு)பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஆணையகத்தின் முன்பாக உரிமைப் போர் பேரணி: 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை, சுவிஸ் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டற ‘உரிமைப்போர்’ பேரணி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

பிறசல்ஸ் நோத் (Gore de Nord bd Albert 11) பிரதான தொடருந்து நிலைய முன்றலில் இருந்து முற்பகல் 11:00 மணிக்கு தொடங்கிய பேரணி, அங்கிருந்து 5.5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்தை 5 மணி நேரத்தின் பின்னரே சென்றடைந்தது.

இதனால் பெல்ஜியத் தலைநகரின் போக்குவரத்துக்கள் பல மணி நேரம் இடைநிறுத்தப்பட்டன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையையும், தமிழீழ மக்களின் அரசியல் தலைமையான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அங்கீகரிக்கக் கோரியும், பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைக் தடுத்து நிறுத்தக்கோரியும் இப்பேராட்டம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

வன்னியில் போர் முற்றுகைக்குள் அல்லற்படும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன.

இப்பேரணியில் கலந்து கொண்ட மக்கள்,

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு

தமிழீழமே எமக்கான தீர்வு

எங்கள் தேசியத் தலைவர்; தலைவர் பிரபாகரன்

எமது போராட்டம் விடுதலைக்கானது

சிறிலங்கா; ஒரு பயங்கரவாத அரசு

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்து

போன்ற உரிமை முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பல்லாயிரக்கணக்கில் தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்கள் மற்றும் தமிழீழ தேசியக் கொடிகளையும் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தாங்கிச் சென்றனர்.

அனைத்துலக சமூகத்தை நோக்கிய மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை எடுத்துரைக்கும் பதாகைகள் மற்றும் தமிழீழ மக்கள் மீதான சிறிலங்கா போரினவாத அரசின் இன அழிப்பினை வெளிப்படுத்தும் பதாகைகள், படங்களையும் மக்கள் தாங்கிச் சென்றனர்.

பிற்பகல் 4:00 மணிக்கு பேரணி ஐரோப்பிய ஆணையகத்தைச் சென்றடைந்ததை அடுத்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுக்கூட்டத்தில் பிரித்தானியாவின் சமத்துவ இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த Duncan Chappel நோர்வேயின் சமத்துவ இடதுசாரிக் கட்சி இளையோர் அணி மத்திய குழு உறுப்பினர் Simon S Strumse ஐரோப்பிய, கனடா தமிழ் இளையோர் பிரதிநிதிகள் கண்டன உரை நிகழ்த்தியமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.