கட்சி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் அருண் ஜெட்லி : பா.ஜ., கட்சி பிளவு அதிகரிப்பு

புதுடில்லி : பா.ஜ., கட்சி உட்பிளவை உறுதி செய்யும் வகையில் பா.ஜ., கட்சி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் அருண்ஜெட்லி. டில்லியில், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூடி ஆந்திரா ; குஜராத் ; டில்லி மற்றும் உ.பி., மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம்ந‌டந்தது. கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை அருண்ஜெட்லி புறக்கணித்தார். மார்ச் 13ம் தேதி நடந்த கூட்டத்தையும் ஜெட்லி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்‌தக்கது .


லோக்சபா தேர்தல் பிரசார பொறுப்பில் உள்ள ஜெட்லி இப்படி இரண்டு முறை கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளது பா.ஜ., மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அருண் ஜெட்லி கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் , மிட்டல் என்பவருக்கு வடகிழக்கு பிராந்தியத்தின் தேர்தல் பிரசார பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதை எதிர்த்துள்ள அருண்ஜெட்லி கட்சி மேலிடத்துடன் பனிப்போர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது .

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.