சென்செக்ஸ்: நேற்று ஜோர்; இன்று டல்!

மும்பை: வாரத்தின் முதல் நாளான நேற்று சாதகமாக நடந்த பங்கு வர்த்தகம், இன்று மீண்டு எதிர்மறைப் போக்குக்கு மாறியுள்ளது.

நேற்று வர்த்தக நேரமுடிவில் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து மொத்தக் குறியீட்டெண் கிட்டத்தட்ட 9000யை நெருங்கியது. ஆனால் இன்று ஆரம்பமே பெரும் மந்த கதியில் இருந்தது. குறிப்பாக டெக்னாலஜி துறை சார்ந்த பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.

முற்பகல் 11 மணிக்கு சென்செக்ஸில் 27 புள்ளிகள் வரை சரிந்திருந்தது. ஆனால் நிப்டியில் 5 புள்ளிகள் அதிகரித்தே காணப்பட்டது. எனவே பங்குகள் வர்த்தகம் சரிவிலிருந்து மீள வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி நிலவியது. கிரெடிட் கார்டு பாக்கி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை பெறுமளவு அதிகரித்துவிட்டதாகவும், இது வங்கியின் வருவாயை அடியோடு முடக்கிவிட்டதாகவும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி வெளிப்படையாக அறிவித்துவிட்டதால், பல வங்கிகளின் பங்குகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. டோவ் ஜோன்ஸ், நாஸ்டாக் இரண்டிலுமே குறியீட்டெண்கள் சரிந்தன.

சென்செக்ஸ் தவிர்த்த ஆசியாவின் பிற பங்குச் சந்தைகளான நிக்கி, டாபிக்ஸ், ஹாங்க்ஸெங் மற்றும் சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் சந்தைகளில் இன்று சாதகமான போக்கே நிலவுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.