கார்ப்பொரேஷன் வங்கி ரூ.ஒருலட்சம் கோடி வர்த்தகம்: தலைவர் தகவல்

காரைக்குடி: கார்ப்பரேஷன் வங்கி ரூ.ஒரு லட்சம் கோடி வரை வர்த்தகம் செய்துவருவதாக தலைவர் ஜெ.எம்.,கர்க் தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் கார்ப்பரேஷன் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. கிளை மற்றும் ஏ.டி.எம்., மையத்தை அழகப்பா பல்கலை., துணைவேந்தர் பி.ராமசாமி திறந்து வைத்தார். வங்கி பொது மேலாளர் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார்.


மண்டல துணைபொது மேலாளர் எஸ்.பட்டாபிராமன் வரவேற்றார். குத்துவிளக்கேற்றி வைத்து ஜெ.எம்.,கர்க் பேசுகையில், ‘நாட்டில் வங்கிக்கு 1,044 கிளைகளும், 1027 ஏ.டி.எம்.,களும், தமிழகத்தில் 113 கிளைகள், 114 ஏ.டி.எம்.,களும் செயல்படுகின்றன. வங்கி ரூ.ஒரு லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்கிறது. கிராமபுற மக்களின் வளர்ச்சிக்கு உதவுவது இந்த வங்கியின் நோக்கம்’ என்றார். கிளை மேலாளர் எஸ்.நாச்சியப்பன், வயிரவன்கோயில் டிரஸ்ட் தலைவர் திருநாவுக்கரசு, தொழில் வணிக கழக தலைவர் முத்து.பழனியப்பன், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி உட்பட பலர் பங்கேற்றனர். கிளை மேலாளர் எஸ்.நாச்சியப்பன் நன்றி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.