மக்களை மீட்கும் கோரிக்கைகளை இலங்கை அரசு மெல்லத் தட்டிக்கழிப்பு “ஹிந்து” பத்திரிகை தகவல்

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவத் தயார் என அமெரிக்காவும், இந்தியாவும் முன்வந்த போதிலும் இலங்கை அதனைப் பவ்வியமாக நிராகரித்து விட்டது. என இந்தியாவின் “ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரிட்டனின் கான்ஸவேர்ட்டிவ் கட்சியின் நிழல் பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தார் என இந்தியாவின் “ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லியாம் பொக்ஸ் உடனான உரையாடலின்போது வன்னி மக்களை வெளியேற்றும் திட்டமொன்றுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் உதவ முன்வந்தமை குறித்தும் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கை இதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது என போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்களை விடுவிப்பதற்குக் காட்டிவரும் கடும் எதிர்ப்புக் காரணமாகவே தங்களால் மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு இணங்க முடியாமலுள்ளது என்றும் போகொல்லாகம லியாம் பொக்ஸிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார் என்று மேலும் அப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.