’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்”

ஈழத்தமிழர்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் அனுப்பி உதவி செய்யவிருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களுடன், குளிப்பதற்கான சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை ஆகிய பொருட்கள் மற்றும் சமையல் செய்வதற்கான எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கேற்ற வகையில் தனித்தனியே சிப்பங்களாக தயார் செய்து விரைவில் அனுப்பப்படவுள்ளன.

இந்தப் பொருட்கள் இந்திய அரசின் அனுமதியுடன் இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு, முறையாக பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும். அந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சமையல் பாத்திரங்களை முதலமைச்சர் கருணாநிதி 14.3.2009 அன்று பார்வையிட்டு தேர்வு செய்தார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.