கொழும்பில் 20 தமிழ் இளைஞர்கள் கைது

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் 4 பெண்கள் உட்பட 20 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியால் நடந்து சென்றவர்களை வழி மறித்து விசாரணை நடத்திய காவல்துறையினரும் ஊர்கவல் படையினரும் இவர்களை கைது செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் அந்த பிரதேச காவல்துறை நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றத்தடுப்பு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியான கம்பகா, நீர்கொழும்பு மினுவாங்கொட மற்றும் களுபோவில, பாணந்துறை களுத்துறை ஆகிய இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கொழும்பிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் நாளுக்கு நாள் தேடுதல், சோதனை நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை ஆகிய வர்த்தக நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதலில் ஐந்து மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.