இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம்-ஹாரியை கொல்ல தீவிரவாதிகள் சதி

இங்கிலாந்து பட்டத்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதிகளின் மகன்கள் வில்லியம்,ஹாரி.இவர்கள் இருவரும் இப்போது இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து போர் பயிற்சி பெற்று வருகின்றனர்.இங்கிலாந்தில் அயர்லாந்து தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.அவர்கள் வில்லியம்,ஹாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் வடக்கு அயர்லாந்தில் தீவிரவாதி ஒருவன் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 2-பேரையும்,போலீஸ் அதிகாரி ஒருவரையும் சுட்டுக்கொன்றான்.அவனை போலீசார் தேடிவருகின்றனர்.இதில் தொடர்புடைய வேறு 3-பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளவரசர்கள் 2-பேரையும் தீவிரவாதிகள் கொல்ல சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இளவரசர் இருவருக்கும் போலீஸ் பாதுகப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இருவருடனும் எப்போதும் 2-மெய்க்காப்பாளர்கள் உடன் இருப்பார்கள்.

இப்போது 3-மெய்க்காப்பாளர்களை அமர்த்தி உள்ளனர்.அவர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

Source & thanks: lankasri

Leave a Reply

Your email address will not be published.