மார்க்சிஸ்ட் கம்யூ., கொள்கைகள் மக்கள் நலனுக்காக ; ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் பணக்காரர்களுக்காக : கராத்

புதுடில்லி : மார்க்சிஸ்ட் கம்யூ., கொள்கைகள் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது , என அக்கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார்.டில்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் கொள்கைகளை வெளியிட்டது.


தேர்தல் கொள்கைகளை வெளியிட்டு பேசிய கராத் கூறியதாவது : காங்கிரஸ் ஆட்சியில் பணக்காரர்களுக்கும் – ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசியல் கொள்கை . ஐக்கிய முற்போக்கு கூட்டணி செல்வந்தர்களுக்காக கொள்கைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகள் மக்களுக்காக அமைந்துள்ளது .

வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூன்றாவது அணி என்றால் என்ன என்று தெரியாது என கூறியுள்ளார். அது என்ன என்றும் அதன் சக்தி என்ன என்றும் அவர் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் புரிந்து கொள்வார். தேர்தலுக்கு பின் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமையும் . மதச்சார்பின்மையை பறைசாற்றும் வகையில், மதக்கலவரங்களுக்கு எதிராக முழுமையான சட்டம் அமல் படுத்தப்படும் . பொருளாதார கொள்கைகள் மேம்படுத்தப்படும் . அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகள் சீர்திருத்தப்படும் .வெளிநாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் இந்திய பணங்களை வெளியில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.