டிஸ்கவரி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வீரகேசரி இணையம் 3/16/2009 1:31:23 PM – அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி சுமார் ஒரு மாத கால தாமதத்துக்கு பின் நேற்று ஏழு பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இந்நிலையில் அதன் வால்வு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதே தொடர்ந்து கடந்த 11ம் தேதி புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐதரசன் வாயு கசிவு காரணமாக இரண்டாவது முறையாகவும் அதன் பயணம் தாமதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை கேப் கனவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 7 விஞ்ஞானிகளுடன் சென்றுள்ள இந்த விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைய இரண்டு நாட்கள் ஆகும். இதில் கொண்டு செல்லப்படும் சோலார் பேனல் அங்கு நிறுவப்பட இருக்கிறது.

இரண்டு முறை தாமதமானதையடுத்து இந்தப் பயணத்தின் மொத்த நாட்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. இதில் செல்லும் விண்வெளி வீரர்கள் முதலில் நான்கு முறை விண்வெளியில் நடக்க திட்டமிட்டிருந்தனர். இதுவும் மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 26ஆம் தேதி ரஷ்யா தனது வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. E-mail to a friend

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.