‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (16.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி , மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 62 தமிழ் பொதுமக்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் மாத்தளன் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 127 பேரில், 20 பேர் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியான மாத்தளன் பகுதியில் சனிக்கிழமை இரவு இலங்கை இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதுமாத்தளனில் இயங்கி வந்த மருத்துவமனை காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் பன்டேஜ் துணி முடிவடைந்த நிலையில் படுக்கை விரிப்புகளை கிழித்து காயங்களுக்கு மருந்து கட்ட பாவிப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முக்கியமான மருந்துகள் இல்லாமையினால் சத்திர சிகிச்சை எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் மேலதிக துருப்புக்களை படையில் இணைக்கத் தீர்மானித்துள்ளதாக இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அம்பேபுஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் படையினர் புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக யுத்தததை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் படையினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்படும் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்த அதிக எண்ணிக்கையிலான துருப்பினர் தேவைப்படுவதாகவும், இதன் காரணமாகவே புதிதாக இராணுவப் படைக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளத் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
வடக்கில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களினால் பிரதேச மக்கள் தமது சொந்தங்களை பிரிந்து வாழ வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொதுமக்கள் சொந்தங்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெயர நேரிட்டுள்ளமையினாலும், இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்தங்களுடன் உரிய முறையில் தொடர்புகளை ஏற்படுத்த முடியாமையினாலும் சொந்தங்களை பிரிந்து வாழ நேரிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.
குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர் மக்கள் உயிருடன் இருக்கின்றனா அல்லது காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்து அறிந்து கொள்ள புலம்பெயர் சொந்தங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வரையறுக்கப்பட்ட வசதிகளின் காரணமாக உரிய முறையில் சொந்தங்களுடன் தொடர்புகளைப் பேண முடிவதில்லை என குறிப்பிடப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!
போர்க் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்கள் சரியானது என .நா.வின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் றூபெட் கொல்விலி தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே.
சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை பலதரப்பு தகவல்களுடன் ஒப்பிட்ட பின்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே கடந்த வெள்ளிக்கிழமை எமது அலுவலகம் வெளியிட்ட தகவல் சரியானது என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.நா.மனித உரிமைகள் ஆணையாளரை குறை கூறுவதைத் தவிர்த்து வவுனாய முகாம்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வெண்டும் என நாட்டின் எதிரணியான .தே.கயின் பா. மருத்துவர் ஜயல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பில் நேற்று முந்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோர் அவரின் அறிக்கைக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்ததுடன் அறிக்கையில் குறைபாடுகளையும் தெரிவித்தனர்.

மனித உரிமை தொடர்பில் இங்குள்ள .நா. பிரதிநிதிகளிடமே முதலில் இது குறித்து கேட்பது அவசியம் அவரைக்குறை சொல்வதில் பலனில்லை.

இதற்காக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்கு எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்குவது அவசியம் இதன் மூலம் உண்மை நிலவரம் வெளியில் வரும் எனவும் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டஉதயன்மற்றும்சுடரொளிபத்திரிகைகளின் ஆசிரியர் .வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது என்று அவுஸ்திரேலிய நிருபரிடம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்துள்ளார்.
கொழும்பில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் கரும்புலித் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி கொழும்பில் கடந்த மாதம் 26 ஆம் நாள் .வித்தியாதரன் கடத்தப்பட்ட பின்னர் கைது என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின்டேட் லைன்என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், .வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோது கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்தவாறு பதில்களை வழங்கினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை பாலையூட்டு பகுதியில் 6 வயது சிறுமியைக் கடத்தி கப்பம் கோரி பின்னர் கொலை செய்த சம்பவத்தில் If;fpauhr;rpaj;jpy; rpiwj;jz;liz ngw;wtUk; mikr;rUk; MAjjhupAkhd கருணா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது காவல்துறையின் விசாரணையின் மூலம் அம்பவலத்திற்கு வந்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி பயிலும் பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி கடத்தி செல்லப்பட்டார் . இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார

இக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பிரதான சந்தேக நபரான மேர்வின் டியூரின் மருத்துவ பரிசோனைக்காக திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் கடற்கரை காவல் சோதனைச்சாவடிக்கு முன்னால் காவற்துறையினரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த காவற்துறையினரால் சுடப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்If;fpauhr;rpaj;jpy; rpiwj;jz;liz ngw;wtUk; mikr;rUk; MAjjhupAkhd கருணா அமைப்பின் திருக்கோணமலை பொறுப்பாளர் ஜனார்த்தனும் கைது செயப்பட்டவர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரிடம் இருந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை காவற்துறையினர் தேடிவருகின்றனர்.
இக்கொலை தொடர்பான முக்கிய சந்தேக நபர்இ கணனி பயிற்றுவிப்பாளரும் சிகரம் இணைய வானொலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த நிலையில் சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையும் கைப்பற்றியுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது வானொலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கருணா அணி முக்கயஸ்த்தர் ஜனார்த்தனனுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்படவர்களில் மற்றுறொரு இளைஞர் திருகோணமலை காவற்துறைத் தலைமையகத்தின் பெண் காவற்துறைச் சிப்பாய் ஒருவரின் மகன் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யூட் ரெஜி வர்சாவின் இறுதி சடங்குகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் , தாக்குதல் தவிர்ப்புக் கால எல்லையை மதித்து நடப்பார்கள் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக் கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக வும் அவர்களுக்கு மனிதாபிமான உதவி கள் கிடைப்பதற்காகவும் இராணுவ நடவ டிக்கைகளை இடைநிறுத்துமாறு சர்வதேச சமூகம் வேண்டுகோள் விடுத்து வருவது தெரிந்ததே. இந்தப் பின்னணியில்
இராணுவத்தினர் விடுதலைப் புலிக ளின் தாக்குதலுக்கு உட்படாத, பாதுகாப் பான பகுதிகளுக்குள் சென்றதும் தற்கா லிக தாக்குதல் தவிர்ப்புக்கு நான் தயார் என “ஜனாதிபதி குறிப்பிட் டுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங் களைக் கீழே போட்டால் இயல்பாகவே யுத்தநிறுத்தம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதி ரான இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத் துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இவ்வாறு அரசு அறிவிக்கும் இடைநிறுத்த அறிவிப்பை விடுதலைப் புலிகள் மதிப்பார்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

ஜனவரி 30ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக இலங்கை அரசு 48 மணித்தியால கால அவகாசத்தை வழங்கியது.

எனினும், விடுதலைப் புலிகள் இதற்கு சாதகமான சமிஞ்ஞைகளை வெளிப்படுத்தாததுடன் அப்பாவிப் பொதுமக்கள் வெளியேறவும் அனுமதிக்கவில்லை.

மேலும் இலங்கை இராணுவத்தைத் தாக்குதலை இடைநிறுத்துமாறு பணித்த 24 மணி நேரம் முடிவடைவதற்குள் விடுதலைப் புலிகள் எமது முன்னரங்குகளைத் தாக்கியதுடன் 150 இராணுவத்தினரைப் படுகாயப்படுத்தினர் .

தாக்குதல் தவிர்ப்புக் காலமொன்று நடைமுறையாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
48
முதல் 72 மணி நேர தாக்குதல் தவிர்ப்புக் காலத்தை அறிவிப்பது யுத்த நிறுத்தத்திற்கு சமன். இவ்வாறான நடவடிக்கை அர்த்தமற்றது.
மற்றொரு சந்தர்ப்பத்தை எவ்வாறு வழங்குவது?

எமது முன்னைய அறிவிப்பை மதிக்காமல், எனது கட்டளைப்படி 48 மணித்தியாலங்கள் தாக்குதல் தவிர்ப்பினை மேற்கொண்ட எமது படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு, அவர்களைக் காயப்படுத்திய பிரபாகரன் மற்றும் அவர்களது உறுப்பினர்களுக்கு எவ்வாறு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவது ?
தற்போதைய சூழலில் நாங்கள் யுத்த நிறுத்தம் அல்லது தாக்குதல் தவிர்ப்பு காலம் குறித்து சிந்திக்க முடியாது.

தாக்குதல் தவிர்ப்பு காலப் பகுதியில் எமது படையினர் தாக்கப்பட்டால் அதற்கு நானே பொறுப்புக் கூறவேண்டும்.
எனினும், எமது படையினர் பாதுகாப்பான பகுதிக்குள் சென்றவுடன் எதிரியின் தாக்குதல்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் , நாங்கள் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மற்றுமொரு மோதல் தவிர்ப்பு கால எல்லையை அறிவிப்போம்.

இலங்கை அரசு ஏற்கனவே இரண்டு பாதுகாப்பு வலயங்களை அறிவித்துள்ளது. அந்தப் பாதுகாப்பு வலயங்கள் ஊடாக எவரும் இராணுவத்திடம் பாதுகாப்புக் கோரலாம். விடுதலைப் புலிகளும் வரலாம்.

அரசு பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்தையும் செய்கிறது. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள வேண்டாமென இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபாகரனும் அவரது உறுப்பினர்களும் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதில்லை. அவர்கள் தப்பியோடும் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.
கூட்டமைப்பை 3 தடவகைள் பேச்சுக்கு அழைத்தேன்

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தொலைபேசி உரையடலின்போது அரசியல் தீர்வொன்றை உருவாக்குமாறு என்னைக் கேட்டார்.

தொடரும் மோதல்களை ஆதரிக்காத தமிழ் மக்களை உள்வாங்குவதற்காக யோசனையொன்றை முன்வைக்குமாறு கோரினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூன்று தடவைகள் பேச்சுக்கு அழைத்தேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே பேச்சுமூலமான தீர்வு முயற்சிகள் தாமதமடைகின்றன.விடுதலைப் புலிகளின் தலைவரின் உத்தரவின் காரணமாக அவர்கள் இதற்கு இணங்கவில்லை.

இலங்கை அரசுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டாமென பிரபாகரன் கடும் உத்தரவிட்டுள்ளார் .

இலங்கை ஜனாதிபதி என்ற வகையில் நான் அவர்களுக்கு பேச்சிற்கான அழைப்பை விடுக்கிறேன் . எனினும் அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் எம்முடன் பேசுமாறு அழைக்கின்றனர்.தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமது யோசனைகளை முன்வைத்து எம்முடன் பேச முன்வராதபோது எப்படித் தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

நாங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி செவிமடுக்கத் தயாராகவுள்ள போதிலும் அவர்கள் அதற்குத் தயா ரில்லைஎன்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது. 13 ஆவது திரு த்தத்தை தாண்டி அதிகாரப்பகிர்வுக்கு நாம் செல்லவேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டியேற்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு முறைமைக்கு செல்ல முன்னர் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். யுத்தத்தினால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றும் அதிகாரப்பகிர்வில் அமைந்த அரசியல் தீர்வுக்கு செல்லவேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கூற்றுடன் எமக்கு உடன்பாடு உள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காகவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்.

ஆனால் அதற்கு முன்னர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். அதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. முக்கியமாக பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லாமல் பயங்கரவாதத்தை தோற்கடித்து அப்பகுதிகளில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே எமது நோக்கமாகும்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் அதிகாரப்பகிர்வு குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார் . அந்த கூற்றுடனும் நாம் உடன்படுகின்றோம். அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.
ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தாண்டி செல்லவேண்டுமானால் நாங்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டியுள்ளது. அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டிவரும். இவற்றில் எதனையும் செய்யாமல் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்ல முடியாது.
காரணம் அரசியலமைப்பில் மாற்றம் செய்யவேண்டிவரும். அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று வரும்போது எமக்கு முன்பாக இரண்டு தெரிவுகள் இருக்கும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எந்த தெரிவை மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய முடியும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மோதல் காரணமாக வன்னியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையே முன்னெடுக்க வேண்டும். இந்த உறுதியான நிலைப்பாட்டுடன் இந்தியா உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்திற்கு அமெரிக்கா தலைமை வகிக்க வேண்டுமென்ற இணைத் தலைமை நாடுகளின் தீர்மானம் குறித்து இந்தியா கடும் அதிருப்தியடைந்துள்ள துடன், அந்நாட்டு அரசாங்கம் இது குறித்த தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசே அமெரிக்காவைக் கேட்டது என்றும் , அதனை இந்தியா தவறாகப் புரிந்துகொண்டு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மக்களை வெளியேற்றும் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை. இந்தியா அதனை வரவேற்கின்றது . எனினும் இந்தத் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைமுன்னெடுப்பது சிறந்தது என இந்தியா கருதுகின்றது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பதினான்கு பேர் படு காயமடைந்தனர் என தேசிய பாதுகாப் பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று அறிவித்தது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூர் பணியாளரான சுதர்ஷனி தர்மிளா என்பவரும் அடங்குவார் என்று அந்த நிலையம் விடுத் துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டது.

காயமடைந்தவர்கள் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து 592 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்த சமயமே புலிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் பொதுமக்களின் நிலைமையை ஆராய சர்வதேசப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உண்மையை புரிந்து கொள்ள முடியும் என விடுதலைப் புலிகள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துவருவது தொடர்பான கருத்துத் தெரிவிக்கையி
இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் மற்றம் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடாத்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்துவதை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் நன்கு அறிவார்கள். தொண்டு நிறுவனத்தின் பணியாளர் கூட இறந்துள்ளார். மற்றொரு பணியாளர் காயமடைந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவந்த அனைத்து வைத்தியாலைகள் மீதும் தாக்குதல் நடாத்தியமையினால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை அரசு மருந்துப் பொருட்கள் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது.

இவ்வாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் உறுதி செய்வதற்கு சுயாதீனமான சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உண்மை வெளிவரும் எனத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தெல்லிப்பழையில் உள்ள சோதனைச் சாவடியிலிருந்து தெல்லிப்பழை மகா ஜனாக்கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கும், நோயாளர்களை தெல் லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றிச்செல்வதற்குமென புதிய பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலி படைத்தலைமையகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்ற உயர்மட்டக்குழுக் கூட்டத் தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
உயர்மட்டக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா தலைமையில் அரச அதிபர், யாழ்.பொலிஸ் அத்தியட்சகர், யாழ்.படைத்தளபதி, யாழ்.கடற் தளபதி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சோதனைச் சாவடிக்குட்பட்ட பிரதேசத்தில் வீதி திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருத்தப்பணி முடிந்ததும் இப்பாதையூடான போக்குவரத்துக்கென பஸ்வண்டி கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டதும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது.
அண்மைக்காலங்களாக சோதனைச்சாவடியிலிருந்து மாணவர்களும், நோயா ளர்களும் முறையே பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் நடந்தே சென்று வருகின்றனர்.

இதேவேளை தெல்லிப்பழைப் பிரதே சத்தில் கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப் பணி நிறைவடைந்ததும் இடம்பெயர்ந்த வர்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர் என மேலும் தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
9 வீதியை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவிட முடியும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். 9 வீதியை புனரமைக்க பிரா ன்ஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஏ9 வீதி மக்கள் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் ? என்று வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது ஏ9 வீதியை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மக்களின் பாவனைக்காக திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தற்போதைய நிலைமையில் பாதையின் இரு மருங்கிலும் 5 மீற்றர் தூரத்துக்கு நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இது தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சிலிருந்து கிடைக்கபெற்றதும் வீதியை திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். ஆனால் இதுவரை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை கிடைக்கவில்லை .
இந்த வீதி இராணுவ போக்குவரத்துக்காக அண்மையில் திறக்கப்பட்டது. இது அபிவிருத்தி அதிகாரசபையின் கிழ் வருகின்ற வீதியாகும். இந்நிலையில் வீதியின் குறிப்பிட்ட பிரதேசங்களில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படும். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதேவேளை 9 வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்காக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவுள்ளன. இவ்விடயம் தொடர்பில் உதவிகளை வழங்குவதற்கு பிரான்ஸ் தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகள் முறைப்படி இடம்பெறும். அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!$
மேல் மாகாண சபைத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தனது பிரசார நடவடிக்கைகளை இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவிருக்கின்றது.

பிரசார நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவினால் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.

பிரசார நடவடிக்கையின் ஒரு கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகக் கட்சி அறிவித்துள்ளது.
அதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தங்களது பிரசார நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. தமது நடவடிக்கைகளை இவ்வாரம் முதல் தீவிரப்படுத்தவுள்ளதாக அவை அறிவித்துள்ளன
. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார நடவடிக்கைளை முன்னெடுப்பதற்காக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்ற அதேவேளை மூன்று மாவட்டங்களையும் மையப்படுத்தி நான்கு பிரதான கூட்டங்களை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் தமிழகத்தில் நேற்று இருவர் தீக்குளித்தனர். இவர்களில் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சியையும் மற்றொருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவிழியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரான இராஜசேகர் (வயது 30), ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எண்ணி, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது .
ஒரு கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கப் போவதாக இராஜசேகர் கூறியிருக்கின்றார் . இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் ரோகம்பா, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன் தீக்குளிக்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறியிருக்கிறார்.
ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும்
மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அவரின் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தீக்குளித்த இராஜசேகர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார்.
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொருவரின் பெயர் ஆனந்த் (வயது 23). கடலூரை அடுத்த அன்னவெலி சிற்றூரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகனான இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டராக உள்ளார்.
ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்த் மனவேதனை அடைந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென தனது வீட்டிற்கு வெளியே நடுத் தெருவில் நின்றபடிஇலங்கைத் தமிழர்கள்!” வாழ்க
என்றும், “இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்என்றும் ஆவேசமாக முழக்கமிட்டபடியே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .
இவர் தீயிட்டுக் கொள்வதைத் தடுக்கப் பலர் முயற்சித்த போதிலும், அவர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தீயிட்டுக் கொண்டார். உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர் . அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆனந்த், இராசசேகரன் ஆகிய இருவருக்கும் 99 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கொளத்தூர் முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம், சிறீதர் என்கிற எழில்வளவன், கடலூர் தமிழ்வேந்தன், சிவகாசி கோகுலரத்னம், வாணியம்பாடி
வள்ளப்பட்டு சீனிவாசன் ஆகிய 9 பேர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கடலூர் ஆனந்தும், தத்தனூர் கீழவெலியைச் சேர்ந்த இராசசேகரும் தீக்குளித்திருக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் தென்பகுதி கர்நாடக மாநில கடற்கரையில் தயாரிக்கப்படும் திரைப்படம் ஒன்றிலே காட்சியின் பின்னணியாக இருப்பதற்கென கடற்கரையில் 20 மீட்டர் உயரத்தில் காலஞ்சென்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் உருவச் சிலை ஒன்று எழுப்பப்படும் முயற்சிகளை இந்து மத ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
கடற்கரையில் கட்டுமான வேலைகளைக் குழப்பியதோடு அஸ்திவாரம் போடுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழிகளையும் அவர்கள் நிரப்பி மூடியிருந்தனர்.
இது குறித்து திரைப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் ஹெக்டே கருத்துவெளியிடுகையில், கிறிஸ்தவர் ஒருவரின் உருவச் சிலை தமது கோவிலுக்கு அருகில் எழுப்பப்படுவதை இந்து ஆர்வலர்கள் எதிர்த்தபடியால், வேலைகளை தாம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார
!!!!!!!!!!!!!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு. . கூட்டணியிலேயே நீடிக்கும் என்று தி.மு.. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்கள் ஆதரவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ள நிலையில், தி.மு..-காங்கிரஸ் கூட்டணியில் அவரது கட்சி நீடிப்பது என்பது சர்ச்சையைக் ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில்தான், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தமது கூட்டணியில் நீடிக்கும் என்று தி.மு.. தலைவர் கூறியுள்ளார்.
காங்கிரஸைச் சாடியதோடு காங்கிரஸ் தலைவர்களின் உருவப்படங்களை எரித்த விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி சேர இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு சில நாட்கள் முன்பு சொல்லியிருந்தார். ஆனால் கருணாநிதியின் இன்றைய கருத்து பற்றிக் கேட்டபோது, கூட்டணி பற்றி தமது கட்சியின் தேசியத் தலைமையே முடிவெடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவை யாருடன் அணிசேருகின்றன என்ற விபரம் இன்னும் தெளிவடையவில்லை.
!!!!!!!!!!!!!!
கர்நாடக மாநிலம் உடுப்பியில், இந்து கோவிலுக்கு அருகே சார்லி சாப்ளினின் சிலையை நிறுவுவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து சிலையை பெங்களூர் அருகே நிறுவ பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் காமெடி நடிகர் சார்லி சாப்ளின் . உலகப் புகழ் பெற்ற சாப்ளினுக்கு இனம், மொழி பேதம் இல்லாமல் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது சிலையை உடுப்பி, பைந்தூர் அருகே உள்ள ஓதினானே என்ற இடத்தில் நிறுவன கன்னட திரைப்பட இயக்குநர் ஹேமந்த் ஹெக்டே திட்டமிட்டார்.

அங்குள்ள சோமேஸ்வரர் கோவிலுக்கு அருகில் சார்லி சாப்ளினின் 67 அடி உயர சிலையை வைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணி கடந்த 5ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இந்த சிலைக்கான பணிகள் தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது . இந்துக் கோவிலுக்கு அருகில் கிறிஸ்துவரான சார்லி சாப்ளினின் சிலை அமைக்கப்படுவதால் இந்துக்களின் மனது புண்படுத்தப்படுகிறது என இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர் .

நேற்று முன்தினம் சுரேஷ் பட்வாடி என்பவர் தலைமையில் வந்த இந்து அமைப்பினர் சிலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து ஹேமந்த் ஹெக்டே கூறுகையில், இந்து அமைப்பினரின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. இவர்களிடம் சார்லி சாப்ளின் போன்ற தலைசிறந்த கலைஞர்களுக்கு கூட மரியாதை கிடைப்பதில்லை.

இம்மாவட்டத்துக்குள் இந்த சிலையை நிறுவ நினைத்ததால் அதை உடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

உடுப்பி மாவட்ட போலீஸ் கமிஷ்னர் அனுமதி அளித்த போதும் பணிகளை தொடர தயக்கமாக இருக்கிறது. ஒரு புகழ் பெற்ற காமெடி நடிகரின் சிலை கலவரமான சூழ்நிலையில் உருவாக கூடாது.

சிலையை வேறு இடத்திற்கு மாற்ற யோசித்து வருகிறேன். அனேகமாக பெங்களூரில் சிலையை நிறுவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். திரையுலகினருடனும் ஆலோசனை செய்வேன் என்றார்
!!!!!!!!!!!!!!!!
மதிமுகவிலிருந்து விலகி விட்ட அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும், முன்னாள் எம்.எல்.. டி.கே.சுப்ரமணியமும் வருகிற 23ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்.

முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தது தொடர்பாக கண்ணப்பனுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த கண்ணப்பன் மதிமுகவை விட்டு விலகினார். தனது எம்.எல்.. பதவியையும் ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் டி.கே.சுப்ரமணியமும் ராஜினாமா செய்தார்.

இவர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், வருகிற 23ம் தேதி திமுகவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து சுப்ரமணியம் கூறுகையில் , 23ம் தேதி திமுகவில் இணையலாம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதன்படி 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் , கண்ணப்பனும், நானும், எங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறோம்.

பல்வேறு மாவட்டச் செயலாளர்களும் மதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடனும் பேச்சு நடந்து வருகிறது என்றார் சுப்ரமணியம்.
!!!!!!!!!!!!!!!!
லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு 1700 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து கடந்த 5ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேற்றுடன் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கும், வழங்குவதற்கும் கெடு முடிந்தது.

கடைசி நாளான நேற்றுடன் கிட்டத்தட்ட 1700 மனுக்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

கடைசி நாளாக நேற்று மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, .ராசா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் .
மதுரையில் மு..அழகிரி போட்டியிட 140 பேர் மனு செய்துள்ளனர்.

வடசென்னையில் போட்டியிட செ.குப்புசாமி எம்.பி., சிங்கார ரத்னசபாபதி, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

மத்திய சென்னையில் போட்டியிட தயாநிதிமாறன் எம்.பி. பெயரில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தென்சென்னையில் போட்டியிட நடிகர் நெப்போலியன், டி.கே.எஸ். இளங்கோவன், மு..ஸ்டாலின் மகன் உதயநிதிக்காக சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் கே.தனசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட டி.ஆர்.பாலு மனு கொடுத்துள்ளார்.

வேலூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகனின் சகோதரர் துரை சிங்காரம், கிருஷ்ணகிரி தொகுதிக்கு சுகவனம் எம்.பி., நீலகிரி மற்றும் பெரம்பலூர் தொகுதிக்கு மத்திய அமைச்சர் . ராசா, திருச்சிக்கு மத்திய மந்திரி ரகுபதி, தஞ்சாவூருக்கு மத்திய மந்திரி பழனி மாணிக்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ùTiLs úTôûRlùTôÚs ûYj§ÚlTRôL NkúR¡jRôÛm AYoL°Pm Bi A§Lô¬Ls úNôRû]«P Ø¥VôÕ G] EfN ¿§Uu\m ¾olT°jRÕ.
TgNôl EVo ¿§Uu\j§u ¾olûT G§ojÕ RôdLp ùNnR AkR Uô¨X AW£u úUpØû\ÂhÓ UàûY RsÞT¥ ùNnÕ, CkR ¾olûT A°jRÕ EfN ¿§Uu\m.
ùTiL°Pm Bi A§Lô¬Ls úNôRû] SPjÕYùRuTÕ úTôûRlùTôÚs RÓl×f NhPj§u ©¬Ü 50, ÕûQ ©¬Ü 4 B¡VYtû\ ÁßYRôLÜm ¿§Uu\m Ñh¥dLôh¥VÕ.
TgNôl Uô¨Xm AªÚRNWv UôYhPjûRf úNokR ÏoQm ùLüo, AYWÕ UÚULsLs Wg£j ùLüo, Ïo´j ùLüo B¡úVôo AiûU«p AkR Uô¨X EVo ¿§Uu\j§p Uà RôdLp ùNnR]o.
A§p, GeL[Õ Åh¥p §¼ùW] úNôRû] SPj§V úTôÄ^ôo GeLû[ ûLÕ ùNnR]o. AjÕPu, SôeLs ùaWô«u úTôûRlùTôÚs LPjÕm ùRô¯p׬YRôLÜm ùTôn Ït\fNôhÓ ÑUj§]o. Bi A§Lô¬Lú[ GeL°Pm úNôRû] SPj§]o. GeLÞdÏ ¿§ ¡ûPdL úYiÓm G] úLô¬«ÚkR]o.
CkR ¨ûX«p CûRd LY]j§p GÓjÕdùLôiP EVo ¿§Uu\m, AkR êYo ÁRô] Ït\fNôhÓ ùRôPoTôL RÏkR BRôWeLû[ NUol©dÏUôß úLhÓdùLôiPÕ. B]ôp Uô¨X AW£]ôp E¬V BRôWeLû[ NUol©dL Ø¥VôRRôp êYûWÙm YZd¡p CÚkÕ ®Ó®jÕ EjRW®hPÕ EVo ¿§Uu\m.
Ck¨ûX«p EVo ¿§Uu\ EjRWûY G§ojÕ EfN ¿§Uu\j§p úUpØû\ÂhÓ Uà RôdLp ùNnRÕ Uô¨X AWÑ. CkR YZdûL ®NôWûQdÏ GÓjÕdùLôiP ¿§T§Ls £uaô, ØÏkRLm NoUô, RjÕ B¡úVôo APe¡V ùTgf, ùTiLs úTôûRlùTôÚsLs ûYj§ÚlTRôL NkúRLm GÝkRôÛm AYoL°Pm Bi A§Lô¬Ls ®NôWûQ SPjRdáPôÕ. ùTi A§Lô¬Ls ùLôiúP ®NôWûQ SPjR úYiÓm Guß á± EjR®hPÕ.


world
TR®¿dLm ùNnVlThP RûXûU ¿§T§ Cl§Lôo ùN[j¬ ÁiÓm T¦«p AUojRlTÓYôo G] Tô¡vRôu ©WRUo ëÑl W^ô ¡Xô² A±®jRûRj ùRôPokÕ úTW¦VôLf ùNuß úTôWôhPm SPjÕm §hPjûR Tô¡vRôu ØvÄm Äd(Gu) RûXYo SYôv ù`Ãl ûL®hPôo.
SYôv ù`éu úLô¬dûLL°p TXYtû\ HtL A§To _oRô¬ Jl×dùLôiPRôL ©WRUo ëÑl W^ô ¡Xô² SôhÓ UdLÞdÏ Bt±V EûW«p ϱl©hPôo. úUÛm LPkR YôWj§p úTôWôhPm ùRôPoTôLd ûLÕ ùNnVlThP Aû]jÕ AW£Vp Lh£j RûXYoLs Utßm YZdL±OoLû[ ®ÓRûX ùNnÙUôßm ¡Xô² EjRW®hÓs[ôo. CkR NUWNj §hPm _oRô¬Vôp ¾hPlThPÕ Gu\ôo AYo.
BÞm Tô¡vRôu UdLs Lh£dÏm G§odLh£Vô] Tô¡vRôu ØvÄm Äd(Gu) Lh£dÏm CûPúVVô] úUôRûXj ùRôPokÕ Sôh¥p GÝkR AW£Vp ùSÚdL¥ûVj ¾odL úStß CWÜ A§To _oRô¬, ©WRUo ¡Xô² B¡úVôo BúXôNû] SPj§VûRj ùRôPokÕ ©WRU¬u CkR A±®l× ùY°Vô]Õ. CûRjùRôPokÕ CvXôUôTôûR úSôd¡ úTW¦VôLf ùNpÛm §hPjûRd ûL®ÓYRôL SYôv ù`Ãl A±®jÕs[ôo G] Tô¡vRôu RLYpLs ùR¬®d¡u\].

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கு பொருட்களை அனுப்பப் பயன்படும் போக்குவரத்து நிலையம் ஒன்றை பாகிஸ்தான் வன்மைவாதக் குழு ஒன்று தாக்கி 20 டிரக் வண்டிகளை அழித்துள்ளது.
பெஷாவர் நகரில் உள்ள இந்த நிலையத்தை பெட்ரோல் குண்டுகளாலும் ரொக்கெட் குண்டுகளாலும் இவர்கள் தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் இயங்கும் அனைத்துலகப் படைகளுக்கான வினியோகப் பாதைகள் மீது கடந்த பல மாதங்களில் நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதல் இது என்று கருதப்படுகிறது .

!!!!!!!!!!!!!!!!!!!!!

மடகாஸ்கர் நாட்டில் எதிர்க்கட்சியினருடன் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை விலக்க மக்கள் மத்தியில் கருத்து அறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த தாம் தயார் என்று அதிபர் மார்க் ரவாலோமனானா அறிவித்திருக்கிறார்.
தலைநகர் அண்டனனாரிவோவில் தமது அதிபர் மாளிகையிலிருந்து ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியைத் துறந்து வெளியேற வேண்டும் என்று காலக்கெடு விதித்ததிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர் அண்ட்ரி ரஜோலினா நகரின் மையத்தில் சிறிய கூட்டமொன்றில் உரை நிகழ்த்தும்போது காலாவதியாகிவிட்ட தமது காலக்கெடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
மடகாஸ்கர் நெருக்கடியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

!!!!!!!!!!!!!!!!!!

மாலைத்தீவுகளின் எரிபொருள் தேவைகளை சூரியசக்தியிலிருந்தும் காற்றிலிருந்தும் முழுமையாகப் பெறும் முறைக்கு தமது நாடு மாறும் என்றும் அடுத்த பத்து ஆண்டு காலத்திற்குள் மாலைத்தீவுகளை சுற்றாடலில் கரிம மாசுப் பொருட்களைக் கலக்காத ஒரு நாடாக மாற்ற தாம் திட்டமிட்டிருப்பதாகவும் மாலைத்தீவு அதிபர் முஹம்மது நஷீத் குறிப்பிட்டுள்ளார்.
உலக பருவநிலை மாற்றங்களை உலக நாடுகள் சரிவரக் கவனிக்காமல் விட்டால், விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பெரும்பான்மையான உலக நாடுகளைவிட மாலைத்தீவுகள் அதிகமாக உணர்ந்திருக்கிறது என அதிபர் நஷீத் பிபிசியிடம் தெரிவித்தார்.
உலகில் மிகவும் தாழ்வாக அமைந்துள்ள நாடுகளில் மாலைத்தீவுகளும் ஒன்று. எனவே கடல்மட்டம் உயர்வதால் அந்நாடு அபாயத்தை எதிர்கொள்கிறது. எனவே தாம் உருவாக்கும் திட்டம் இதர நாடுகளினாலும் கடைப்பிடிக்கக்கூடியதாக இருக்கும் என்று அதிபர் நஷீத் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!

நேபாளத்தில் மாவோயியக் கிளர்ச்சி நடந்த சமயத்திலே பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், ஊனமாக்கப்பட்டும் , ஆட்கடத்தலுக்கு உள்ளாகியும் இருந்தனர்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்காக இதுவரை ஒருவர்கூட சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை .நா.மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆட்கள் காணாமல் போனது தொடர்பாக விசாரிக்கும் விசாரணக் கமிஷன் தொடர்பில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிசெய்துவருகிறது.
ஆனால் முறையாக ஆராய்ந்தும் முழுமையாக யோசித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. நடவடிக்கைகளின் நோக்கம் தெளிவாக இல்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன .

!!!!!!!!!!!!!!!!!

1 euro = 147.00sl /66.49in
1us $ =114.00sl / 51.56in
1 swiss fr =95.88 sl /43.36 in
1 uk pound =159.84.sl /72.29 in
1 saudi riyal =30.39.sl /13.74in

Leave a Reply

Your email address will not be published.