யாழ்ப்பாணத்தில் படையினரின் உழவுயந்திரம் மீது கைக்குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் நாயன்மர்கட்டு சந்திப் பகுதியில், சிறிலங்கா படையினரின் முகாம்களுக்கு பொருட்களை விநியோகிக்க சென்று கொண்டிருந்த உழவுயந்திரத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் நாயன்மார்கட்டு பகுதியிலிருந்து அரியாலை பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இத்தாக்குதலில் உயிரிழந்த அல்லது காயமடைந்த இழப்புகள் குறித்து சிறிலங்கா படையினர் இதுவரை எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை. இத்தாக்குதலின் பின்னர் படையினர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் தாக்குதல் நடைபெற்ற வீதி மூடப்பட்டதுடன், அப்பிரதேசத்திலுள்ள வீடுகளில் உள்ள மக்கள் எவரும் வெளியே வராதவாறு இரவு 9.30 மணியிலிருந்து ஊரடங்கு சட்டம் படையினரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று திங்கட்கிழமை காலையில் பார்த்தபோது, தாக்குதல் நடந்த உழவுயந்திரம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.