யால காட்டில் புலிகளைத் தேடிய படையினரை குளவிகள் கொட்டி காயம்

யால தேசிய வனப்பகுதிக்குள் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து அங்கு தேடுதல் நடத்திய பாதுகாப்புத் தரப்பினரை குளவிகள் துரத்தித் துரத்தி கொட்டிய சம்பவம் வெள்ளிக்கிழமை கதிர்காமம் – புத்தளம் வீதியில் கல்கே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரும் ஊர்காவலர்களும் படையினரும் இணைந்து இத்தேடுதலை மேற்கொண்டிருந்த போது அங்குள்ள மரம் ஒன்றில் இருந்த பெரிய குளவிக் கூட்டின் குளவிகள் கலைந்தன.

அத்துடன் அங்கு தேடுதலில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி வந்து துரத்தித்துரத்தி கொட்டத்தொடங்கின. இதனால் பாதுகாப்புத் தரப்பினர் அங்கு இங்கும் சிதறி ஓடினார்கள் .

இச்சம்பவத்தில் சில பொலிஸாரும் ஊர்காவலர்களும் காயமடைந்தனர். ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கடுமையான காயங்களுடன் ஆபத்தான நிலையில் கதிர்காமம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் புத்தள வீதியில் இரு ஊர்காவல்படையினர் இனம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து யால தேசிய வனப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் நடமாடுவதாக படைத்தரப்பினர் தெரிவித்து தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.