இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் தீக்குளிப்பு

தமிழ்நாடு, கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான நாகலிங்கம். ஆனந்த்(வயது 23) என்ற வாலிபர் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உயிரை தியாகம் செய்கிறேன் என தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று காலையில் ஆனந்த் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபர் ஆனந்திடம் “எப்படி தீக்காயம் ஏற்பட்டது?” என்று டாக்டர் கேட்டபோது “இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்தேன்” என்று கூறினார். தீக்குளித்த வாலிபர் ஆனந்துக்கு 95 சதவீதம் தீக்காயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.