புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தன்னிச்சையாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும்: பசில் ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தன்னிச்சையாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் எனவும், அதனைத் தவிர்ந்த வேறு எந்த போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களது மனோ நிலைக்கும், மோதலில் சிக்குண்டுள்ள தமிழர்களின் மனோ நிலைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு பேசும் உரிமையை பெற்றுக்கொடுத்து, உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர்களைப் பேசவிடாது தீர்வு ஒன்றை அவர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது என தான் கருதுவதாகவும் அவர்கள் பல வருடங்களாக கடுமையான ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர் எனவும் ஜனநாயகம் வாக்குரிமை குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அந்த சூழலை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு திட்டத்தை வழங்கும் முன்னர் பிரச்சினை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு பேசும் உரிமையில்லாது, அவர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ள சுதந்திரம் வழங்காது, தீர்வு திட்டத்தை வழங்கினால், மீண்டும் பழைய இடத்திற்கே செல்லவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.