இலங்கை பிரச்சினைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வு காண முடியும்: அமைச்சர் முத்து சிவலிங்கம்

இந்தியாவால் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று கும்பகோணத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை தோட்ட உட்கட்டமைப்பு துறை அமைச்சர் அமைச்சர் முத்து சிவலிங்கம் செய்தியாளர்களிடம் கூறினார்.

கும்பகோணத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில், இலங்கை தோட்ட உட்கட்டமைப்பு துறை அமைச்சர் முத்து சிவலிங்கம், கல்வி அமைச்சர் சச்சிதானந்தம், அரசியல் விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சர் ஜெகதீஸ்வரன், மாகாண சபை அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்து சிவலிங்கம்,

இலங்கை பிரச்சினை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 2000ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி கடந்த ஆண்டு போரைத் தொடக்கி விட்டனர்.

நாங்கள் மத்திய இலங்கை பகுதியில் இருப்பதாலும், இலங்கையில் பத்திரிகை செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் போர் குறித்த முழு விபரம் எமக்கு தெரிவதில்லை.

இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனாலும், இந்தியாவால் மட்டுமே இலங்கை பிரச்சினையில் நிலையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கையில் விரைவில் அமைதி ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லது என்றார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.