‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

முல்லைத்தீவில் இயங்கி வந்த ஒரேயொரு அரச மருத்துவ மனையான புதுமாத்தளன் வைத்ததியசாலையும் நேற்று சனிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்துகள் சேலைன் மற்றும் பன்டேஜ் உட்பட அவசிய பாவனைப் பொருட்கள் இல்லாத காரணத்தினாலேயே மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி வரதராஜன் தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவு உட்பட சகல சேவைகளும் மூடப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் இதனை நேரில் அவதானித்துள்ளனர்என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இயங்கும் வைத்தியசாலைக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு தரப்பின் அனுமதிக்காக திருகோணமலை துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாக சுகாதார அமைச்சு தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து ஒரு வார காலத்தின் பின்பு யுத்தத்தில் காயமடைந்தவர்கள்,நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 10 வது தொகுதியினர் நேற்று சனிக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படடனர் .

18 சிறுவர்கள் உட்பட 437 பேர் இந்த தடவை அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் முல்லைத்தீவிலிருந்து இப்படி அழைத்து வரப்படும் நோயாளர்களை திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் நேரடியாக புல்மோட்டை மற்றும் பதவியா தள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பது என சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தாலும், பதவியா வைத்தியசாலை புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே 10 வது தொகுதியினர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தியுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ்,”புல்மோட்டையில் அமைந்துள்ள தற்காலிக வைத்தியசாலையில் இந்திய மருத்துவ குழுவினால் அவசர சிகிச்சை மேற் கொள்ளப்படும்.பாரிய காயங்கள் தவிர்ந்த ஏனைய நோயாளர்கள் அவசர சிகிச்சையின் பின்பு பதவியா வைத்தியசாலைக்கு அங்கிருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.இதற்காகவே பதவியா வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது சகல வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த தொகுதி நோயாளர்கள் அழைத்து வரப்படும் போது இந் நடைமுறையே பின்பற்றப்படவுளள்து.அதன் பின்னர் நெரடியாக மத்திய அரசாங்கமே அவர்களைக் கையாளும்என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பகிரங்க விவாதமொன்று நடத்தப்பட வேண்டுமென அமெரிக்காபின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பெய்ன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கி வரும் பெட்டன் பொக்ஸ் எல். எல்.பி நிறுவனத்துடன் பகிரங்க விவாதமொன்றை நடத்த தயார் என அவர்
குறிப்பிட்டுள்ளார் .
தேசிய ஊடக கழகத்தில் இந்த விவாதத்தை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . அமெரிக்க இன அழிப்பு சட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும், அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகளான பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக பாரிய இனஅழிப்பு குற்றச் சாட்டுக்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம் பெற்று வரும் இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆயிரம் பக்கங்களினால் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் இனப்பிரச்சினைக்கு இராணுவ முன்நகர்வுகள் மூலம் தீர்வு காண முடியாதென அமெரிக்க ராஜாங்கச் செயலகப் பேச்சாளர் கோர்டன் டுகயிட் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றைமுன்வைக்க வேண்டியது அவசியமானதென அமெரிக்கா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
உக்கிர யுத்தம் இடம்பெற்று வரும் இலங்கையின் வடபகுதியில் அப்பாவி தமிழ்மக்கள் எதிர்நோக்கிவரும் இன்னல்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக இராஜாங்கச் செயலகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சகல இன மக்களினதும் அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலம் மட்டுமே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கும், ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் உடனடியாக முன்வைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னிப் பகுதி சிவிலியன்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா
பத்மநாதன் .
வெள்ளியன்று அமெரிக்க அரச செயலர் ஹிலாறி கிளின்ரன் விடுத்தஅறிக்கை குறித்துதமிழ்நெற்இணையத்தளம் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறுகூறினார்.
“உடனடியான போர்நிறுத்தம் என்பது பொதுமக்கள் மீதானபடுகொலைகளை நிறுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களால் மேலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வகையில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்” என்றார் திரு. பத்மநாதன் .
“இலங்கையின் எல்லாஇனக்குழுக்களதும் எதிர்பார்ப்புகளை சந்திக்கும் வகையிலான தீர்வொன்றை உருவாக்க முனைகையில், கடுந்துயர் ஒருபுறமும் பேராசை மறுபுறமும் இருப்பதை முறைவழுவாமல் எடை போட்டுக் கொள்ளவேண்டும் ” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
‘எல்லா இனக்குழுக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்திசையவேண்டும்’ என்பது ஒற்றையாட்சி சூழ்ந்த சிறிலங்கா அரசமைப்பின் அணுகுமுறை. தமிழ்த் தேசிய எதிர்பார்ப்புக்களை மறுதலிக்கவே இந்த அணுகுமுறை கையாளப்பட்டிருப்பதற்கு வரலாறு உண்டு என்றுகுறிப்பிட்டார் பத்மநாதன்.
“கடந்தகாலத்தில் பல தடவைகள் தமிழர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். சிங்களத் தலைமைமீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மிகுந்த கவனம் எடுக்கும் முறைதவறா அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பது எங்கள் உண்மையான எதிர்பார்ப்பு,” என்றும் அவர் கூறினார்.
‘மனிதக்கேடயம்’ தொடர்பான கேள்வி குறித்துப் பேசுகையில், வன்னிப் பொதுமக்கள் இக்கேள்வி குறித்து உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை உலக நாடுகள் சுயமாகவும் நேரடியாகவும் அறிந்து அளவிட வேண்டுமென்பதையே தான் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
ஹிலாறி கிளின்ரன் தேர்தல் காலத்தில் கூறியதற்கு அமைய, இலங்கைத் தீவின் சிக்கல் குறித்து ஆர்வம் எடுத்துக் கொள்வதற்காக அவருக்குத் தனிப்பட்ட நன்றி தெரிவித்த பத்மநாதன், தமிழர் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழ்ப் பொதுமக்களை குறிவைப்பவர்கள் என்று நன்கு அறியப்பட்ட சிங்கள ஆயுதப் படைகளின் கரங்களில் தற்போது தமிழர்கள் படும் கடுங்கொடுமையை அமெரிக்காவினால் தடுக்க முடியும் என்றார்.
பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழேவைக்குமாறு வலியுறுத்தாது விட்டிருப்பதும் முக்கிய அணுகுமுறை மாற்றம் என்பது பத்மநாதனின் தொனியாக இருந்தது.
சிக்கலுக்கு முடிவுகாணும் வகையில் முறைவழுவா அணுகுமுறை எங்கிருந்து வரினும்,அமைதியும் கடும் உழைப்பும் கொண்ட தமிழ்க் குமுகத்தின் இயல்பு அதற்கு ஈடுசெய்யக்கூடியது என்பதும் அவரது தொனியாக இருந்தது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரஜைகளும் இன பாகுபாடற்ற வகையில் பங்களிப்பை வழங்கும் நிலைக்கு நாட்டை இட்டுச்செல்லக்கூடிய வகையிலானதாக இருக்க வேண்டும் என பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் நிழல் வெளிவிவகார øமச்சருமான கலாநிதி லியாம் பொக்ஸ் கூறினார். கொழும்பில் நேற்று øடபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இரõணுவம் யுத்தங்களில் வெற்றியீட்டலாம் . ஆனால் சமாதானத்தை வென்றெடுப்பதற்கு அரசியலும் பொருளாதாரமுமே தேவைப்படும். மீள்கட்டமைப்பிற்கும் மீள்குடியேற்றல்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமான அரசியல் முன்முயற்சியொன்று அவசியமாகும்.

வடக்கின் அரசியல் சூழலில் இயன்றவரை விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது அத்தியாவசியமானது. முன்கூட்டியே நடத்தப்படும்Nதர்தல் முழுமையானதாக இருக்க மாட்டாது. ஆனால் அப்பகுதியிலுள்ள தமிழ் மக்கள் ஜனநாயக அரசியலுக்குள் முழுமையாக ஒற்றிணைக்கப்படுவதுற்கு அது முக்கியமான ஆரம்பமாக விளங்கும். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியமானதொரு பங்களிப்பை வழங்கலாம். அவர்கள் முழுமையாக இதில் உட்படுவர் என நம்புகிறேன்.

நீண்டகால உறுதிப்பாட்டுக்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதற்கான நிதியளிப்பு ஆகிய அச்சுறுத்தல்களை குறைப்பது அவசியம். உண்மையான அரசியல் பொருளாதார மறுசீரமைப்பானது எந்தவொரு அரசியல் கிளர்ச்சிக்கும் அரசியல் ஆதரவு கிடைப்பதை குறைக்கும். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக கிடைக்கும் நிதிகளை புனர்நிர்மாண நடவடிக்கைகளின்பால் திருப்புவதும் அவசியம்.

அதனால்தான் சுயாதீனமான இலங்கை மீள்கட்டøமப்பு நிதியமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என நான் யோசனை கூறுகிறேன் . இந்த நிதியம் சுயாதீனமாக நிர்வகிக்கப்படுவதுடன் இந்நிதி போருக்காக அல்லாமல் அபிவிருத்தித்திட்டங்களுக்கும் பொருளாதார உயர்வுக்கும் முதலீடு செய்யப்பட வேண்டும்.

புலம்öபயர்ந்து வாழும் மக்கள் தாம் அளிக்கும் எந்த நிதியுதவியும் போருக்கான ஆயுதங்களுக்காக அல்லாமல் ஆக்கபூர்வமான நன்மைகளை அளிப்பதற்கானவை என்பதை உறுதிப்படுத்த முடியும். இத்தகையதொரு திட்டத்திற்கு உதவும் எனது விருப்பத்தை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது நான் தெரிவித்தேன்.

பொறிவெடிகளை அகற்றல் மற்றும் அவசியமான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதைப் போன்ற பெரிய இலக்குகளையும் அடையவேண்டியிருக்கும். இதற்கு சர்வதேச உதவி தேவைப்படும். சர்வதேசச சமூகம் இச்செயன்முறையில் தமது பங்கை ஆற்றவேண்டியிருக்கும். அத்துடன் இதற்கு உதவுவதற்கு இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு சாத்தியமான நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் உள்ளது. அடுத்த தலைமுறைக்கும் அதற்கப்பாலும் நாட்டை வழிப்படுத்துவதில் எதிர்வரும் சில மாதங்கள் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மிக முக்கியமான தருணமாக அமையலாம். பிரிவினை அரசியலுக்குப் பதிலாக இராஜதந்திரத்தை வெளிப்படுத்தவேண்டிய தருணம் இது .

இப்போது தமிழீழ விடுதலைப்புலிகளை அரச படைகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்போவதாக தென்படுகிறது. இது புனரமைப்புக்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் வரலாற்று முக்கியத்துவமான வாய்ப்பை ஏற்படுத்தும். இதற்கு முழு நாட்டினது அரசியல் பொருளாதார அர்ப்பணிப்பு தேவைப்படும்.

இன பேதம் வன்முறை அற்றவகையில் நேரிடையான வழியில் உலகமய பொருளாதாரத்தில் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை இந்நாடு எதிர்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும் . எந்த வொரு நாடும் உலக பொருளாதார சூழலில் செழிப்படைய வேண்டுமாக இருந்தால் அது இன பாகுபாடற்ற வகையில் தனது அனைத்து பிரஜைகளினதும் திறமைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேவேளை மோதல் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். வெளியேற்றப்படாவிட்டால் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படும் அப்பாவி பொதுமக்களை வெளியேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியமானது. ஜனாதிபதியுடனும் அமைச்சர்களுடனும் இது குறித்து நான் கலந்துரையாடினேன். இந்த இலக்கை øடவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை உத்தரவாதப்படுத்தும் வகையில் அது அமைந்தது என்றார்.

பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான புதிய நிலைவரங்களை அறிந்துகொள்வதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் கூறுகையில் இன்று (நேற்று) மொத்தமாக 1000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பலானோர் சுகவீனமுற்றோர், காயமடைந்தோர் மற்றும் அவர்களின் நலன்களைக் கவனிப்போர் ஆவர். இந்தளவு பாரிய இலக்குகளை பூர்த்திசெய்வதற்கு சர்வதேச உதவி தேவையாகும். மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், பொதுமக்களின் இழப்புகளை குறைக்கும் வகையில் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிப்பது அவசியமானதாகும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் . இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
புதுக்குடியிருப்பு கிழக்கு வீதியில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனை பகுதியில் நேற்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முன்நகர்வு முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தமக்கள் பாதுகாப்பு வலயம்மீது நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது நேற்று சிறிலங்காப் படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
சி.ரக்சன் (வயது 09)
காமந்தனி (வயது 55)
நா.முருகேசன் (வயது 28)
.சுஜீபா (வயது 24)
கு.எசாயா (வயது 12)
.செல்லத்துரை (வயது 75)
நா.பிரபு (வயது 16)
.கிளாசினி (வயது 30)
.குணசீலன் (வயது 24)
செ.இராமச்சந்திரன் (வயது 32)
.நாராயணன் (வயது 18)
.கண்மணி (வயது 63)
.கந்தசாமி (வயது 50)
.சொர்ணலதா (வயது 26)
.சிறிதரன் (வயது 32)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளையில்மக்கள் பாதுகாப்பு வலயம்பகுதிகள் மீது நேற்று முன்நாள் மாலை தொடக்கம் நேற்று காலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகளை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
.சண்முகம
.சச்சிதாநந்தன
.தங்கமலர் (வயது 48)
.கருணாகரன் (வயது 47)
.சிவராசா (வயது 40)
முத்தையா (வயது 60)
.வெண்ணிலா (வயது 15)
.கிருபாலினி (வயது 24)
கவிநிலவன் (வயது 02)
சி.புகழேந்தி (வயது 16)
.வள்ளிப்பிள்ளை (வயது 71)
தீ.குகதாசன் (வயது 12)
சி.பாக்கியம் (வயது 83)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 6 தமிழர்கள் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் இருந்த 4 மீன்பிடிப் படகுகள் அழிந்து நாசமாகியுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வன்னிப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கடுமையான மழையினால் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
சாலை பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்கள் பல அழிவடைந்துள்ளதுடன் பதுங்குகுழிகளும் நீரினால் நிரம்பியுள்ளன.
இதேவேளையில் தனது முன்னணி பாதுகாப்பு நிலைகளை பார்வையிடச் சென்ற 11 ஆவது சிறிலங்கா இலகு காலாட் படை பற்றலியனின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கீத்சிறி எக்கநாயக்க பயணம் செய்த உழவூர்தி குளம் ஒன்றில் நிரம்பி பாய்ந்த நீரினால் அடித்துச் செல்லப்பட்டது.
உழவூர்தியின் சாரதி காணாமல் போனபோதும், கட்டளை அதிகாரி நீந்தி கரை சேர்ந்தார் . இவர், பின்னர் காலை 6.00 மணிவரை அங்கு தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து நகர முற்பட்ட போது விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் அங்கு வீழந்து வெடித்துள்ளன .
அப்பகுதியில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளே அதிகாரியின் நிலையிடம் தொடர்பான தகவல்களை வழங்கியிருக்க வேண்டும்.
பின்னர், அவர் மற்றுமொரு உழவூர்தியின் உதவியுடன் வெளியேற முற்பட்ட போதும், அந்த உழவூர்தியும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் பின்னர் குளத்திற்கு குறுக்காக கயிறு ஒன்றை கட்டுவித்த படையினர் அதிகாரியை மீட்டு எடுத்துள்ளனர்.
பிறிதொரு சம்பவத்தில் சாலை பகுதியில் இருந்து புதுமாத்தளன் பகுதியில் உள்ள படையினரின் நிலைகளை பார்வையிடச் சென்ற 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன டீ சில்வா மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மென்டக்க சமரசிங்க ஆகியோரும் பாதகமான காலநிலையினால் பெரும் நெருக்கடிகளை சந்தித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் உள்ள படையினரின் பீரங்கி தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகள் மூன்று பீரங்கிகளை தகர்த்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும்லக்பிமஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
55 ஆவது படையணி மற்றும் 58 ஆவது படையணிகளின் இணைப்பு புள்ளியான சாலைப் பகுதிக்கு தெற்குப் புறமுள்ள பகுதி மீது இந்த மாதம் 5 ஆம் நாள் விடுதலைப் புலிகள் ஊடறுப்பு தாக்குதலினை நடத்தினர்.
ஏறத்தாழ 400 விடுதலைப் புலிகள் படையினரின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை கைப்பற்றி தாக்குதலை நடத்தினர். தாக்குதலின் உக்கிரம் காரணமாக இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்ட் படையணிகளும் அங்கு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளின் பெருமெடுப்பிலான இத்தாக்குதலை முறியடிக்கும் பதில் நடவடிக்கைகளை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பொறுப்பெடுத்தார்.
தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்தும் நோக்கத்துடன் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சாலை பகுதிக்கு அனுப்பப்பட்டதுடன் இரண்டாவது சிறப்பு படை அணிகளும் அங்கு நகர்த்தப்பட்டன .
இதேவேளையில் ஊடறுப்பு தாக்குதல் நடத்தப்பட்ட வாரத்தின் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமோண்டோ அணி ஒன்று விசுவமடுவில் உள்ள பீரங்கி தளத்தின் மீது தாக்குதலை நடத்தியது.
இதில் மூன்று 122 மி.மீ பீரங்கிகளை கரும்புலிகள் அழித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார்.
சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.
இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார் .
ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவில் இணைந்து மருத்துவ கல்வி கற்று மருத்துவர் ஆனார்.
மக்களுக்கான மருத்துவ பணிகளில் இவர் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டார்.
நான்காம் ஈழப் போரில் மடு தொடங்கி சகல பகுதிகளிலும் மக்களுக்கான மருத்துவ சேவையினை போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி செய்து வந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!
கனடா வாழ் தமிழர்களால் வான்புலிகளுக்கு நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கட்டுநாயக்கா மற்றும் கொழும்பு பகுதிகளில் கடந்த மாதம் 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலின் போது பலியான இரு வான் புலிகளுக்கும் கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது .
இந்நிகழ்வின் போது உயிரிழந்த வான்புலிகளின் பெற்றோர் அவர்களின் படங்களுக்கு ஈகச்சுடரேற்றியிருந்தனர் .
இத்தகைய நிகழ்வுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் போது விடுதலைப் புலிகளின் கொடியேற்றப்பட்டதுடன் இரு வான்புலிகளின் படங்களும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
போரினால் 60,000 சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுயுனிசெப்
வன்னியில் இடம்பெற்றுவரும் போரினால் 60,000க்கும் மேற்பட்ட சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

வன்னியில் மேற்கொள்ளப்படும் போர் நடவடிக்கையினால் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், பெருமளவிலானோர் காயப்படுத்தப்பட்டள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்குள் 12 தடவைகள் இவர்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் பதுங்குழிகள் மற்றும் மறைவிடங்களில் வாழ்ந்துவருவதாக அந்த நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் சிறார்களின் பெற்றோர் , உறவினர்கள் கொல்லப்படுவதினாலும் சிறார்கள் இவ்வாறான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!
இரத்மலானை மற்றும் கொழும்புக்கிடையில் திடீர் என்று நோயாளர் காவு ஊர்திகளின் பிரயாணம் நேற்று (சனிக்கிழமை) அதிகமாக காணப்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையும் தோன்றியது.
இரத்மலானையில் இருந்து கொழும்புக்கு நோயாளர் காவு ஊர்திகளின் பல மணிநேரமாக பிரயாணித்ததை தொடர்ந்து இவ்வாறான பதட்ட நிலைமை தேன்றியது.
மதியம் 12.30 தொடக்கும் தொடர்ச்சியாக 2 மணி வரை 50 மேற்பட்ட நோயாளர் காவு ஊர்திகள் கழுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையை நோக்கி காலி வீதியால் பிரயாணித்ததை அவதானிக்க முடிந்ததாகவும், இதையடுத்து கொழும்பில் இனம் புரியாத ஒரு பத்தட்ட நிலைமை அவதானிக்க முடிந்தது என்றும் எமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்
எனினும் இந்த பதற்றம் பின்னர் மாலை தணிந்து விட்டதாகவும் இதில் எடுத்து வரப்பட்டவர்கள் பலர் வன்னிக் களமுனையில் படுகாயமடைந்து பலாலி, வவுனியா, மற்றும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த படையினர் எனவும் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பெயர் குறிப்பட விரும்பாத வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வன்னிக் களமுனையில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதில் சிறீலங்கா படையினருக்கு கடும் இழப்பு ஏற்ப்பட்டிருந்ததாகவும் , பலர் கொல்லப்பட்டடும் காயமடைந்தும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்ததும், அது பற்றி பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு படைத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் சிறீலங்கா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் தொன்மராட்சியில் திருடர்கள் கைவரிசை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தென்மராட்சியில் சிறீலங்கா படையினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள் தென்மராட்சியின் மீசாலை சாவகச்சேரி கச்சாய் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருட்டுக்களின் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தடுக்க முனையும்போது அவர்கள் சிறீலங்கா படையினருடன் வந்து எச்சரித்து செல்வதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் தென்மராட்சி மீசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் இரவு ஊரடங்குவேளை பிரவேசித்த திருடர்கள் அங்கிருந்த பொருள்களை திருட முற்பட்டவேளை ஊரவர் திரண்டு தாக்கியதால் திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
பின்னர் மறுநாள் அதே நேரம் 15இற்கும் மேற்பட்டவர்கள் சிறீலங்கா படையினருடன் வந்து குறிப்பிட்ட தென்னந்தோட்டத்து உரிமையாளர் பார்த்திருக்க அனைத்துத் தேங்காய்களையும் எடுத்து சென்றதுடன், இனியும் தங்களை மிரட்ட முற்பட்டால் கொல்லப்படுவீர்கள் என எச்சரித்து சென்றுள்ளதாக, அப்பகுதியில் உள்ள பதிவின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அண்மைய நாட்களில் யாழ் குடாநாட்டில் இவ்வாறான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.
யாழ் குடாவில் இருந்த ஏராளனமான படையினர் வன்னிக் களமுனைக்கு நகர்த்தப்பட்டடுள்ளதால் , அது சிறீலங்கா படையினருக்கு ஆபத்தான பிரதேசமாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் நிலவும் பிரதேசமாகவும் கணிக்கப்படுவதால், சிறீலங்கா படையினர் தமது பாதுகாப்புக்காக இவ்வாறான சமூக விரேதிகளை ஊக்குவித்து வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை, புல்மோட்டையில் மருத்துவ சேவையாற்றச் சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்கள் சிறியரக ஆயுதங்களை தம்முடன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவப் பணியாற்றச் சென்றவர்களின் இடுப்பு பகுதியில் சிறிய பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அநேகரிடம் இவ்வாறு பொருள்கள் இருப்பதாகவும் புல்மோட்டை பிரதேச வாசிகள் கூறியதாகப் பதிவு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புல்மோட்டை கிராமத்தைச் சுற்றிப் பார்க்க இவர்கள் வெளியே சென்றபோதே இவ்விடயம் தெரிய வந்துள்ளது.
இந்த மருத்துவக் குழுவிற்கு தலைமை தாங்குபவராக மருத்துவர் .வசந்தகுமார் என்பவர் செயற்படுகின்றார்.
இதேவேளை, கனிப்பொருள் மணல் கூட்டத்தாபன வளவுக்குள் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு கடற்கரை ஓரத்தில் இருந்து 300 மீற்றர் நீளமான காபெட் ரக வீதி அமைக்கப்பட்டு வருகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!.
!மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தேர்தல்களில் வெற்றி பெறுவதனை இலக்காகக் கொண்டே யுத்தத்தில் முனைப்பு காட்டி வருவதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் பின்பற்றப்படும் இரட்டை நிலைப்பாட்டு கொள்கைள் தொடர்பில் ஜே.வி.பி கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
ஓரு புறத்தில் தேசப்பற்றாளர் என்ற போர்வையில் யுத்த முனைப்பையும், மறுபுறத்தில் சமாதான முயற்சி என்ற போர்வையில் அதிகாரப் பகிர்வினையும்
அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் .
இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
மறுபுறத்தில், தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு யுத்தம் குறித்த பிரச்சாரங்களை முழுவீச்சில் அரசாங்கத் தரப்பு மேற்கொண்டு வருவதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரச சொத்துக்களை மிகவும் மோசமான முறையில் இந்த அரசாங்கம் கையாடி வருவதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த இரட்டை வேசம் வெகுவிரையில் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை மேற்கொள்ளும் உண்மையான அவசியம் அரசாங்கத்திற்கு காணப்படவில்லை எனவும், ஜே.வி.பி.யின் அழுத்தம் காரணமாகவே யுத்தத்தை அரசாங்கம் ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
கடத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட 6 வயது மாணவி வர்ஷா யூட் ரெஜியின் இறுதிக்கிரியைகள் எப்போது நடத்தப்படும் என்பது நேற்று சனிக்கிழமை மாலைவரை தீர்மானிக்கப்படவில்லை .
சிறுமியின் தந்தை ரெஜி, கட்டாரில் தொழில் செய்கிறார். அவர் நாடுதிரும்புவதைப் பொறுத்து இறுதிக்கிரியை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சிறுமி படித்துவந்த திருகோணமலை சென். மேரிஸ் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் , அதிபர் அருட் சகோதரி எம்.பவளராணி தலைமையில், சிறுமியின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பாலையூற்றுபூம்புகார் இல்லத்திற்குச் சென்று நேற்று சனிக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர் .
இதனிடையில், இக் கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக திருகோணமலைப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!
மாத்தறை, காலி, வலஸ்முல்ல,தங்காலை ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை மாத்தறை நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடபிட்டிய குண்டு வெடிப்பு சம்பவத்தில் மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் உபாலி சரச்சந்திர கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது .
மாத்தறை சட்டத்தரணிகள் சங்க உபதலைவர் மகேஷா விஜயதுங்க தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது .
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும், மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்ற சுலோகங்களும் மறியல் போராட்டத்தில் காணப்பட்டன.
!!!!!!!!!!!!!!!!!
அக்குரஸ்ஸ கொடப்பிட்டியப் பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்டு வரும் தேடுதல் விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ஏழு தமிழ் இளைஞர்களும் மூன்று தமிழ் யுவதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பொலிஸார் மாத்தறை நீதவான் எம். கே. பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
காலி, வீரவில, அட்டன், பதுளை, ஊரன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அவர்களிடம் தம்மை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் அதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவுப் பொலிஸார் இப்பகுதியில் விசாரணைகளை நடத்திவருகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!
மனித உரிமைகளுக்கான .நா.உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் ஒருபோதும் நம்பவில்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண புலிகளுக்கு ஆதரவான சக்திகள் அவரைத் தவறாக வழிநடத்த முற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
மனித உரிமைகளுக்கான .நா.ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனீவா தலைமையகத்திலிருந்து விடுத்திருக்கும் அறிக்கையானது,ஒரு தலைப்பட்சமானதாகவே நோக்கப்படவேண்டியதாகும். ஒரு தரப்பினரின் தகவலை மையமாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் அவர் இலங்கை அரசுடனோ, அல்லது .நா. விலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியிடமோ கலந்துரையாடியிருக்கலாம்.அவர் அப்படிச் செய்யாமல் பக்கச்சார்பான விதத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதனை வைத்துக்கொண்டு நாம் அவரை புலிகளுக்குச்சார்பானவரென்றோ, புலிகளுடன் தொடர்புள்ளவரென்றோ கூறமுட்படமாட்டோம் . புலிகளுடன் தொடர்புடையவர்களும் புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் நவநீதம் பிள்ளையை தவறாக வழிநடத்தியிருப்பதாகவே நோக்குகின்றோம்.
இதன் மூலம் தனது பதவிக்கும், .நா. மனித உரிமைகள் செலயகத்துக்கும் அபகீர்த்தியை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் எனவும் கலாநிதி பாலித கோஹண தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹோமாகம பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதுடன் தேர்தல் பிரசார அலுவலகமொன்றும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோம?கம, மாகும்புர சந்தியில் வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி.யின் பிரசார கட் அவுட் ஒன்றை அகற்றிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர்கள் மீது வெள்ளை நிற ஜீப் ஒன்றில் வந்த சிலர் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இதில் ஒருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .
அது மட்டுமல்லாது ஹோமாகம மாலபல்ல பகுதியிலிருந்த ஜே.வி.பி.யின் தேர்தல் பிரசார அலுவலகமும் மேற்குறித்த அதே ஜீப்பில் வந்தவர்களால் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அடித்துச் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாக முறைப்பாடு கிடைத்திருப்பதுடன் அச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் கூறினர்.
எனினும் தேர்தல் பிரசார அலுவலகம் தீ வைக்கப்பட்டமை தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!
ஈழத்தில் வாழும் எம் உறவுகளை உலக அரசுகள் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் கைவிட்ட நிலையில் புலத்தில் இருந்து தாயகம் நோக்கிவணங்கா மண்” என்ற கப்பல் புறப்பட உள்ளது. வணங்கா மண்னின் முதல் நடவடிக்கையாக இன்று முதல் பிரித்தானியாவில் பல பாகங்களிலும் உலர் உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் சேகரிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அந்தவகையில் பிரித்தானியவாழ் தமிழ் மக்களால் பிரித்தானிய மககளிடம் பொருட்கள் சேகரிக்கும் நிலையங்களுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள், நகராட்சி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி ஊழியர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், ஊடகவியளாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட தமிழர் அல்லாதோர் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கியதுடன், இலங்கை உட்பட உலகநாடுகளை வன்மையாக கண்டித்தனர். அத்துடன்வணங்கா மண்” ஒருங்கினைப்பு குழுவினருக்கு தங்கள் ஆதரவை வழங்கியிருநதது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருபுறம் குண்டு மழையில் சாவிற்க்குள் வாழும் எம் உறவுகளை மறுபுறம் உணவை தடுத்து நிறுத்தி பட்டினிபோடும் சிங்கள பேரினவாத்தின் இனசுத்திகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரிய துண்டுபிரசுரங்கள் வருகைதந்த அணைவருக்கும் வழங்கப்பட்ட்து.

சுணமிக்கு பின்னராக பிரித்தானிய புலம்பெயர் வாழ் தமிழர்கள் அணைவரும் ஒரு சேர தாயகம் நோக்கிய வணங்கா மண் நடவடிகையில் இணைந்திருப்பது குறிப்பிட்த்தக்கது.

india
!!!!!!!!!!!
நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட மதிமுக கொள்கைப்பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்ட நாஞ்சில் சம்பத் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு பிணை வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு, திருப்பூர் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி அரிகரக்குமார் முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது . அரசு தரப்பில் சாந்தி ஆஜரானர். நாஞ்சில் சம்பத் தரப்பில் அவரே வாதாடினார் . இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அரிகரக்குமார், நிபந்தனை பிணையில் நாஞ்சில் சம்பத்தை விடுவிக்க உத்தரவிட்டார்.

பிணையில் உத்தரவு வழங்கப்பட்டு அவர் வெளிவருவதற்கு முன்பே இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட பிணை ரத்தாகிறது.
தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் ஏற்கெனவே தமிழுணர்வாளர்கள் இயக்குநர் சீமான் , பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாசனின் ஆழ்வார்பேட்டை அலுவல கத்தில் இளைஞர் காங்கிரசாரும், அவரது ஆதரவாளர்களும் பெரு மளவில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

!!!!!!!!!!!!!!!!!

உள்ளாட்சித்துறை அமைச்சர் மு..ஸ்டாலின் New;W திடீரென புட்டபர்த்தி சென்றுள்ளார். அங்கு அவர் சாய்பாபாவை சந்திக்கிறார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீரமைக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து சாய்பாபா அறக்கட்டளை கால்வாய் சீரமைப்பு பணிகளை பல கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டது. இதற்கான விழாவில் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா சென்னை வந்து கலந்து கொண்டார். .

அப்போது கூவத்தை சீரமைப்பது உள்ளிட்ட தமிழக அரசின் மேலும் சில திட்டங்களுக்கும் சாய்பாபா உதவ வேண்டுமென முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் கூவத்தை தூய்மைப் படுத்துவது தொடர்பான ஒரு திட்டம் அண்மையில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது . இந்த திட்டத்திற்கு நிதியுதவி கோரி உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் புட்டபர்த்தி சென்றிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

!!!!!!!!!!!!!!!!!!!

பிஜேபி மூத்த தலைவர் அத்வானியை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. .

அத்வானியை அவரது இல்லத்தில் முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மக்களவை தேர்தலுக்கு முன்பான சாதாரண சந்திப்பு என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கடந்த நவம்பர் மாதம் அத்வானி முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தேக்கநிலை குறித்து அவர் அப்போது விவாதித்தார். இந்நிலையில் இன்று முகேஷ் அம்பானி அத்வானியை சந்தித்து பேசியிருக்கிறார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா...வுடன் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

êu\ôYÕ A¦ RûXYoLÞdÏ ®ÚkR°dÏm ¨Lrf£ûV §p#«p Cuß HtTôÓ ùNnÕs[ôo TÏ_u NUôw Lh£«u RûXYÚm EjRWl ©WúRN ØRpYÚUô] UôVôY§./ 3-YÕ A¦«u Nôo©p Ruû] ©WRUo úYhTô[WôL A±®dL úYiÓm G] Ck¨Lrf£«uúTôÕ AYo úLô¬dûL ûYlTôo G] G§oTôodLlTÓ¡\Õ.
4 CPÕNô¬ Lh£Ls, ùRÛeÏ úRNm, A§ØL, URNôoTt\ _]Rô R[m, a¬VôQô _u¶j Lôe¡Wv Es°hP Lh£Ls CûQkÕ 3-YÕ A¦ûV EÚYôd¡Ùs[]. CRtLô] ùRôPdL ®ZôÜm LoSôPL Uô¨Xm Õmá¬p AiûU«p SûPùTt\Õ.
Cd áhPjûRVÓjÕ LÚjÕ ùR¬®jR UôVôY§, YÚm 15-m úR§dÏs 3-YÕ A¦«u ©WRUo úYhTô[o Vôo GuTûR A±®dL úYiÓm G] ùLÓ ®§jRôo.
Ck¨ûX«p, CÕϱjR CPÕNô¬L°Pm úLhPúTôÕ UdL[ûYj úRoRÛdÏl ©\úL AÕϱjÕ Ø¥Ü ùNnVlTÓm G] ϱl©hP]o. AûRúTôXúY URNôoTt\ _]Rô R[ RûXYo úRY ùLüPôÜm ùR¬®jRôo. ùRÛeÏ úRNm, A§ØL Es°hP Lh£Ls CkR ®`Vj§p LÚjÕ HÕm CÕYûW ùR¬®dL®pûX.
CjRûLV ãr¨ûX«p 3-YÕ A¦ RûXYoLÞdÏ ®ÚkÕ A°dÏm ØRp ¨Lrf£ Juû\ §p#«p UôVôY§ HtTôÓ ùNnÕs[ôo
.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாயாவதிக்கு லோக்ஜன சக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார்.
தலித் சமூகத்தில் உள்ள ஒருவரே பிரதமராக வேண்டும் என்று நிர்ணயிக்கும் பட்சத்தில் அதற்கு மாயாவதியை விட நானே தகுதியானவன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மந்திரியாகவும் இருந்துள்ளேன். தலித் தலைவர்களில் பிரதமர் பதவிக்கு நானே பொருத்தமானவன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

YÚm UdL[ûYj úRoR#p TôW§V _]Rô RûXûU«Xô] úR£V _]SôVL áhP¦dÏ YôdL°jÕ Bh£«p AUoj§]ôp, TX LôWQeLÞdÏ TVuTÓm YûL«p úR£V AûPVô[ AhûP YZeLlTÓm. CRtLôL R²f NhPØm CVt\lTÓm Gu\ôo TôW§V _]Rô®u êjR RûXYo Gp.úL.AjYô².
YÚm UdL[ûYj úRoRÛdLô] Lh£«u ùRôûXúSôdÏj §hPeLû[ N²d¡ZûU Th¥V#hPúTôÕ AjYô² CûR ùR¬®jRôo.
úUÛm AYo á±VÕ:
úR£V _]SôVL áhP¦ Bh£dÏ YÚm ThNj§p JÚ úLô¥ UôQYoLÞdÏ ì.10 B«WjÕdÏ úXlPôl YZeLlTÓm. CkR ùRôûLûV ùNÛjR Ø¥VôR UôQYoLû[ ûL®hÓ®PUôhúPôm. AYoLÞdÏ Yh¥«pXôR YûL«p LPàR® A°dLlTÓm.
YßûU úLôhÓdÏ ¸r YôÝm UdLÞdÏ CXYNUôL ùNpúTôu A°dLlTÓm.
Bh£dÏ YkR 5 BiÓ LôXjÕdÏs ùNpúTôu NkRôRôWoLs Gi¦dûLûV 40 úLô¥«p CÚkÕ 100 úLô¥VôL A§LlTÓjRlTÓm.
RLYp ùRô¯pÖhTj§u TVuTôhûP A§LlTÓj§ úR£V TôÕLôlûT Eߧ ùNnYRtÏm, úYûXYônlûT ùTÚdÏYRtÏm Øuà¬ûU A°dLlTÓm.
Lp® Utßm UÚjÕYj Õû\ úNûYûV úUÛm ®vR¬jÕ, AûY RWUô] YûL«p UdLÞdÏ ¡ûPj§PÜm E¬V SPY¥dûL GÓdLlTÓm Guß AjYô² ùR¬®jRôo.
Ck§VôÜdÏs ÑUôo 2 úLô¥dÏ úUXô] YeLúR£Ls NhP®úWôRUôL FÓÚ®Ùs[]o. ùTôÕYôL YP¡ZdÏ Uô¨XeL°p FÓÚ®Ùs[ CYoL[ôp SôhÓdÏ TpúYß ®Rj§p ©Wfû] HtTÓ¡\Õ.
ϱlTôL úRNj§u TôÕLôl×dÏ CYoL[ôp AfÑßjRp ¨XÜ¡\Õ. CRtÏ Øtßl×s° ûYdÏm úSôd¡pRôu RtúTôÕ úR£V AûPVô[ AhûP A±ØLlTÓjRlThÓs[Õ. CÕ AY£VUô] JußRôu.
úR£V _]SôVL áhP¦ Bh£dÏ YkRÜPu CkR AûPVô[ AhûP«u TVuTôÓ ®vR¬dLlTÓm. CRtLôL R²fNhPØm CVt\lTÓm.
CkSôh¥p YôÝm JqùYôÚ Ï¥ULàm úR£V AûPVô[ AhûP ûYj§ÚdL úYiÓm GuTÕ LhPôVUôdLlTÓm.
YeLúRN FÓÚYpLôWoLû[ RÓlTÕ Ød¡VUô] Juß. B]ôp, CkR ®`Vj§p Uj§V AWÑ Ï±l©ÓmT¥VôL SPY¥dûL GûRÙm GÓlTRôLj ùR¬V®pûX G] Øu× EfN ¿§Uu\m GfN¬dûL ®Ój§ÚkRûRÙm AjYô² Ñh¥dLôh¥]ôo.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆந்திர மாநிலம் சந்திரகிரி தொகுதியில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரசாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நடிகை ரோஜா சந்திரகிரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார் . இதற்காக அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிராமம் கிராமமாக அவர் சென்று வீடு வீடாகப் போய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி ஹரிபுரம் என்ற கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை கொடுதது வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

இதையடுத்து இது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. சீர்வரிசை என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அவர் பணம், பொருட்களைக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். இதையடுத்து திருப்பதி தாசில்தாரிடம் ரோஜா விளக்கம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

world

!!!!!!!!!!!!!!

பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு 3 நாள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி (என்) போராட்டத்தில் குதித்தது.

மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி நாளை பேரணி நடத்தவும் அது திட்டமிடப்பட்டது. இதற்காக பாகிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அக்கட்சித் தொண்டர்கள் இஸ்லாமாபாத்திற்கு குவியத் தொடங்கினர்.

இதனால் பாகிஸ்தானில் கடும் நெருக்கடியும் பதற்றமும் உருவானது. கலவரம் வெடிக்கலாம் என்ற பீதியும் நிலவுகிறது. இதையடுத்து நாடாளுமன்றத்தைச் சுற்றி ராணுவம் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டது .

இதற்கிடையே ஷெரீப்பின் கோரிக்கையை அதிபர் ஜர்தாரி ஏற்க மறுத்ததுடன், நவாஸ் கட்சித் தொண்டர்களை தேடிக் கைது செய்யும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் , எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இன்று காலை கைது செய்யப்பட்டு 3 நாள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக, அவரது செய்தித் தொடர்பாளர் பர்வேஸ் ரஷீத் கூறினார் .

லாகூரில் உள்ள ஷெரீப்பின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தகவலைத் தெரிவித்தனர். மேலும் ஷெரீப்பின் வீட்டைச் சுற்றி பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான எதிர்க்கட்சித் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் ஷெரீப்பின் கைது நடவடிக்கை பற்றி பாகிஸ்தான் அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை

!!!!!!!!!!!!!!!

தனிப்பட்ட செல்வந்தர்களும் கம்பனிகளும் இனிமேல் தமது பணத்தை சூரிச் வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைத்திருக்க முடியாது.
வங்கிக்கணக்குகள் தொடர்பாக கேள்விகள் கேட்கக் கூடாது என்ற சகாப்தத்தை சுவிற்சர்லாந்து . சர்வதேச அழுத்தத்தை அடுத்து முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது
லக்ஸ்சம் பேர்க் அன்டோரா லைச்ரென்ஸ்ரீன்,'( Liechtenstein)ஆகிய வங்கிகள் வெளிநாட்டு அரசாங்கங்களின் கணக்குகள் தொடர்பான கோரிக்கையையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தகவல்களை வெளியிட இந்த வாரம் இணங்கியுள்ளன. இதன் மூலம் 300 வருடகாலம் பேணிக்கடைப்பிடிக்கப்பட்டு வந்த வங்கி இரகசியம் முடிவுக்கு வருகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் சந்திப்பின்போது வரி ஏய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் திட்டமிட்டிருக்கும் நிலையில் சுவிஸ் வங்கிகளின் இந்த நடவடிக்கையானது சடுதியான வாய்ப்பாக அமையுமென கருதப்படுகிறது.மிகவும் நெருக்கடியான விடயமாகியுள்ள உலக பொருளாதார பின்னடைவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக சசெக்கிலுள்ள ஹோர்சாமில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஒன்று கூடி ஆராயவுள்ளன. உலக பொருளாதார நெருக்கடியானது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கடும் விரிசலை ஏற்படுத்தி வருகின்றது.
வைத்திருக்கும் சொத்தின் பெறுமதியிலும் பார்க்க குறைவான வரியாக செல்லுத்துவது தொடர்பான விவகாரத்தில் ஜி20 மாநாட்டில் இணக்கப்பாடு எட்டப்படும் சாத்தியம் உள்ளது.
தனிப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களில் வங்கிக்கணக்கு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக சுவிற்சர்லாந்து நாடு தெரிவித்துள்ளது. ஆனால், ஒவ்வொறு கோரிக்கைக்கும் இணங்க முடியாதென அந்நாடு தெரிவித்துள்ளது. இதனை துரிதமாக மேற்கொள்ள முடியாது என்று சுவிற்சர்லாந்தின் நிதியமைச்சர் ஹான்ஸ் ருட்லொங் கூறியுள்ளார். வங்கி இரகசியத்தை பேணுவது சுவிசர்லாந்தின் குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் வங்கிகளுக்கு சிறைத் தண்டனை உள்ளது.சுவிஸின் சமஷ்டி பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானமானது பல செல்வந்த வாடிக்கையாளர்களுக்கு கவலையளிக்கும் விடயமாகும்.
இதுவொரு பாரியமாற்றம். இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்தபின் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றமாக இது உள்ளது. வங்கி இரகசியம் தொடர்ந்து பேணப்படும் என்று சுவிஸ் கூறுகிறது. இதில் ஒரு பகுதியே உண்மை என்று வைதர்ஸ் நிறுவனப் பங்குதாரரான ஜே.கிரோஸ் என்பவர் லண்டன் ரைம்ஸுக்கு கூறியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் பிளவுபட்டு நிற்கின்றன என்று வரும் செய்திகள் பெரிதுபடுத்தக் கூடியவை அல்ல என்று பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் அவர்கள் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடக்கவுள்ள பொருளாதார வளர்ச்சி கண்ட 20 நாடுகளின் மாநாட்டில் இப்பிளவு ஏற்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜெர்மனிக்குப் பயணம் செய்துள்ள கோர்டன் பிரவுண் ஜெர்மனியின் சான்செல்லர் அங்கேலா மெர்க்கெல் அவர்களுடன் சேர்ந்து வழங்கிய செய்தியாளர் மாநாட்டில், நிதி நிறுவனங்கள் செயற்பாடுகள் என்பவற்றின் மீதான சட்டதிட்டங்கள் கட்டுப்பாடு ஒழுங்குகளை விரிவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு அமெரிக்காவின ஆதரவு கிடைக்கும் என்று தான் கருதுவதாகக் கூறினார்.
வரி தவிர்ப்புக்கான நாடுகளாக விளங்கும் சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டைன், ஆஸ்திரியா, லக்ஸம்பேர்க் போன்ற நாடுகளுடன் அவை சர்வதேச தரங்களை ஏற்பது குறித்து இந்த வாரம் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அண்மைக்காலம்வரை கற்பனையில் கூடச் சாத்தியமில்லாத, ஆனால் தற்போது நடைமுறையில் வரக்கூடிய நிலவரம் என்று பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார் .

!!!!!!!!!!!!!!!

மடகாஸ்கரில் அதிபர் ரவாலொமனானா பதவிவிலகுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் விதித்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில் அங்கு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
ஒருவார காலம் தலைமறைவாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அண்ட்ரி ரஜோலினீ தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றினார். தலைநகர் அண்டனனாரிவோ புறநகர்ப் பகுதியில் உள்ள அதிபர் மாளிகைக்கு அனைவரும் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று அவர் கோரினார்.
இராணுவம் அடுத்து என்ன செய்யும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது என்றும் அதிபர் ரவாலோமனனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை இராணுவத்தின் சில வட்டாரங்கள் ஆதரித்துவந்துள்ளன என்று மடகாஸ்கர் தலைநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

!!!!!!!!!

!!!!!!!!!!!!

!!!!!!

sports
!!!!!!!
சிட்னியில் சனிக்கிழமை நடந்த மகளிர் உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்தியா, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அஞ்சும் சோப்ரா 76 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி , 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களை மட்டுமே எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் சூப்பர் சிக்ஸ் பிரிவின் எஞ்சிய ஆட்டங்களில் வென்றாக வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக அஞ்சும் சோப்ரா (இந்தியா) அறிவிக்கப்பட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
kw;Wk; ,q;fpyhe;J epArpyhe;J ngzfs;mzpfspw;f;F ,ilapyhd JLg;ngLj;jhl;lg;Nghl;bapy; ; ,q;fpyhe;J 5tpf;Nfl; ,og;gpw;f;F 201 Xl;lq;fisAk; @ epArpyhe;J rfy tpf;Nfl; ,og;gpw;f;F 100 Xl;lq;fisAk; vLj;jd.
இங்கிலாந்து ngzfs; mzp 31 Xl;lq;fshy; ntw;wpngw;Ws;sJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 2வது சுற்றில் தோல்வி அடைந்தார். .

இண்டியானா வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா 2வது சுற்றில் இத்தாலி வீராங்கனை பிளாவியாவிடம் 36,46 என தோல்வி அடைந்தார். ஏற்கனவே சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வி அடைந்த நிலையிலும், ஒற்றையர் பிரிவிலும் தோல்வி அடைந்துள்ளார்.

எனினும் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . செக் குடியரசு வீரர் லூகாஸ் லவுஹியோடு ஜோடியாக விளையாடும் பயஸ், ஆஸ்திரேலியாவின் ஜூலியன் மற்றும் மெல்சர் ஜோடியை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீரரான மகேஷ்பூபதியும் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.