பண்டிகைக்கு பணம் கொடுப்பது பாரம்பரிய பழக்கம் : தேர்தல் கமிஷனுக்கு முலாயம் விளக்கம்

லக்னோ : பண்டிகைக்கு பணம் கொடுப்பது பாரம்பரிய பழக்கம் என தேர்தல் கமிஷனுக்கு முலாயம்சிங் யாதவ் அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சி சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது, அப்போது தொண்டர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பதிலறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. முலாயம் கூறியதாவது : தேர்தல் கமிஷன் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே நான் எனது பதி‌லறிக்கையை தாக்கல் செய்துள்ளேன் . ஹோலி பண்டிகையன்று பணம் அன்பளிப்பாக கொடுப்பது என்பது பாரம்பரியம். இதில் தவறொன்றும் இல்லை. பதிலறிககையில் நான் கூறிய முழு விபரத்தையும் தேர்தல் கமிஷன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் இந்த விஷயம் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த தருணத்தில் இப்படியொரு சர்ச்சை எழுந்திருப்பது சமாஜ்வாவி கட்சிக்கு ஆதாயமாகத்தான் இருக்கும். இதை நான் வரவேற்கிறேன். அரசியல்வாதிக்கு 3 விஷயங்கள் மிகவும் அவசியமானது, அவை சர்ச்சை, பத்திரிகை, மற்றும் செலவு. இவ்வாறு முலாயம் கூறியுள்ளார். நான் செய்த செலவு பத்திரிகையில் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவையில்லாமல் ஒரு தலைவர் அரசியலில் நீடிக்க முடியாது. இவ்வாறு முலாயம் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.