வடபகுதியை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதே அரசின் நோக்கம் : லியாம் பொக்ஸிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு 3/14/2009 8:56:00 AM – வடபகுதியைப் பயங்கரவாதிகளிடமிருந்து முழுமையாக மீட்டெடுத்து அம்மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அத்தோடு அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவையென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டனின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.லியாம் பொக்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், br>
“குறுகிய கால மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வடபகுதி மக்களை விடுவித்து பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்வதற்கே எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. பயங்கரவாதிகளின் முழுமையான தோல்விக்குப் பின்னர் அரசியலமைப்புக்கமைய யாழ்ப்பாண மாநகரசபை உட்பட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படும்.

இதன் மூலம் அம்மக்களுக்குத் தேவையான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படும். வடபகுதி முழுமையாக விடுவிக்கப்பட்ட பின்னர் அப்பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு சர்வதேசத்தின் உதவி, ஒத்தாசைகள் தேவை” என்றார். இதன்போது கருத்து வெளியிட்ட பிரிட்டனின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. லியாம் பொக்ஸ், “இலங்கையின் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தைத் தோல்வியடையச் செய்யும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கிறது. பயங்கரவாதிகளிடமிருந்து விடுதலை பெற்று, பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியத்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விஜயத்தின் ஊடாக இரு நாட்டு நட்புறவை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியுமென்றும் இலங்கையின் தற்போதைய நிலைதொடர்பாக கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டெவிம் கெமரோன் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சர்களின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

Source & Thanks : .virakesari

Leave a Reply

Your email address will not be published.