நேபாளத்தில் மாவோயியவாதிகளை தேசியப் படையில் சேர்ப்பதிலே பிரச்சினை: ஓர் அலசல்

நேபாளத்தில் இரண்டு இராணுவங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஒன்று நேபாளத்தின் உத்தியோகபூர்வ இராணுவம், இதிலே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். மற்றது மக்கள் விடுதலைப் படை என்று அழைக்கப்படுகின்ற மாவோயியவாத போராளிகளின் படை.

2006ஆம் ஆண்டிலே சமாதான ஒப்பந்தம் வருவதற்கு முன்பாக பத்து ஆண்டுகாலம் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மாவோயியவாதிகள்.

தற்போது மாவோயியவாதிகள்தான் நேபாளத்தில் ஆட்சியில் இருக்கும் நிலையில், அவர்களது படையினர் நாடெங்கிலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ஆயுதங்களை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

இந்தப் போராளிகளை என்ன செய்வது? இவர்களை நாட்டின் தேசியப் படையில் சேர்க்க முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது.

இவ்விவகாரம் குறித்து அலசும் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

Source   thanks  :   bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.