‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (14.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

முல்லைத்தீவிலிருந்து சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இனிமேல் நேரடியாக் புல்மோட்டை மற்றும் பதவியாவில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லப்படுவர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் .

இந்திய மருத்துவர்களைக் கொண்ட தள வைத்தியசாலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதையடுத்து திருமலை ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவின் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை மற்றும் பதவியா வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைத்து வருவதற்கு 2 – 3 மணித்தியாலங்கள் போதுமானது. இதன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது வரை 9 தொகுதிகளாக கடல்வழியாக அழைத்து வரப்பட்ட 3195 நோயாளர்களில் 1512 பேர் தமது சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலை – 732 பேர், பொலன்னறுவை வைத்தியசாலை – 171 பேர், கந்தளாய் வைத்தியசாலை – 160 பேர், தம்பலகாமம் வைத்தியசாலை – 75 பேர், கொழும்பு மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை – 93 பேர் என வெளியிடங்களிலும் 1231 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏனைய 425 பேர் தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 24 பிரசவங்கள் இது வரை இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் யுத்தநிறுத்தம் அவசியம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தலையும் பிரச்சினைக்குத் தீர்வு அதிகாரப்பரவலே என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் உணர்ந்து அதனை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம் என்பது புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது மாத்திரம் அல்ல. யுத்தத்தை ஆரம்பித்த அரசாங்கமே ஆயுத நடவடிக்கைகளை முதலில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார். யுத்தத்தை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றமை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே விக்ரமபாகு கருணாரட்ண இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மறைமுகமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கமே சிறந்தது என்றும் அதுவே தீர்வு என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றது. இது இந்தியாவின் போலித் தனத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வருகின்ற அதிகாரப் பரவலானது இங்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை . இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதுவுமே நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப்பரவலே தீர்வு என்று கூறுகின்ற இந்தியா, வடக்கில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உண்மையான விடயம்.

இருப்பினும், இன்றைய நிலையில் அதிகாரப்பரவலை கோரியிருக்கின்ற இந்திய மத்திய அரசு, ஆயுத வழங்கலை நிறுத்திக்கொள்வதே அத்தியாவசியமானது. ஏனெனில், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் போர் முதலில் நிறுத்தப்பட வேண்டும். மறுபுரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இங்கு யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரியிருக்கின்றமை வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் கோரிய மேற்படி ஒன்றியமானது புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது. இந்த நாட்டின் குடிமக்கள் அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வற்புறுத்தலையும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் உடனடியாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற தன்மையையே உணர்வதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு மஹிந்த அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் அளித்து செயற்படுகின்றதென்பதனை அடிப்படையாகக் கொண்டு புலிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படை பலத்தையும், இலங்கை இராணுவத்தின் படை பலத்தையும் ஒப்பு நோக்குவது சிரமமான காரியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட வரலாற்றையுடைய கெரில்லா போராட்ட இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது கெரில்லா யுத்த தந்திரோபாயங்களை முற்றாக இழந்து விடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வலுவான மனோ நிலையிலேயே இன்னமும் காணப்படுவதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் அரசாங்கத்தினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கைக்கு இது பாரதூரமான தடையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.
சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மகிந்த ராஜபக்சவுக்கும் ஹிலறி கிளிண்டனுக்கும் இடையிலான இந்தத் தொலைபேசி உரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்ட ஹிலறி, போர் நடைபெறும் பகுதிக்கும் , இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் என்பனவற்றுக்கு மட்டுமன்றி இடம்பெயர்ந்தவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தும் நிலையங்களுக்கும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் சென்று வருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.
அனைத்து சமூகங்களினதும் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதன் மூலமாகவே நிரந்தரமானதும், இறுதியானதுமான தீர்வு ஒன்றைக் காணக்கூடியதாக இருக்கும் என அமெரிக்கா நம்புவதாகவும் ஹிலறி கிளிண்டன் இந்தத் தொலைபேசி உரையாடலின் போது குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளையில் இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பாக சிறிலங்காவின் இணையத்தளங்கள் சிலவற்றில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய பிரிவு அதிகாரியான டியானி கெலி தெரிவித்திருக்கின்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் இருந்து நேற்று வெள்கிக்கிழமை கலாநிதி நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றது. பொதுமக்கள் தங்கியுள்ள இதர இடங்கள் மீதும் குண்டுகளை வீசி வருகின்றது.
அப்பாவி தமிழர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும் , தப்பிச்செல்ல முயற்சிப்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர்கள் சிறுவர்களை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய செயல்கள், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானவை . இவை போர் குற்றங்களாகவும் கருதப்படும்.
இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 800 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.
7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்தவர்கள் ஆவர். நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இவ்வளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
இதே ரீதியில் போர் நீடித்தால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை பேரழிவு நிலைக்கு சென்று விடும் என்று அஞ்சுகின்றோம். உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடும் , மனிதாபிமான சூழ்நிலையை மேலும் சீர்குலைத்து விடும்.
எனவே, அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக, சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் இதர சுயாதீன அமைப்புக்களும் நிலைமையை துல்லியமாக கண்டறிய சிறிலங்கா அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்தம் முடிவடைந்து வடக்கின் வசந்தம் அமுல்படுத்தப்படும் போது குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறிய சிங்களவர்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கில் நீண்டகாலத்திற்கு முன்னர் வசித்து வந்த சிங்களவர்கள் குழாமொன்று இந்த விடயத்தை சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் உள்ளி;ட்ட வடக்கின் பல பிரதேசங்களிலும் தமிழர்களை மீள் குடியமர்த்தும் போது சிங்கள முஸ்லிம் மக்களையும் மீள் குடியமர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்கள் வாழ்ந்து வந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தினால் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் வகையில் போர் நிறுத்தம் அமுல் செய்யப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்திருந்தது .
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பின ரோபர்ட் ஏவன்ஸின் அழுத்தமே இந்த போர் நிறுத்த கோரிக்கைக்கு காரணம் எனத் தெரியவருகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக இந்திய வைத்தியர்கள் குழு இலங்கை வந்துள்ளமைக்கு இலங்கை அரச வைத்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் .
இலங்கை வைத்திய கவுன்ஸிலில் பதியப்படாத வைத்தியர்கள் இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது இலங்கை வைத்திய சட்டத்தை மீறும் செயலாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் .
கொழும்பில் இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜிசாந்த தகாநாயக்கவே இதைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இலங்கை, வைத்தியத்துறையில் இந்தியாவை விடவும் உயர்ந்த நிலையில் உள்ளது. இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் வன்னி அகதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய வைத்தியர்கள் குழு இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வைத்திய கவுன்ஸிலில் பதியப்படாத வைத்தியர்கள் இலங்கை மக்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது. அப்படிச் செய்தால் அது வைத்திய சட்டத்தை மீறுவதாக அமையும்.
இந்தியாவோ அல்லது பிற நாடுகளோ விரும்பினால் இலங்கைக்கு மருந்துப் பொருள்களை வழங்கலாம் ஆனால் சிகிச்சையளிக்க முடியாது.
அதேவேளை, அந்த வைத்தியர்கள் எந்தளவுக்குத் திறமைசாலிகள் என்று எமக்குத் தெரியாது. அவர்களின் திறமையை எமது அரசு சோதித்துப் பார்க்கவில்லை.
இடம்பெயர்ந்தவர்கள் வவுனியாவில் ; இந்திய வைத்தியர்கள் புல்மோட்டையில் ஏன்?
இந்திய அரசுதான் அவர்களைத் தெரிவுசெய்து அனுப்பியுள்ளது. எமது அரசு அவர்களைக் கண்மூடித்தனமாக வரவேற்று எமது நாட்டு மக்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதித்துள்ளது.
இடம்பெயர்ந்து வரும் வன்னி மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கே இந்த வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் புல்மோட்டையில் முகாமிட்டுள்ளனர்.
புல்மோட்டை இல்மனைட் கனியவளத்திற்குப் பெயர்போனது. அதனால், இந்த வைத்தியர்கள் புல்மோட்டையில் முகாமிட்டிருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் தங்கியிருக்கும்போது ஏன் இந்த வைத்தியர்குழு புல்மோட்டையில் தங்கியிருக்கின்றது?
இந்த வைத்தியர்கள் எமது நாட்டுக்கு வருவதன் மூலம் எமக்குப் பாதகமே ஏற்படும் என்று கூறி அந்தப் பாதகத்தைத் தெளிவாக விளக்கி சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கின்றோம்.
ஆனால், சுகாதார அமைச்சர் இதையெல்லாம் கணக்கில் எடுக்கமாட்டார். அவர் நினைத்ததைத்தான் செய்வார். இதனால், அவருடன் பேசிப்பயனில்லை என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார், வவுனியா மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணி வெடி களை அகற்றுவதற்கான உடன்படிக்கை ஒன்றை ஜப்பானுடன் இலங்கை அரசு கைச் சாத்திட்டுள்ளது.

ஜப்பான் தூதரகத்தில் காலை நடை பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் தூதரகப் பொறுப்பதிகாரியான ஷிமேக்ஷி கண்ணி வெடிகளை அகற்றும் சுவிற்ஸர்லாந்து அமைப் பின் பிரதிநிதி மார்க்வெனே ஆகியோர் கலந்துகொண்டனர்.

உடன்படிக்கையின் பிரகாரம் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் இலங்கைக்கு 80 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க இணங்கியுள்ளது.
கண்ணி வெடிகளை அகற்றி இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதே இதன் பிரதான நோக்கம் என்று இலங்கை அரசாங் கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார் தாழ்வுபாட்டு பகுதியில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் 5-09-2007 அன்று மன்னார் தாழ்வுபாட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன இனந்தெரியாதோரால் திருடப்பட்டிருந்தன .

கொள்ளை தொடர்பாக மன்னார் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சிறு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள் பதுக்கி வைத்திருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். அதேவேளைஇ சந்தேக நபரில் ஒருவரின் வங்கியில் இருந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணத்தையும் சிறு குற்றத்தடுப்புப் பிரிவினர் மீட்டெடுத்தனர். நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல்துறையினர் பணத்தைக் கொடுக்கவில்லை.

மேலும் மன்னார் காவல்துறை நிலையத்தின் சிறு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு சார்ஜன் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் இருவர் ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர். இது தொடர்பான தேடுதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 04 பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் நீதி மன்றத்தில் ஆஜராகி இருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் இன்று 13ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதி மன்றத்தில் 04 பொலிஸ் அதிகாரிகளும் அடையாள அணிவகுப்புக்காகக் கொண்டு வரப்பட்டனர். 04 காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். குறிப்பிட்ட காவல்துறை சந்தேக நபரிடம் மக்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து போது கடமையில் இருந்த 02 மக்கள் வங்கி அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார் வங்காலைப் பகுதியில் மதவழிபாடு தொடர்பாக இருதரப்புக்கிடையே எழுந்த பிரச்சினையில் பொலிஸார் தலையிட்டதால் அது பெரும் பதற்றத்தை தோற்றுவித்தது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;
வங்காலை 6ஆம் வட்டாரத்திலுள்ள சபை ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ஜெப வழிபாடொன்று நடைபெற்றுள்ளது.
அவ்வேளையில் அங்கு திரண்ட கிராம மக்கள் அந்தச் சபைக் கட்டிடம் மீது பலத்த கல் வீச்சுத் தாக்குதலை நடத்தவே வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோர் அருகிலுள்ள பொலிஸ் காவல் நிலையத்துக்கு தப்பியோடியுள்ளனர்.
அந்தச் சபையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும் கிராமத்தவர்கள் அடித்து நொருக்கவே அது பற்றி அந்தச் சபையைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர் .
இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் கிராமத்தவர்களுடன் கடுமையாக நடந்துகொள்ள முற்படவே அவர்கள் மீது கிராமத்தவர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்த, அவ்விடத்திற்கு வந்த பெருமளவு பொலிஸார் கிராமத்தவர்களை மிகக் கடுமையாகத் தாக்கவே பெரும் களேபரம் ஏற்பட்டது.
இதையடுத்து கிராமவாசி ஒருவரைக் கைது செய்த பொலிஸார் அவரை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவே மக்களும் பெருமளவில் திரண்டு சென்று பொலிஸாருடன் பலத்த வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். எனினும் ஊர்பெரியவர்களின் தலையீட்டால் மக்கள் கலைந்து சென்றனர். இந்தநிலையில் நேற்றுக் காலை வங்காலைக்குச் சென்ற பொலிஸார் பொதுமக்கள் 11 பேரையும் அந்த சபையைச் சேர்ந்த மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 14 பேர் மீதும் வழக்குத் தாக்கல் செய்து மாவட்ட நீதிமன்றில் நீதிபதி .யூட்சன் முன்னிலையில் நிறுத்தினர் .
இவ்வேளையில் நீதிமன்ற வளாகத்தினுள் வங்காலை மக்கள் அனைவரும் கூடினர். வங்காலை கடற்றொழிலாளர்கள் நேற்று தொழிலுக்கு செல்லவில்லை. அரச ஊழியர்களும் அலுவலகங்களுக்கு செல்லவில்லை. விசாரணைகளை நடத்திய நீதிபதி இரு தரப்பையும் கடுமையாக எச்சரித்ததுடன் கைது செய்யப்பட்ட 14 பேரையும் தலா 25,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புத்தல கதிர்காமம் வீதியில் யால தேசிய வனத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
யால தேசிய வனத்தில் தேடுதல் நடத்தும் பணியில் ஈடுபட்ட ஊர்காவலர்கள் அங்கு குரங்கு முகத்தை ஒத்த முகமூடிகளை அணிந்த சிலர் நடமாடியதாகவும் இதனையடுத்து முகமூடியணிந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் போது ஊர்காவலர்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் முகமூடியினர் காட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யால தேசிய வனத்திற்குள் ஒன்பது விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் புத்தல பகுதியில் இரு ஊர்காவலர்கள் இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் .
இதனையடுத்து அப்பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்திவருகின்றனர். ஊர்காவல் படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே எனவும் பாதுகாப்பு தரப்பினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்கண்டி வீதி திறப்பதற்கு அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டாலும் அது திறப்பதற்கு இன்னும் சில கால அவகாசம் தேவையென, சிறீலங்காவின் மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வீதி புனரமைப்பு மற்றும் கண்ணிவெடி அகற்றல் போன்ற பணிகள் துரிதமாக நடைபெறுகின்றதாகவும் , ஆனால் இவ் வீதியை திறப்பதற்கு இன்னும் சில காலம் தேவை என அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக யாழ்தேவி தொடரூந்து சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தபட்டுள்ளது .
மேலும் கருத்து தெரிவித்த மகிந்த சமரசிங்க விடுதலைப்புலிகள் பகுதியில் செயலாற்றிய அரச சார்பற்ற நிறுவனங்கள் எவையும் சரியாக பணியாற்றவில்லை எனவும் எவ்வித திட்டங்களையும் சரிவர செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுளார்.
அவை புனரமைப்புப்பணி என பெரும் தொகை பணத்தினை பெற்றுள்ளபோதும் அவற்றினை கொண்டு திட்டங்களை செய்யவில்லை எனவும், இவ் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை விளக்கும் படங்களை வெளியிட்டதே தவிர ஆக்கபூர்வமான செயல்பாடுகள் ஒன்றையும் செய்யவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனை அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கும் அமைச்சின் செயலர் அடங்கிய குழு கண்டறிந்துள்ளதாகவும், வெகுவிரைவில் சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர்ப்பட்டியல் இக்குழுவால் வெளியிடப்படும் எனவும் தெரிவித்த அவர், மற்றய அரச சார்பற்ற நிறுவனங்கள் நாடு கடத்தப்படுமா என தெரிவிக்க மறுத்திருக்கின்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொக்கெயின் என்ற போதைவஸ்தை கடத்திவந்த இந்தியப் பெண் ஒருவரை போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸார் வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
விமானம் மூலம் வந்த இப்பெண்ணின் பயணப் பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது குழந்தைகள் பயன்படுத்தும் சிலபெம்பஸ்ஆடைக்குள் இந்த போதை வஸ்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஒரு கிராம் கொக்கெயின் போதைப்பொருள் 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது . 480 மில்லி கிராம் எடையுள்ள இந்த கொக்கெயினின் பெறுமதி 65 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கொக்கெயின் என்ற இந்தப் போதைப்பொருள் இந்தளவு தொகை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் தடவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
ரொரன்ரோ மத்தியில் New;W காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
New;Wஅதிகாலை 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்
தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள்
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்குங்கள்
“தமிழீழத்தை அங்கீகரியுங்கள்”
போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர். தமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாது விடப்படுமானால் தம்மீது வாகனத்தைச் செலுத்தினாலும் தாம் அங்கிருந்து அகலப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வாகனநெரிசல் அதிகமாகவுள்ள காலை 8 மணியளவில், சுமார் 45 நிமிடங்களிற்கு மேலாக வீதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
தமிழீழ தேசியத்தலைமையை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலையை அங்கீகரித்து இலங்கைத்தீவில் தமிழனத்திற்கு சுய நிர்ணய உரிமையைப் பெற கனேடிய பல்லின சமூகம் தமிழினத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்
தமிழர் தாயகமெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பை இனியும் கனேடிய இளைய சமூகம் பொறுத்திருந்து பார்க்காது என்றும் இளையவர்கள் கோபாவேசமாகத் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி 30 நிமிடங்களிற்குப் பின்ன அவ்விடத்திற்கு வந்த காவற்றுறையினர் வீதிப் போக்குவரத்தினை சீர்படுத்துவதற்காக கலகம் அடக்கும் காவற்றுறையினரின் உதவியையும் நாடினர். ஆயினும் தொடர்ந்து தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட கனடிய தமிழ் இளைய சமூகம் காவற்றுறையினருடன் தமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தொடர்பாக உரையாடினர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இளையவர்கள்,
‘எமது உறவுகள் நித்தம் அழிக்கப்பட்டு இன அழிப்பினை சிறீலங்கா அரசு முன்னெடுத்து வருவது தொடர்பாக எமது கனடிய அரசிற்கு நாம் அமைதி வழியில் எடுத்துரைத்தோம். அதனைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு வேண்டினோம். எதுவும் பயனளிக்கவில்லை. அந்நிலையிலேயே நாம் இப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். இன்று நாம் இவ் வீதி மறியலில் ஈடுபடுவதற்கா முழுக் காரணமும் கனடிய அரசினையே சாரும்’ என்றனர்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில்,
எமது இத்தகைய ஆர்ப்பாட்டத்தினால் பலரும் தங்கள் பணிக்குச் செல்வதற்கு இடையூறு ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆயினும் எம் கண்முன்னே ஓர் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பணி அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் எம்மினம் அழிக்கப்படும் போது, அதனைக் காப்பதற்காக நாம்தான் போராட வேண்டும் .
அத்துடன் இந் நாட்டின் மக்களின் வரிப்பணம் இலங்கைக்கு உதவி என்ற பெயரிலே அள்ளிக் கொடுக்கப்படுகிறது. அந் நிதியுதவிகள் அனைத்தும் எம் இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்காக சிறீலங்கா அரசால் பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பணம் எவ்வாறு இனப்படுகொலைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக நாம் இந் நாட்டு மக்களிற்கு இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.
ஆகையால், இதன் மூலம் மக்களிற்கு தாங்களும் இவ் இனப்படுகொலைக்குக் காரணகர்த்தாக்கள் . தாங்களும் இதற்கெதிராகக் குரல்கொடுக்கவேண்டும் என்ன உண்மை எம்மால் புரியவைக்கமுடியும் என்றனர் .
ரொரன்ரொ மத்தியில் ஏற்பட்ட வீதி நெரிசலால் பல்லின ஊடகங்களின் கவனத்தையும் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடியத் தமிழ் சமூகத்தில் இவ்வாறான சாலைமறியல் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானது , இவை தவிர்க்கபட்ட வேண்டும் என்ற எண்ணவோட்டத்தினால் இவ்விளையோரின் முயற்சிக்கு அவர்களது ஆதரவு குறைவாக இருந்தது கவனிக்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் 16ம் திகதி திங்கட்கிழமை கனடிய மாணவர் சமூகமும், அனைத்துத் தமிழ் சமூக அமைப்புக்களும் இணைந்து பாரிய மனிதச் சங்கிலி நிகழ்வொன்றினை ரொரன்ரோ மாநகரின் மத்தியில் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ்மக்களின் ஏகோபித்த முழக்கமான உரிமைப்போரிற்கு , மிதியுந்துகளில் செல்வதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஈழத்தில் படுகொலைகளால் மக்களின் அவலச்சாவு தடுப்பாரின்றித் தொடர்கின்றது. இந்நிலையினையும் மீறி இன்று பட்டினி மற்றும் மருந்தின்மையால் மக்கள் சாவைத் தினம் தினம் சந்திக்கும் இக்கட்டான காலவிழிம்பில் நிற்கின்றனர்.
பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள தமிழர் வர்த்தக மையப்பகுதியான லாச்சப்பல் பகுதியில் இருந்து, பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் சனிக்கிழமை காலை (14.03.2009) 08 மணிக்கு மிதியுந்துப்பயணத்தை ஆரம்பிக்கின்றனர். பின்னர் பெல்ஜியம் புருசல்ஸ் நகர்வரை மிதியுந்துகளில் சென்று உரிமைப்போரில் கலந்து கொள்வார்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உலகளாவியரீதியில் தமிழக மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப்போராட்டத்திற்கு , பிரான்ஸ் தமிழ் மக்களும் ஆதரவு வழங்கி உண்ணாவிரதத்தை உணர்வுடன் முன்னெடுத்திருந்தனர் . வெள்ளிக்கிழமை ( 13.03.2009 ) காலை 09 மணிமுதல் மாலை06 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
பிரான்சில் தமிழர் வர்த்தகமையப்பகுதியான லாச்சப்பல் பகுதிக்கு அருகாமையிலுள்ள யூறஸ் பகுதியில் பிரான்ஸ் தமிழ்வர்த்தகர் சங்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்போராட்டத்தில் பெருமளவிலான தமிழர்கள் உணர்வுடன் பங்கேற்றிருந்தனர்.
அமைதிஅடையாள உண்ணாவிரதப்போராட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் தமிழர் பிரதிநிதிகள் வர்த்தகசங்க உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர்.
இறுதியாக உரையாற்றிய வர்த்தக சங்க பிரதிநிதிகள் தமிழீழம் மலரும் நாள்வரை அனைவரும் சிறிலங்காவின் வர்த்தகப் பொருட்களைப்புறக்கணிப்போம். தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை சோர்வின்றி நாம் அனைவரும் உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

india
!!!!!!!!!!!
சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வளாகத்தில் வழ‌க்க‌றிஞ‌ர்கள்காவ‌ல‌ர்களு‌க்கு இடையே மோதல் தொடர்பாக காவல‌ர்க‌ள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு 20ஆ‌ம் தேதிக்குள் பதில் தருமாறு த‌மிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலு‌ம் அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் காவ‌ல‌ர்களை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்ய உத்தரவிட முடியாது என்று கூறி வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ளி‌ன் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

உயர் நீதிமன்ற மோதல் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அம‌ர்வு விசாரித்து வந்தது. நீதிபதி முகோபாத்யாயா விடுமுறையில் உள்ளதால் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், காவல‌ர்க‌ள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழ‌க்க‌றிஞ‌ர்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு நே‌ற்று விசாரணைக்கு வந்தது.

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சார்பில் மூத்த வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி , டி.வி.ராமானுஜம், அசோக் குமார், வழ‌‌க்க‌றிஞ‌ர் என்.ஜி.ஆர்.பிரசாத் , வைகை, வி.ராகவாச்சாரியார் ஆகியோர் ஆஜராகி, ‘தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வழ‌க்க‌றிஞ‌ர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு ரூ.2 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவ‌‌ல்துறை அதிகாரிகளை உடனேத‌ற்கா‌லிக ப‌‌ணிநீ‌க்க‌ம் செய்யவேண்டும். உடனே , இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதாடினர்.

சிபிஐ வழ‌க்‌க‌றிஞ‌ர் சந்திரசேகர் ஆஜராகி, ‘காவல‌ர்க‌ள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி கோகலே பிறப்பித்த உத்தரவு: அரசு தரப்பு வாதத்தை கேட்காமல், மனுதாரர் வாதத்தை மட்டும் கேட்டு காவ‌ல்துறை அதிகாரிகளை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்ய உத்தரவிட முடியாது.

நஷ்ட ஈடு வழங்க, தமிழக அரசு 25 லட்சம் ரூபாயைநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் டெபாசிட் செய்துள்ளது. 250 பேர் நஷ்டஈடு கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதன் மீது பரிசீலனை நடந்து வருகிறது. இந்த வழக்கில் 20ஆம் தேதி அன்றோ, அதற்கு முன்போ அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.

முகோபாத்யா தலைமையிலான அம‌ர்வு, ஏற்கனவே உள்ள வழக்குடன் இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும்.
தமிழக அரசும், மத்திய அரசும் ஒரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். அரசு பதிலுக்கு 25ஆம் தேதிக்குள் வழ‌க்க‌றிஞ‌ர்கள் சங்கங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக காவ‌ல் நிலையத்தில் உள்ள ஆவணங்களைநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நாளை அரசு பிளீடர் தாக்கல் செய்ய வேண்டும் .

சம்பவத்தன்று, காவ‌ல்துறை அதிகாரிகள் எந்தெந்த தொலைபேச‌ி எ‌ண்களை தொடர்பு கொண்டு பேசினார்கள் என்ற விவரங்களையும் 19ஆம் தேதி அரசு பிளீடர் தாக்கல் செய்ய வேண்டும் எ‌ன்று நீதிபதி உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இந்த உத்தரவை கேட்ட வழ‌க்க‌றிஞ‌ர்கள் , நீதிபதிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். தலைமை நீதிபதி தனது ஆசனத்தில் இருந்து எழுந்து கோஷம் போட்டவர்களை கோபத்துடன் பார்த்தார். உடனே சிறிது நேரம் அமைதி நிலவியது . மீண்டும் வெட்க கேடு, வெட்க கேடு என்று வழ‌க்க‌றிஞ‌ர்கள் கோஷமிட்டனர்
!!!!!!!!!!!!!
வேலூரில்நீ‌திம‌ன்ற‌ வளாக‌த்‌தி‌ல் தி.மு. வழக்கறிஞர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கும் இடையே பய‌ங்கர மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் நீதிமன்ற‌ம் மு‌ன்பு பெரு‌ம் பரபரப்பு ஏற்பட்டது.

செ‌ன்னை‌யி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்மீது தா‌க்குத‌ல் நட‌த்த காரணமாக இரு‌ந்த காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள்மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வேலூ‌ரி‌ல் தி.மு. வழக்கறிஞர்கள் நீ‌திம‌ன்ற‌த்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்களும் உடன் சென்றனர் . அ‌ப்போது அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தி போகக் கூடாது என்று கூறின‌ர்.

இதனா‌‌ல் இரு தரப்பினரிடையே கடு‌ம் வாக்குவாதம் ஏற்பட்டது . ‌பி‌ன்ன‌ர் இது மோதலாக வெடித்தது. இதனால்நீ‌திம‌ன்ற வளாகத்தில் பத‌ற்றமு‌ம், பரபர‌ப்பு‌ம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு‌க்கு நிறுத்தப்பட்டனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இர‌ண்டு தர‌ப்‌பினரு‌ம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைராசனிடம் புகா‌ர் கொடு‌த்தன‌ர்.
!!!!!!!!!!!!!

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது என்பதை திருமாவளவன் முடிவு செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகாரமளித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் குழு இன்று சென்னையில் கூடி மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது.

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து திருமாவளவன் மீண்டும் போட்டியிட அனுமதி வழங்கிய தேர்தல் குழு, எந்தக் கட்சியோடு அல்லது கூட்டணியோடு தேர்தலை சந்திப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது.

தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 26 பேர் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக் கோரி வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.தி.மு. தேர்தல் பணிக்குழு செயலர் டி.கே.சு‌ப்ரம‌ணிய‌ம் அ‌க்கட்சியிலிருந்து வில‌கியு‌ள்ளா‌ர்.

.தி.மு..விடம் கட்சியை வைகோ அடகு வைத்துவிட்டதா‌ல் அ‌க்கட்சியிலிருந்து விலகு‌கிறே‌ன் எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலும், வரும் 20ஆ‌ம் தேதி முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி முன்னிலையில் தி.மு ..வில் இணையவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வரதட்சணை கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில்பிற‌‌ந்து 4 நா‌ட்க‌ளே ஆன பெண் குழந்தையை த‌ந்தையே கிணற்றில் வீசி கொலை செ‌ய்து‌ள்ளா‌ர். இ‌ந்த கொடூரமாகநிக‌ழ்வு செ‌ன்னை‌யி‌ல்தா‌ன் நட‌ந்து‌ள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!
தே‌ர்த‌லி‌ல் பண‌ப்புழ‌க்க‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த கடுமையான நடவடி‌க்கைக‌ள் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று இ‌ந்‌திய‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தே‌ர்த‌ல் ஏ‌ற்பாடுக‌ள் கு‌றி‌த்து ஆ‌ந்‌திரா‌வி‌ல் நே‌ற்று நா‌ள் முழுவது‌ம் நட‌ந்த ஆலோசனை‌க்கு‌ப்பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த தலைமை‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌ர் எ‌ன்.கோபாலசா‌மி, வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் பெரு‌ம் அள‌வி‌ல் தே‌ர்த‌ல் ப‌ணிக‌ளி‌ல் ஈடுபடு‌த்த‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், அவ‌ர்க‌ள் வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன் கண‌க்கு வழ‌க்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், வா‌க்காள‌ர்களு‌க்குவி‌னியோ‌கி‌க்க‌ப்படு‌‌ம் பண‌த்தையு‌ம் க‌ண்கா‌ணி‌ப்பர் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முடி‌ந்த இட‌ங்க‌ளி‌ல் ஒ‌ட்டுமொ‌த்த‌த் தே‌ர்த‌ல் நடவடி‌க்கைகளு‌ம் ஒ‌ளி‌ப்பட‌ம் எடு‌க்க‌ப்படு‌ம். ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் டி‌ஜி‌ட்ட‌ல் புகை‌ப்பட‌ங்க‌ள் எடு‌க்க‌ப்படு‌ம். தே‌ர்த‌ல் ப‌ற்‌றிய புகா‌ர்களை‌ப் ப‌திவு செ‌ய்கை‌யி‌ல் , ஒ‌ளி‌ப்பட‌ம் அ‌ல்லது புகை‌ப்பட‌ம் இணை‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும், வரும் 16ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 19 ஆம் தேதி வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஷ்ரீகிருஷ்ணா, தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ. போலீசார், சம்பந்தப்பட்ட தமிழக காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் , தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படத்தொடங்கும் என்றும், வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகாவிட்டால், தகுதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
úULôXV úTWûY«p Sm©dûL YôdùLÓl× Uôof 17-p SPdL Es[ ¨ûX«p, úTWûYj ÕûQj RûXYo NuúTôo `ýpXôn UôVUô]ôo.
AûUfNo Tôp #eúPô, #ªNu NeUô, CvUô«p UWôd Gu\ 2 ÑúVfûNLs AWÑdÏ A°jÕYkR BRWûY ®Xd¡d ùLôsYRôL A±®jRûRVÓjÕ Uô¨X AWÑ ùTÚmTôuûUûV CZkRÕ.
CûRVÓjÕ, Sm©dûL YôdÏ úLôÚUôß ØRpYo ùPôeÏTôo WôndÏ BÞSo EjRW®hPôo.
Ck¨ûX«p UûX Uô¨X UdLs _]SôVLd Lh£ GmGpH NuúTôo `ýpXôn UôVUô]Õ TWTWlûT A§LUôd¡Ùs[Õ.
ANôªp `ýpXôn: UôVUô] `ýpXôn ANôªp CÚlTRôL AkR Uô¨X Lôe¡Wv ùNn§j ùRôPoTô[Úm, AûUfNÚUô] úaUkR ©vY NoUô ùR¬®jRôo.
úULôXVj§p Lôe¡Wv AWûN HtTÓjR Rôm ØVt£ úUtùLôiÓs[RôLÜm AYo á±]ôo.
NeUô Sm©dûL: Sm©dûL YôdùLÓl©p RUÕ Lh£ ùYt± ùTßm G] BÞm áhP¦«u Ød¡V Lh£Vô] úR£VYôR Lôe¡Wv RûXYo ©.H.NeUô á±]ôo

world
!!!!!!!!!!!!!!
பொருளாதாரப் பின்னடைவில் சிக்கியுள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்பைக் கொண்ட அமெரிக்கா தனது நிதிஅரசியல் அமைப்பை மறுசீரமைக்க ( முன்வர வேண்டும் என்று சோவியத்தின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கார்பசேவ் கூறியுள்ளார்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்தும் வெளியாகும் இங்கிலாந்து நாட்டு நாளிதழான தி ஈவினிங் ஸ்டேன்டர்ட் the evening standard( இதனை தற்பொழுது ரஷ்ய நாட்டு கோடீசுவரரான அலெக்சாண்டர் லிபடேவ் வாங்கியுள்ளார்) நாளிதழின் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

அப்பொழுது அமெரிக்காவிலும், ரஷ்ய உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு குறித்துப் பேசிய கார்பசேவ், ஒரு புதிய முதலாளித்துவ முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

“சோசலிச அமைப்பிலும் , இதுவரை இருந்துவந்த முதலாளித்துவ அமைப்பிலும் உள்ள சிறந்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு அவைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய முதலாளித்துவ முறையை உருவாக்க வேண்டும். சோசலிசத்திலிருந்து சமூக நீதியையும், சமத்துவத்தையும், அதே போல ஊக்கமளித்திடும் முதலாளித்துவ வழியையும் ஏற்றுக் கொண்டு அந்த புதிய முறையை உருவாக்க வேண்டும்என்று கார்பசேவ் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டுமல்ல, தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்படாத நாடுகள் என்று எதுவும் இல்லை. இந்தச் சூழலில் ஒரு புதிய நிதிஅரசியல் அமைப்பை உருவாக்கும் மறுசீரமைப்பை ) அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று கார்பசேவ் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தான் நாட்டில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி ரத்து செய்யப்படும் என்றும் , பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில், முன்னாள் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது, பஞ்சாப் மாகாணத்தில் கவர்னர் ஆட்சியை விலக்கிக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
அந்நாட்டு பாராளுமன்றத்தை வரும் 16ஆம் தேதி முற்றுகையிடுவதற்காக இஸ்லாமாபாத்தை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாகாணத்தில் கவர்னர் ஆட்சி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சர்தாரியை அமெரிக்கா வலியுறுத்தியது. இதனையடுத்து, அதிபர் சர்தாரி உடனடியாக முடிவு எடுக்கவேண்டும் என்று, பிரதமர் கிலானி 24 மணி நேர கெடு விதித்தார்.
இதனையடுத்து, பஞ்சாப் மாகாணத்தில் ஆளுநர் ஆட்சியை ரத்து செய்வதற்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளை உடனடியாக பதவியில் அமர்த்துவதற்கும் சர்தாரி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் திடீரென்று ராஜினாமா செய்துள்ளது, ஆளுங்கட்சிக்கு சற்று நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சவூதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டு தலைவர்களோடு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசி மூலம் பேச்சு நடத்தி உள்ளார். ஜி-20 என்று கூறப்படும் முன்னணி பொருளாதார நாடுகள் குழுவில் இவை இடம் பெற்றுள்ளன. .

இந்நிலையில் இன்று காலை அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

உலகை உலுக்கும் பொருளாதார நெருக்கடி குறித்தும் இவற்றை சமாளிப்பதற்கான வழிகள் குறித்தும் ஒபாமா இந்நாட்டு தலைவர்களோடு ஆலோசனை நடத்தினார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று ஒபாமா அப்போது வலியுறுத்தினார்.

!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவில் உள்ள சீன முதலீடுகளின் பாதுகாப்பு குறித்து சீனப் பிரதமர் வென் ஜியாபாஒ கவலை வெளியிட்டுள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முதலீடுகளின் பெறுமதி குறைந்துபோகாமல் இருக்கும் வகையில் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பை அமெரிக்கா ஏற்பதை அது உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
அமெரிக்க திறைசேரி கடன் பத்திரங்களிலும், ஏனைய பல அமெரிக்க அரசாங்க சொத்துகளிலும் சீனா லட்சம் கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் நிதிக் கையிருப்பில் சீன முதலீடுகள் கணிசமான பங்கை வகிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!
சர்வதேச வரி ஏய்ப்பு தொடர்பிலான புலன் விசாரணைகளுக்கு சுவிஸ் நிதி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், தமது வங்கித்துறை வாடிக்கையாளர்களுடைய இரகசியங்களைப் பேணுவது தொடர்பான விதிகளைத் தளர்த்தப்போவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் சிறப்பான நிர்வாகத்திற்கு வழி செய்யும் என்று ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.
வரி ஏய்ப்புகள் தொடர்பிலான தகவல்களை பெற ஆர்வமாக இருக்கும், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகள் இது தொடர்பில் சுவிட்சர்லாந்து மீது அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சர்வதேச அழுத்தங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் தலைசாய்ப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். ஆனால் சேமிப்பாளர்களை நன்கு கவரும் வகையிலேயே சுவிட்சர்லாந்து வங்கிகள் தொடர்ந்து செயல்படுமென்று சுவிஸ் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!

ஜேம்ஸ் பாண்டு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இந்திய நடிகை பிரிடா பின்டோவுக்கு கிடைக்க உள்ளது. ஜேம்ஸ் பாண்டு படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போலவே அந்த படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் எனும் கேள்வியில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். .

ஜேம்ஸ் பாண்டு படத்தில் நாயகியாக நடிப்பது மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது . பாண்டுக்கு ஜோடியாக நடித்தவர்கள் பெரும் புகழ் பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டு படத்தில் நாயகன் டேனியல் கிரேகிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இந்திய நடிகை பிரிடா பின்டோவுக்கு கிடைக்க உள்ளது.

மும்பையில் பிறந்து வளர்ந்த பிரிடா ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தை லத்திகா பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இவரை ஜேம்ஸ் பாண்டு புதிய படத்திற்காக அதன் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரிடாவிடம் மேக்கப் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாயல் இயக்க இருப்பதால் பிரிடா நாயகியாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குவாண்டம் ஆப் சோலஸ் படத்தின் போதே பிரிடா நாயகி வேடத்திற்காக பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போது அவர் மிகவும் இளம் வயது கொண்டவராக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.

தற்போது பிரிடா ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகையாக வளர்ந்து வருகிறார். மேலும் பேஷன் அரங்கிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. எனவே அவர் ஜேம்ஸ் பாண்டு படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sports
!!!!!!!!!!!
ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 5 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.36.3 ஓவர்களில் 149 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் ரைடர் 3 விக்கெட்டுகளையும் பிரைய்ன், ஓரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில்2 விக்கெட்டு ,og;gpw;f;F 151 xl;lq;fs; vLj;J 8 tpf;Nfl;lfshy; ntw;wpngw;Ws;sj
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மலேஷியாவில் நடைபெற்ற ஜுனியர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை 12 கோல்கள் அடித்து இந்திய அணி வீழ்த்தியது.

இந்தியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், மலேசியா ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ள 21 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் ஹாக்கி போட்டித் தொடர், மலேசியாவில் நடந்து வருகிறது.

தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவை 3- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, நேற்று Kd; jpdk; தனது 2 ஆவது ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்கொண்டது.

போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் தனிஷ் முஜ்தபா மூலம் இந்தியா கோல் கணக்கை தொடங்கியது . பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கோல் மழை பொழிந்தனர். இறுதியில் 12- 0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
1 euro = 147.38 sl /66.50 in
1us $ = 114.00sl /51.44in
1swiss fr = 95.15sl / 43.38in
1 uk pound =159.52sl /71. 98 in
1 saudi riyal =30.39 sl /13.71in

Leave a Reply

Your email address will not be published.