இலங்கையில் பெரும்பாலான தமிழர்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதாக கேணல் ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற தன்மையையே உணர்வதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு மஹிந்த அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் அளித்து செயற்படுகின்றதென்பதனை அடிப்படையாகக் கொண்டு புலிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படை பலத்தையும், இலங்கை இராணுவத்தின் படை பலத்தையும் ஒப்பு நோக்குவது சிரமமான காரியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட வரலாற்றையுடைய கெரில்லா போராட்ட இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது கெரில்லா யுத்த தந்திரோபாயங்களை முற்றாக இழந்து விடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வலுவான மனோ நிலையிலேயே இன்னமும் காணப்படுவதாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் அரசாங்கத்தினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கைக்கு இது பாரதூரமான தடையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.