ஜப்பான் அரசே! கண்ணை திறந்து பலியாகும் தமிழனை பார்”: பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்

இலங்கையில் தமிழின சுத்திகரிப்பை உடனே தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இப் போராட்டம் கடந்த புதன்கிழமை (11.03.09) பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரை நடைபெற்றது.

குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி தமது வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உணர்வுகளையும், உரிமைகளையும் காட்டியது ஜப்பானிய தூதரக பணியாளர்களை மட்டுமல்லாமல் வீதியால் சென்ற அனைவரினது நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது என லண்டனில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

“ஜப்பான், ஜப்பான் இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து”

“நிறுத்து நிறுத்து நிதி உதவியை நிறுத்து”

“உதவு உதவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு”

“ஜப்பான் அரசே! கண்ணை திறந்து பலியாகும் தமிழனை பார்”

“UN தடை செய்த கொத்துக்குண்டு தமிழனை கொள்வது தெரியவில்லையா?”

“வேண்டும் வேண்டும் தீர்வு வேண்டும்”

“வேண்டும் வேண்டும் தமிழீழமே வேண்டும்”

“எங்கள் தலைவர் பிரபாகரன்”

போன்ற பதாகைகளை தாங்கியவாறும் முழக்கங்களை எழுப்பியவாறும் மக்கள் நின்றனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தினை பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் மகளிர் அமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.

போராட்டத்தின் நிறைவில் ஐப்பானிய தூதரகத்திடம் மனு கையளிக்கப்பட்டது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.