ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 17-பேர் பலி

அட்லாண்டிக் கடலில் கனடா நாட்டுக்கு அருகே நியூ பவுண்ட் லேண்ட் என்ற தீவு உள்ளது.இங்கு எண்ணை கிணறு தோண்டும் பணி நடந்தது.இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்களை பணி முடிந்ததும் ஹெலிகாப்டரில் அழைத்து சென்றனர்.18-ஊழியர்கள் அதில் இருந்தனர்.

நடுவானில் ஹெலிகாப்டரில் எந்திர கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் விழுந்து மூழ்கியது.அதில் இருந்தவர்களும் ஹெலி காப்டரோடு சேர்ந்து மூழ்கினார்கள்.

உடனே மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.ஒரே ஒருவர் மட்டும் கடலில் மிதந்து கொண்டிருந்தார்.அவரை மீட்டனர்.மற்றொருவர் பிணமாக மிதந்தார்.மற்ற 16-பேரும் ஹெலிகாப்டரோடு மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Source & Thanks : .newlankasri

Leave a Reply

Your email address will not be published.