பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்கா ஏவுகணை வீச்சு:15-தலிபான்கள் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாமிட்டு உள்ளனர்.அவர்கள் மீது அமெரிக்கா அடிக்கடி ஏவுகணை மற்றும் ஆள் இல்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து அமெரிக்கா தாக்குகிறது.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.அங்குள்ள குர்ராம் என்ற இடத்தில் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் முகாம் உள்ளது.அதை குறி வைத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து 2-ஏவுகணைகளை ஏவியது.அது சரியாக இலக்கை தாக்கியது.

இங்கு இருந்த 15-தீவிரவாதிகள் பலியானார்கள்.50-பேர் படுகாயம் அடைந்தனர்.இறந்தவர்களில் 8-பேர் ஆப்கானிஸ்தானையும் 7-பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள்.

இந்த முகாமில் தலிபான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.தலிபான் கமாண்டர் பசல் சயீத் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

Source & Thanks : .newlankasri

Leave a Reply

Your email address will not be published.