புலிகளின் ரசாயான ஆயுத முகமூடி கண்டுபிடிப்பு-ராணுவம்

கொழும்பு: விடுதலைப் புலிகள் மறைவிடத்திலிருந்து ரசாயான ஆயுதங்கள் தொடர்பான விஷ வாயு கசிவிலிருந்து தப்ப உதவும் முகமூடிகளை கண்டுபிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் உடயார்கட்டுக்குளம் பகுதியில் இவற்றை கண்டுபிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பெருமளவிலான முகமூடிகள், வேதிகுண்டுகளின் தாக்கத்திலிருந்து தப்ப உதவும் உடைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாம்.

இவற்றின் மூலம் பெருமளவில் ரசாயான ஆயுதங்களை ராணுவத்தினர் மீது பயன்படுத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுருக்கலாம் எனவும் இலங்கை ராணுவம் சொல்லியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினர் மீது ரசாயன வாயுக்களையும் புலிகள் பயன்படுத்தி வருகின்றனராம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விளைவை அது தரவில்லையாம்.

இதுவரை 16 ரசாயான தடுப்பு உடைகளையும், 17 முகமூடிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக ராணுவம் கூறுகிறது.

இதற்கிடையே, அம்பலவன்பொக்கணை என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.