பாக்தாத்தில் புஷ் மீது ஷூ வீசிய நிருபருக்கு 3 ஆண்டு சிறை

பாக்தாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பாக்தாத் சென்றிருந்தபோது அவர் மீது ஷூ வீசிய நிருபர் முன்டாசர் அல் ஜைதிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புஷ், தனது பதவியின் கடைசிக்காலத்தில் பாக்தாத் சென்றிருந்தார். செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது முன்டாசர் திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி, நாயே இதுதான் ஈராக் மக்கள் உனக்குத் தரும் கடைசி முத்தம் என்று கூறி அடுத்தடுத்து எறிந்தார். அதிர்ஷ்டவசமாக ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் புஷ்.

உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது இந்த சம்பவம். இதற்குப் பிறகு ஜெய்தி கைது செய்யப்பட்டார். ஆனால் அரபு நாடுகளி்ல் அவர் ஹீரோவாகி விட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த ஈராக் கோர்ட், ஜெய்திக்கு தற்போது 3 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

Source & Thanks : hatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.